கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களில் யோகாசனம் செய்யலாம். அதன்
பிறகு குருவின் ஆலோசனைப்படி கர்ப்பிணிகளுக்கு என்று பிரத்யேகமான உள்ள
ஆசனங்களை செய்யலாம். தடாசனம் பக்தகோணாசனம், வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த
சயனாசம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்றவை நல்ல ஆசனங்கள்.
மகாமுத்திரா,
குறிப்பாக, கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது. ஆசனங்கள்
கர்ப்பிணிப் பெண்களின் இரத்த ஒட்டத்தை அதிகரித்து, முதுகெலும்புக்கு இரத்த
ஒட்டத்தை அதிகரிக்கும். தவிர உடலின் கீழ் பாகங்களுக்கு ரத்த ஒட்டம்
அதிகரிக்கும்.
ஜீரண சக்தி அதிகரிக்கும். இடுப்பு
தசைகள், நரம்புகள் வலிமை பெறும். இதனால் குழந்தை பிறப்பு சுலபமாகும்.
ஆசனங்களால் கருவுக்கும் நல்லது. கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்கள் செய்வது
மிகவும் நல்லது.
No comments:
Post a Comment
கருத்துக்கள்