நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Friday, 28 October 2011

என்ன குறை கண்டாய் பெண்ணே ?


கணவன் மனைவி சம்பந்த பட்ட குடும்ப விசயத்தில் ஆண், பெண் என்று  பாகுபடுத்தி பார்ப்பதே தவறு. பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்று குரல் கொடுக்கலாம் தவறில்லை ஆனால் அதற்கான இடம் குடும்பம் அல்ல !!

பொதுவாக இப்படி பெண்ணுரிமை, சம உரிமை  என்று குரல் கொடுத்து கொண்டிருப்பதால் வீட்டிலும், குடும்பத்திலும் அது எதிரொலித்து எல்லா பிரச்சனைக்கும் ஒரு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. குடும்பம்  வேற...மேடை பேச்சு வேற... புரிந்து கொண்ட பெண்களின் இல்லங்களில் குதூகலமும், புரிந்து கொள்ளாமல் கொடி பிடிப்பவர்களின் வீட்டில் குளறுபடிகளும் கும்மி அடிக்கின்றன !!

மனைவி கணவனுக்கு சமம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பலரது வீடுகளிலும் மனைவியின் கை தானே ஓங்கி இருக்கிறது...சில வீடுகளில் மனைவி தனக்கு தேவையான உரிமையை மட்டும்  எடுத்துக்கொள்கிறாள், சில வீடுகளில் வலிந்து பெற்றுக்கொள்கிறாள், பல வீடுகளிலும் முழு உரிமையையும் எடுத்துகொண்டு குடும்பத்தை வழி நடத்துகிறாள்...இதுதான் இன்றைய நிதர்சனம்.ஆண்கள் விட்டுகொடுத்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார்கள், அவர்கள் ஆளுமை செய்த காலம் குடும்பத்தை பொறுத்தவரை மிக குறைந்து விட்டது. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)

அத்தகைய பெண்களில் சிலர் 'தான் சொல்வதே சரி' என்பது போல் நடந்து சிக்கல்களை உருவாக்கி கொண்டே செல்கிறார்கள்.

குடும்பத்தைக் கெடுக்கும் அறிவுரைகள் ?!!
  
மனப்பொருத்தம் என்பது ஏதோ கடையில் வாங்கும் பொருளல்ல...இரு மனமும் பொருந்தியதே திருமணம் என்று பெரியவர்கள் சொல்லி வச்சாங்க. இப்போது திருமணம் ஒருவழியாக பொருந்திவிடுகிறது, ஏனோ இரு மனங்கள்  பொருந்துவதே இல்லை. பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் மனம் பொருந்தவில்லை என்றால் அது நரக வாழ்க்கை. மனம் பொருந்தாமைக்கு கணவன் மனைவி மட்டும் காரணம்  இல்லை,பெண்களை பொறுத்தவரை திருமணத்தின் போதே அவர்களுக்கு ஓதப்படும் தவறான அறிவுரைகள்....!!?

* கணவனை கைக்குள் போட்டுக்கோ
* மாமியார், நாத்தனாரை தூரமா வை.
* கொஞ்ச நாள் போனதும் தனிக்குடித்தனம் போற வழியைப் பாரு. 
* எந்த முடிவும் நீ எடு, அடக்கி வை.

இந்த நான்கில் ஒன்றாவது நிச்சயம் எல்லா குடும்பத்திலும் திருமணத்தின் போது  பெண்ணின் காதில் ஓத படுபவை.....இல்லை என்று யாரும் மறுக்க முடியாது.

இப்படி வலுகட்டாயமாக பதிய வைக்கப்படுபவை, புது பெண்ணின் மனதில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணருவதே இல்லை.
கணவன் நல்லவனாக இருந்தாலும் இந்த எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து விடுவதால், கணவனை ஒரு தவறான கண்ணோட்டத்தில் பெண் அணுக தொடங்குகிறாள். திருமண முடிந்த ஆரம்பத்தில் இது அவ்வளவாக வெளியே வருவதில்லை, போக போக கணவனை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளணும் என்கிற எண்ணம் தலை எடுக்க தொடங்கும்.

இன்றைய பெண்களுக்கு ஆணை விட நாம் எதில் குறைந்தவர்கள் என்ற எண்ணம் அதிகம். ஆனால் இதை குடும்பத்தில் நிலைநாட்ட துடிப்பது சரியன்று. தவிரவும் ஆணுக்கு சமம் என்றால் சம மரியாதை கொடுக்க வேண்டுமே,அதுவும் இல்லை, தனக்கு(ள்) அடங்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்...?!

அது என்ன ஆம்பளைங்க என்றாலே ஏதோ வேற்றுக்கிரக ஜந்து மாதிரி பார்க்கிறது...?!!! திருமணம் முடிந்த நாளில் இருந்து  கணவனை எப்படி எல்லாம் தன் வழிக்கு கொண்டு வரலாம் என்று பிளான் போடுவார்கள் சிலர் !! என்னவோ அதுவரை கணவன் ஒன்றும் தெரியாத முட்டாளாக இருந்தது போலவும், இவங்க புத்தி சொல்லி திருத்துற மாதிரியும்,  இப்படி பண்ணு, அப்படி பண்ணு என்று அட்வைஸ் பண்றதா பார்த்தா......!? பாவம் அப்படிப்பட்ட பெண்ணை திருமணம் முடித்த ஆண். எல்லாவற்றிலும் பெண்ணின் பேச்சை கேட்கணும் என்றால் அந்த கணவனின் தனித்தன்மை என்ன ஆகும்? 

ஒரு சில ஆண்கள் மனைவியின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாதவனாக, அடக்கி ஆளும் மனம் படைத்தவனாக இருக்கலாம், அதற்காக ஒட்டு மொத்த ஆண்களையும் அதே கண்ணோட்டத்தில் அணுகுவது அநியாயம். (ஒரு வேளை கணவன் அடக்கி ஆளும் மனம் கொண்டவனாக இருந்தாலும், மனைவியால் சந்தோசமாக குடும்பம் நடத்த இயலும் அது எவ்வாறு என்று பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்.....!)

என்ன குறை கண்டாய் பெண்ணே ?

ஆண், பெண் யாராக இருந்தாலும் 100 சதவீதம் நிறைகள் உள்ளவர் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது கணவனிடம் மட்டும் நூறு சதவீத நிறைகள் இருக்கணும் என்று எதிர்பார்காதிங்க...! ஒரு பெண்ணிடம் உங்க கணவன் எப்படி என்று கேட்டு பாருங்க, "அய்யோ அவரா, அதையேன் கேட்குறீங்க..... வேலை  விட்டு வந்தாலும்  வீட்ல இருக்கறதே இல்ல, எப்பவும் நண்பர்கள் கூட வெட்டி பேச்சு தான், வீட்ல ஒரு துரும்பை கூட அசைக்கிறது இல்லை...எல்லாம் நான்தான் பார்க்க வேண்டி இருக்கு, இந்த மனுசனை கட்டிட்டு என்ன சுகத்தை கண்டேன்......" இப்படி.....கேட்டவங்க  காது தீப்பிடிக்கிற அளவு போயிட்டே இருக்கு.....இதுவா நல்ல தாம்பத்தியம் ? இல்லவே இல்லை...!

பொதுவா குறைகளை பட்டியல் போடுவதை மனைவிகள் நிறுத்தவேண்டும்.....பதிலுக்கு கணவனும் மனைவியின் குறைகளை பட்டியல் போட தொடங்கிவிட்டால் இதற்கே பொழுது சரியாக இருக்கும், குடும்பம் நடத்த முடியாது. வீட்டில் குறை சொல்வது போதாது என்று உறவினர்கள் ,அக்கம்பக்கமும் சொல்லிவிடுவதால் சின்ன விஷயம் , பெரிய பிரச்னை அளவிற்கு போய்விடும். அடுத்தவர்களுக்கு நம் வீட்டு பிரச்னை ஒரு பொழுது போக்கு வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போய்விடுவார்கள், ஆனால் அதை பெரிதாக எண்ணிக்கொண்டு சில பெண்கள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

ஒரு கணவனிடம் குறை என்றால் உதாரணதிற்கு குடிப்பழக்கம்.....

திருமணதிற்கு முன் ஒரு ஆண் குடிக்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டுமே பொறுப்பாகிறார்/காரணம். ஆனால் திருமணதிற்கு பின் கணவர் குடிக்க தொடங்குகிறார் அல்லது அதிகமாக குடிக்கிறார் என்றால் அதற்கு முழு பொறுப்பு அவரது மனைவி என்பேன்....அது எப்படி அவருக்கு தொழில்/வேலை  நெருக்கடி இருக்கலாம், மன அழுத்தம் காரணமா குடிக்கலாம் அல்லது புதிய நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் இது போன்ற எந்த காரணமாக இருந்தாலும் மனைவியின் அன்பும், அரவணைப்பும், முக்கியமாக புரிதலும் சரியான அளவில் கணவருக்கு கொடுக்கப்பட்டு வந்தால் அங்கே எந்த கெட்டப்பழக்கமும் ஏற்பட வழியே இல்லை. பழக்கம் ஏற்பட்டாலும் அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும். 'என் கணவன் சரியில்லை' என்று குறை சொல்லி புலம்பும் பெண்களுக்கு எனது ஒரே பதில் "தவறுகளின் ஆரம்பம் நீங்கதான்"

சண்டை போடும்போது ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று அவர்களை குறைத்து எடை போட்டுவிடாதீர்கள்...!சகித்துக்கொண்டு  இருக்கிறாங்க அவ்வளவு தான். ஆனால் இந்த சகிப்புத்தன்மையும் ஒரு அளவிற்கு தான்.  அளவை தாண்டும் போது கரையை உடைத்துக்கொண்டு போகும் வெள்ளத்தை போல கடந்து சென்றே விடும்.....அப்புறம் தலை கீழாக  நின்றாலும் உங்க பக்கம் திருப்ப முடியாது. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கணவனிடம் இருக்கும் குறைகளை ஒதுக்கி வைத்து விட்டு இருக்கும் அவரிடம் நிறைகளை கவனத்தில் வையுங்கள். கூடுமானவரை இருக்கும் குறைகளை, நிறைகளாக மாற்ற முயலுங்கள்.....( 'இந்த மனுஷனிடம் நிறையா ? அப்படியெல்லாம் ஒண்ணுகூட இல்ல...!') நல்லா யோசிங்க.....! ஒண்ணு, இரண்டு எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்.....!! நிறைகளை அடிக்கடி சொல்லி உற்சாகப் படுத்துங்கள்.....! 

முக்கியமாக சின்ன சின்ன பாராட்டுகள் ! இதற்காக மேடை போடணும், மைக் வைக்கணும்னு அவசியம் இல்ல...அன்றாட வாழ்வில் கேசுவலாக சொல்லலாம்.....சொல்லித்தான் பாருங்களேன் ........!! 

ஒரு சில டிப்ஸ்.....

கணவரிடம்,

* எந்த பிரச்னைக்கும் டக்குனு தீர்வு சொல்றீங்க, எப்படிப்பா இப்படி...சூப்பர் !

* உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ்,சான்சே இல்ல போங்க அபாரம் !

* நடை கம்பீரமா இருக்குங்க ! நெற்றியில் விழும் முன் முடி செம அசத்தல்பா !

* பேசுறப்ப நடுநடுவே சிரிக்கும் இந்த சிரிப்பு என்னை ரொம்ப ஈர்க்குதுங்க ! நீங்க இல்லாதபோதும் அந்த சிரிப்பு என் காதில் கேட்டுட்டே இருக்குங்க !! (ஒருவேளை லவ் பண்ணி இருந்தால் அப்போ இதை விட ஓவரா சொல்லி இருப்பீங்களே !! இப்பவும் சொல்லுங்க, தப்பு இல்ல...!)

இதே ரீதியில் சொல்லி பாருங்க.....(அப்புறம் ரிசல்ட் என்னனு என்கிட்டே சொல்ல வேண்டாம், ரிசல்ட் எப்படி  இருக்கும் என்று எனக்கு நல்லா தெரியும் !! ) 

இது தாங்க வாழ்க்கை...இப்படி சிம்பிளா, ஜாலியா வாழ்ந்து வாழ்க்கையை முடிக்கிறதை விட்டுட்டு,   எப்பவும் கணவரை குறை சொல்லி அழுது புலம்பி நீங்களும் மன அழுத்தத்தில விழுந்து , அவரையும் வேற ஒண்ணுல விழ வச்சிட்டு, குழந்தைகளை பற்றியும் சுத்தமா மறந்துவிட்டு என்ன வாழ்க்கை வாழ்றீங்க.....!!? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ...!!

வாழ்க்கை வாழ்வதற்கே .... 

Sunday, 16 October 2011

சினிமாவை விட்டு ஓட நினைத்த - அனுஷ்கா



நடிகை அனுஷ்கா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எதிர்பாராமல் அது நடந்தது. அறிமுகமானபோது ரொம்ப கஷ்டப்பட்டேன்.

சினிமாவோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது சினிமாவை முழுமையாக புரிந்துகொண்டேன். இனி சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. வெளியில் செல்லும்போதெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்து நின்று பாராட்டுகிறார்கள். இந்த புகழ் சினிமா மூலம் கிடைத்தது என்று நினைக்கும்போது திரையுலகம்மேல் மரியாதை ஏற்படுகிறது.
நான் இருக்க வேண்டிய இடம் சினிமா என்பதை புரிந்துகொண்டேன். நல்லவேளை சினிமாவை விட்டு ஓடவில்லை. ஓடிப்போய் இருந்தால் சந்தோஷங்களை இழந்துஇருப்பேன். காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு நான் தயங்குவது இல்லை. எந்த கேரக்டர் என்றாலும் ஈடுபாட்டோடு நடித்தால்தான் ஜெயிக்க முடியும். நான் ஈடுபாட்டுடன் நடிப்பதால்தான் முதல் நிலைக்கு வந்து இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, 15 October 2011

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் கதை




              நகரத்தில் எழுத்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற பத்திரிக்கையாளர் ஜெனிலியா.  கிராமத்தில் அப்பாவி இளைஞனாக விஜய். ஜெனிலியாவால்தான் விஜய் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகிறது.


கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறார் விஜய்.  தங்கையின் திருமணம் வரும் போது சிட்பண்டில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுக்க சிட்டிக்கு வருகிறார்.

அங்கே வில்லன் அங்கங்கே பாம் வைத்து கலவரத்தை தூண்டுகிறான்.    இந்த சதிச்செயலை செய்வது யார் என்று கண்டுபிடிப்பதில் திணறுகிறது போலீஸ்.



இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஜெனிலியா,   இந்த சதிக்காரனை கண்டுபிடித்து சாகடிக்க வேலாயுதம் வருவான் என்று துண்டு பிரசுரங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் கட்டுரை மூலம் பரப்புரை செய்கிறார்.


இந்த சமயம் பார்த்து அப்பாவி விஜய் கோயிலில் வந்து அர்ச்சனை செய்யும் போது பெயர் என்ன என்று அய்யர் கேட்க,  வேலாயுதம் என்று அவர் சொல்ல,  அய்யர் உட்பட சாமி கும்பிட வந்தவர்கள் எல்லோரும்,,,,ஆ! வேலாயுதம்...வேலாயுதம்...என்று பிரமிக்கிறார்கள்.

வில்லன் வைத்த பாம் தற்செயலாக வெடிக்க முடியாமல் போகும் போதெல்லாம் அங்கே வேலாயுதம் நிற்கிறார்.   இதனால் வேலாயுதம் பெயரும், முகமும் பிரபலமாகிவிடுகிறது.

கற்பனை பாத்திரம் நிஜமாய் வந்துவிட்டது என்று சந்தோசப்படுகிறார் ஜெனிலியா.  இந்த சந்தோசத்தை விஜய்யை நேரில் சந்தித்தும் பகிர்ந்துகொள்கிறார்.  ஆனால் விஜய் அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஒதுங்குகிறார்.


ஊருக்குப்போகும் முடிவில் பணத்தை எடுப்பதற்காக சிட்பண்ட் செல்கிறார்.   பணம் இல்லை என்று சிட்பண்ட் ஏமாற்றுகிறது.   தங்கையின் திருமணம் நின்றுவிடுமே என்று கொதிக்கிறார் விஜய். அப்புறமென்ன...ஜெனிலியா விரும்பும் வேலாயுதமாக மாறுகிறார்.


இதனால் வில்லன் வேலாயுதத்தை பலிவாங்க துடிக்கிறார்.   இந்த சமயத்தில் ஊரில் வேலாயுதம் தங்கையின் திருமணம் நடக்கிறது.  சமயம் பார்த்து வேலாயுதத்தை பலிவாங்கத்துடிக்கும் வில்லன்,   திருமண பந்தலில் பாம் வைத்து விடுகிறார்.  இதில் தங்கை இறந்துவிட இன்னும் வீரியமாக புறப்படுகிறார் வேலாயுதம்.

வில்லன் முஸ்லீம்.  ஆனால் வேதம் ஓதும் இந்து வேடத்தில் இருந்து கொண்டு நாசவேலைகளில் ஈடுபடுவதை மக்களுக்கு அம்பலப்படுத்தி வில்லனை பலிவாங்குகிறார் வேலாயுதம்.

ஜெனிலியாவை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்ப்பு இருக்கும்.   ஆனால் அவரின் அத்தை மகளான ஹன்சிகாவைத்தான் கடைசியில் திருமணம் செய்துகொள்வார்.




இந்தக்கதை உமக்கு எப்படி தெரியும் என்று நினைக்கிறீர்களா?

2000ல் தெலுங்கில் வந்த ஆசாத் படத்தின் ரீமேக்தான் வேலாயுதம்.   நாகார்ஜூன்,சவுந்தர்யா,ஷில்பாஷெட்டி, ரகுவரன்,பிரகாஷ்ராஜ் நடித்த இப்படத்தை மறைந்த இயக்குநர் திருப்பதிசாமி இயக்கியுள்ளார்.

Tuesday, 11 October 2011

விஜய்யின் வேலாயுதம் படம் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்




காவலன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார். இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:

* மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை. சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை.

*. படம் ஒரு முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளது. இந்த காதலுடன் அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அழககாக, புதுவிதமாக சொல்லும் படமாக இயக்கி இருக்கிறார் ராஜா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் படத்திற்கு பிறகு இப்படியொரு அண்ணன், தங்கை பாசத்தை எந்தபடத்திலும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.

* கிராமமும், நகரமுமாக மாறி, மாறி பயணக்கிறது வேலாயுதம் படத்தின் கதை. கிராமத்துக் கிளர்ச்சியையும், நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்க காட்சி அமைப்புகள் படத்தில் உள்ளன.

* படத்தில் கிராமத்து பால்காரன் வேலுவாக வரும் விஜய் கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஜொலிக்கிறார். அவன் விற்பது பால். ஆனால் அன்பால், நட்பால், பிறரையெல்லாம் தன்பால் ஈர்க்கிறான். அவர் காற்றுமாதிரி இருப்பவன் அந்த ஊருக்கு. காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது அதுபோலத்தான் ‌இந்த வேலு(விஜய்) அந்த ஊருக்கு. காதலனாக, பாசமுள்ள அண்ணனாக, ஆவேச இளைஞனாக விஜய்க்கு ஜீசல்பந்தி நடத்து வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது.

* படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் பத்திரிகையாளராக வரும் ஜெனிலியா, மற்றொருவர் ஹன்சிகா மோத்வானி. இவர்களுடன் சந்தானம் ‌காமெடியில் தன் பங்கிற்கு அசத்த இருக்கிறார்.

* படத்தில் பாலிவுட்டை சேர்ந்த இரண்டு பிரபல வில்லன்கள் உட்பட 15 வில்லன்கள் நடித்திருக்கின்றனர்.

* படத்தில் ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு திருமண காட்சியை அமைத்துள்ளனர். இந்த திருமணத்திற்காக ஊரே பந்தல்போட்டு, கோலம் போட்டு, சீரியல் லைட்கடடி, தோரணம் அமைத்து ஊர்திருவிழா போல் அலங்காரம் செய்து ஆராவரம் செய்திருப்பது பிரமாண்டமான முயற்சி. ஊர் கூடி தேர் இழுப்பது போல, ஒரு ஊரே முன்னின்று நடத்தி வைத்துள்ள அந்த திருமணக்காட்சி, இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு படத்திலும் அமைந்ததில்லை.

* வேலாயுதம் படத்திற்காக அந்த ஊரில் ஒரு கிணறு வெட்டி, அதை அன்பளிப்பாக அந்த ஊருக்கே அளித்திருக்கின்றனர்.

* நடிகர்திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த பாசமலர் படத்தினை புதுபிரிண்ட் போட் அந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸில் போட்டு காட்டி மக்கள் பார்ப்பது போன்ற காட்சி படமான போது அனைவரும் படத்தில் மூழ்கிக் கிடக்க டைரக்டர் கட் சொல்ல மறந்து விட்டாராம்.

* படத்தில் விஜய்க்கு ஓபனிங் சாங்கை சுமார் ரூ.2 கோடி செலவில் திருமூர்த்திமலையில் படமாகியுள்ளனர். ஏற்கனவே "சிவகாசி", "போக்கிரி" படங்களில் விஜய்க்கு ஓபனிங் சாங்கிற்கு நடனம் அமைத்த அசோக்ராஜ், இப்பாட்டுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். கிராமத்து தப்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற ஏராளமான ஆட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் 200கிராமத்து நடன கலைஞர்கள் நயம்காட்ட 150 வெளிநாட்டு நடனக்காரர்கள் ஆடி வெளிநாட்டுக்கலை நயம் காட்டியுள்ளனர். படத்தில் விஜய் எப்படி ஒரு பிரம்மாண்டமோ அதுபோல இந்தபாடலும் பலமடங்கு பிரம்மாண்டமாக இருக்குமாம்.

* இப்படத்தின் சூட்டிங்கில் விஜய் நடிக்க தொடங்கியது முதல் முடியும் வரை ஒருநாள்கூட லேட்டாக வந்ததில்லையாம். அவரால் ஐந்து நிமிடம் கூட சூட்டிங் தாமதமானதில்லையாம். படத்தில் ஒவ்வொரு காட்சியையும், உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்து கொடுத்திருப்பதாக கூறும் இயக்குநர், விஜய்க்கு இந்தபடம் உச்சகட்ட ‌காமெடி படமாகவும் அமையும் என்று கூறுகிறார்.

* படத்தின் தூணாக ஒளிப்பதிவாளர் ப்ரியன் அமைந்திருக்கிறார். ஒவ்‌வொரு காட்சியையும் மிக அழகாக படமாக்கி இருக்கிறாராம். இவர் ஏற்கனவே சாமி, திமிரு, போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

* வேட்டைக்காரன் படத்தை மிஞ்சும் வகையில் இப்படத்தின் இசை வ‌ரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தில் விஜய்‌யை பாடவைக்கலாம் என்று முயற்சித்து இருக்கிறார். ஆனால் கடைசியில் விஜய் ஆண்டனியை பாடும்படி செய்துவிட்டார் விஜய்.

* படத்தில் மொத்தம் 5பாடல்கள், 6சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கின்றனர்.

வேலாயுதம் படத்தின் முழுக்கதை நாளை...

Monday, 10 October 2011

இந்தியன் பார்ட் 2 படத்தில் கமலுக்கு பதில் அஜீத்


ஷங்கர் இயக்கத்தில் வந்த இந்தியன் படம் பரபரப்பாக ஓடியது. இதில் கமல் இரு வேடங்களில் நடித்து இருந்தார். குறிப்பாக இந்தியன் தாத்தா வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
விபத்தில் உயிர் தப்பி வெளிநாட்டில் கம்பீரமாக நடந்து செல்லும் கிளைமாக்ஸ் காட்சி கை தட்ட வைத்தது. ஊழலுக்கு எதிரான இப்படத்தின் கதை அன்னா ஹசாரே, ராம்தேவ் போராட்டம் நடத்தி வரும் இக்காலக் கட்டத்துக்கு மிகவும் பொருத்தமானதாக கருதப்படுகிறது. எனவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன் பார்ட் 2 என்ற பெயரில் எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்தியன் படத்தை தயாரித்தவர் ஏ.எம். ரத்னம் என்பதால் அதன் இரண்டாம் பாகத்தையும் அவரே தயாரிக்கிறார். இப்படத்தில் கமலுக்கு பதில் அஜீத் நடிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது. மங்காத்தாவில் அஜீத்தின் இளம்நரை தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. அதே கெட்டப்பில் இந்தியன் பார்ட் 2  படத்தில் அஜீத் நடிப்பார் என கூறப்படுகிறது.

Sunday, 9 October 2011

மனைவிகளே !


பிறர் கூறும் கணவனை கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில் முடிஞ்சுக்கோ என்பது போன்ற தவறான பேச்சுக்களை முதலில் காதுகொடுத்து கேட்காதீர்கள் ஒருவேளை சொன்னது உங்கள் தாயாக இருந்தாலுமே...!! தாய் நமக்கு நல்லதுக்கு தானே சொல்வாங்க என்று அப்படியே கேட்டு வைக்காதிர்கள்...அவர்கள் அப்படி சொல்வதின் பின்னணியில் சில கசப்பான அனுபவங்கள் குறிப்பா தன் மாமியார் வீட்டில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களை இப்படி பேச வைக்கலாம். 'நாம தான் உசாரா இல்லாம போய்ட்டோம் நம் மகளாவது நல்லா இருக்கட்டும்' என்று ஒரு நல்ல எண்ணத்தில் சொல்லலாம். ஆனால் நீங்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. கணவன் மனைவி இருவருமே படித்து வேலைக்கு செல்லக்கூடிய இன்றைய தம்பதிகளின் நிலை வேறு.

இருவருமே பொருளாதார ரீதியிலான ஒரு தேடலில் தீவிரமாக போய்  கொண்டிருக்கும் போது...இந்த மாதிரி தலையணை மந்திரம், கணவனை தன் வழிக்கு கொண்டு வரணும் என்று ஈடுபடக்கூடிய இத்தகைய செயல் ஒரு நயவஞ்சக எண்ணம் போல் சென்று, மனதில் எப்போதும் ஒரு இறுக்கமான நெருக்கடியை கொடுத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. அதை முற்றியும் தவிர்த்து அந்தரங்கமான நேரத்தில் இனிமையான நினைவுகளை பரஸ்பரம் பரிமாறி ஒரு தெளிந்த நீரோடை போன்று மனதை வைத்துக்கொண்டு உறவில் ஈடுபடும் போது அங்கே தாம்பத்தியம் மிக அழகாக அற்புதமாக நிறைவு பெறும். மறுநாள் காலை இருவருமே உற்சாகமாக, புது புத்துணர்ச்சியுடன் துயில் எழுவார்கள்...அப்புறம் என்ன, அன்றைய பகல் பொழுது முழுவதுமே அதே புத்துணர்ச்சி தொடரும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ...?!!


ஒரு சர்வே : 


" நகரத்தில் வாழும் 44 சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களிலும் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள் !!"  


சர்வே வேற இப்படி சொல்லுது...!! நிலைமை இப்படி இருக்க, தலையணை மந்திரம் அப்படி இப்படின்னு எதையாவது முயற்சி செய்து(?) இருந்ததும் போச்சு... அப்படின்ற நிலைக்கு கொண்டு வந்திடாதிங்க...!!

சரி இருக்கட்டும்...தவறாமல் மனைவியுடன் உறவு வைத்து கொள்பவர்கள், என்ன சொல்றாங்க... அதையும் பாப்போம்.....


"எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம்.  வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோம் " 


இது ஏதோ சுவாரசியத்துக்காக எழுதப்பட்டதில்லை...சர்வேயில் சொல்லப்பட்ட தகவல்கள். இன்றைக்கு பல வீடுகளில் இருக்ககூடிய நிதர்சனம் !!

'தலையணை மந்திரம்' இனி இப்படி போடுங்க...!!



* மனதில் சுமப்பதால் நீங்களும் ஒரு தாய்தான். உங்கள் அன்பான அரவணைப்பில் அவரை குழந்தையாய் மாற்றுங்கள்...! அப்புறம் எங்கிருந்து வரும் பிரச்சனை ??!! அதனால் பாசத்தை காட்டும் விதத்தில் ஒரு தாயாய் !!

* அவரது குறைகளை மட்டுமே பெரிசு படுத்தி வாதாடாமல் நிறைகளை சொல்லி ஊக்கபடுத்துங்கள் ஒரு சகோதரியாய் !!

*  கணவர் சோர்ந்து போகும் நேரம் தோளில் தாங்குங்கள் ஒரு தோழியாய் !!

* குடும்பம்/தொழில்/வேலை இவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு தெரிந்த நல் ஆலோசனைகளை சொல்லுங்கள் ஒரு மந்திரியாய் !!

* எல்லாவற்றிற்கும் பிறகு தனியறையில் நடந்துகொள்ளுங்கள்...முழுமை அடைந்த மனைவியாய் !!

கணவன் தன்னை புரிந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்கள் முதலில் அவரை புரிந்துகொள்ளுங்கள். கணவனின் ஆசைகள், தேவைகள், உரிமைகள் என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வது தான் புரிதல். குடும்பத்தில் யார் பேச்சை யார் கேட்கணும் என்று எடை போட்டு பார்த்து கொண்டிராமல் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் மதித்து செல்வது நல்லது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

அனைத்தையும் விட ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள், பாசாங்கு இருக்ககூடாது...!! 

பிறரின் தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு அதன் படி நடந்து மனவிரிசலை  ஏற்படுத்தி கொள்வதை விட இங்கே குறிப்பிட்ட இந்த மந்திரங்களை பின் பற்றுங்கள்...கணவன் உங்களையே சுற்றி வருவார்...! அன்பால் சாதிக்க முடியாததை வேறு எதை கொண்டு சாதித்தாலும் அவை எல்லாம் வெறும் கானல் !!

சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்!



அந்த இளைஞனுக்கு வித்தியாசமாய் கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் அவனுக்கு சரியாக வரையத் தெரியவில்லை என்ற காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டார்கள். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக சில காலம் வேலை பார்த்தான். அவன் சகோதரன் சிபாரிசின் பேரில் இடை இடையே விளம்பரங்களுக்கு சில ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைச் செய்து கிடைத்த சொற்ப சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான் அந்த இளைஞன்.
ஒரு முறை ஒரு சர்ச் பாதிரியார் சில ஓவியங்கள் வரைந்து தரும் வேலையை அவனுக்குத் தந்தார். வரைய சர்ச் அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தை அவனுக்கு ஒதுக்கித் தந்தார் அந்த பாதிரியார். அந்தக் கட்டிடத்தில் எலிகளின் தொந்திரவு மிக அதிகமாக இருந்தது. வரைய அந்த இடம் சாதகமாக இல்லை. அங்கு ஒரு சுண்டெலியின் அட்டகாசமோ அதிகமாக இருந்தது. அந்த மோசமான சூழ்நிலையிலும் அந்த சுண்டெலியால் கவரப்பட்ட இளைஞன் அந்த சுண்டெலியை ஒரு இறவாத கதாபாத்திரமாகப் பின்னாளில் படைத்து விட்டான். அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்னி. அவன் படைத்த பாத்திரம் மிக்கி மவுஸ். பல கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை வால்ட் டிஸ்னிக்கு சம்பாதித்துத் தந்தது அந்த மிக்கி மவுஸ்.
இன்னொரு உதாரணமாக ஒரு அமெரிக்க முதியவரைப் பார்ப்போம். அறுபது வயதில் இருந்த வேலை போய், சேர்த்த செல்வமும் பெரிதாக எதுவும் இல்லாமல் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக நின்றார் அவர். சிறிய வயதில் இருந்தே அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். தந்தை அவருடைய சிறு வயதிலேயே இறந்து விட அம்மா வேலைக்குப் போக வேண்டி வந்தது. எனவே சிறுவனாக இருக்கும் போதே அம்மா வேலைக்குப் போகும் போது மற்ற சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அம்மா வீட்டில் இருக்கையிலும் சமையலில் தாயிற்கு உதவும் வேலையும் இருந்தது.
அம்மாவிற்கு உதவியதால் சமையல் அவருக்கு நன்றாக வந்தது. எனவே ஓட்டல்களில் சமையல்காரராக வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்தினார். பின் ஒரு சிறிய நகரத்தில் சிறிய ஓட்டல்கடையை நடத்தினார். அவர் தாயாரின் கைப்பக்குவத்தில் அவர் கற்றிருந்த சிக்கன் வருவல் வாடிக்கையாளர்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த நகரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அவர் அந்தக் கடையையும் மூட வேண்டி வந்தது. அப்போது அவருக்கு வயது அறுபதைத் தாண்டி இருந்தது. வயதானவர்களுக்கு அரசாங்கம் தரும் பாதுகாப்பு தொகை 100 அமெரிக்க டாலர்களில் வாழ்க்கை நடத்த முடியாமல் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.
அவருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த சிக்கன் வருவலை அமெரிக்க ஓட்டல்களுக்கு விற்க அவர் தீர்மானித்தார். நாடெங்கும் பயணித்து பெரிய ஓட்டல்களுக்குச் சென்று அங்கேயே சிக்கன் வருவலைத் தயாரித்து சுவைக்கத் தந்து பார்த்தார். ஆனால் அந்த ஓட்டல்கள் அவருடைய சிக்கன் வருவலில் ஆர்வம் காட்டவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல 1008 ஓட்டல்கள் நிராகரித்தன. கடைசியில் 1009 ஆவது ஓட்டல்காரர் பீட் ஹார்மன் என்பவர் அதில் ஆர்வம் காட்டினார். அவருடன் கூட்டு சேர்ந்து "Kentucky Fried Chicken" என்ற தொழிலை 1952 ஆம் ஆண்டு உருவாக்கினார் அந்த முதியவர். அவர் பெயர் கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ். 1960 ஆம் ஆண்டில் 600 க்கும் மேற்பட்ட கிளைகள் உருவாகி அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசூலில் பெரும் சாதனை படைத்தது அவருடைய சில்லி வருவல். 1964 ல் தன் நிறுவனத்தை இருபது லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றார் கர்னல் சாண்டர்ஸ். கடைசி வரை பெரும் செல்வந்தராகவே வாழ்ந்த அவர் 1976 ல் உலகத்தின் பிரபலஸ்தர்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.
சோதனைகளைக் கடக்காமல் சாதனைகள் இல்லை. வெற்றியின் அளவு பெரிதாகப் பெரிதாக சோதனைகளின் அளவும் பெரிதாகவே இருந்திருக்கின்றன. இன்று நம்மை பிரமிக்க வைக்கும் அத்தனை வெற்றியாளர்களும் இப்படி பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்தவர்களே.
வெற்றிக்குத் திறமைகள் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. மேலே சொன்ன உதாரணங்களில் வால்ட் டிஸ்னியும், கர்னல் சாண்டர்ஸும் தங்கள் வெற்றிக்கான திறமைகளை ஆரம்பத்திலேயே பெற்றிருந்தார்கள். ஆனால் உலகம் அவர்களை அங்கீகரிக்க நிறையவே காலம் எடுத்துக் கொண்டது. அது வரை அவர்கள் கண்டது சோதனைக் காலங்களே. அந்தக் காலத்தில் அவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருந்தால் வரலாற்றில் அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருப்பார்கள். சோதனைக்காலங்களே இல்லாமல் போயிருந்தாலும் அவர்கள் இப்படி முத்திரை பதிக்குமளவு சரித்திரம் படைத்திருக்க மாட்டார்கள்.
வால்ட் டிஸ்னிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பிரபல பத்திரிக்கை கார்ட்டூனிஸ்டாக வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர் ஒரு நல்ல வருவாயுடன் பாதுகாப்பாக வாழ்க்கை வாழ்ந்து கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவராக இருந்திருக்கலாமே ஒழிய கோடிக்கணக்கான செல்வம் படைத்து புகழையும் பெற்றிருக்க முடியாது. கர்னல் சாண்டர்ஸ் அந்த சிறிய நகரத்தில் நடத்தி வந்த ஓட்டல் கடையை மூட நேர்ந்திரா விட்டால் ஓரளவு வசதியான சம்பாத்தியம் செய்து நடுத்தர வாழ்க்கையை ஓட்டியிருக்கலாமே ஒழிய இத்தனை செல்வத்தையும், புகழையும் அடைந்திருக்க முடியாது.
உண்மையில் சோதனைக் காலங்கள் அர்த்தம் மிகுந்தவை. அந்தக் காலத்தில் தான் உண்மையில் ஒருவன் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்தக் காலத்தில் தான் விதி அவனுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. சோதனைக் காலங்களின் பாடங்கள் இல்லாமல் யாருமே வெற்றிக்கான பக்குவத்தைப் பெற்று விடுவதில்லை. எனவே மாபெரும் வெற்றியை விரும்புபவர் எவரும் சோதனைக் காலத்தில் சோர்ந்து விடக்கூடாது.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவருக்கு
என்று வள்ளுவர் கூறுவது போல் நெருப்பிலே இட்டு சுடச்சுடத் தான் தங்கம் மின்னும். மனிதனும் சோதனைகள் மூலமாகவே சாதனைகளுக்கான வழியைக் கற்றுக் கொள்கிறான். சோதனைக் காலத்தில் சோர்ந்து விட்டால் அந்தக் காலம் காட்டும் புதுப் பாதைகள் நம் கண்ணில் படாமலேயே இருந்து விடக்கூடும்.
விதி சோதிக்கும் போது பெரிய வெற்றிக்கு இந்த மனிதன் ஏற்றவன் தானா என்று கூர்ந்து கவனிக்கிறது. புலம்புவதும், குற்றம் சாட்டுவதுமாகவே அவன் இருந்து விடுகிறானா இல்லை தாக்குப் பிடிக்கிறானா என்றும் கவனிக்கிறது. தாக்குப் பிடித்து மனிதன் தன் தகுதியை நிரூபிக்கும் போது பிறகு விதி அவனுக்கு வழி மட்டும் காட்டுவதில்லை. பின்னர் அவனிடம் மிகவும் தாராளமாகவே நடந்து கொள்கிறது. அவன் எதிர்பார்த்ததற்கும் பல மடங்கு அதிகமாகவே அவனுக்கு வெற்றியைத் தந்து அவனைக் கௌரவிக்கிறது.
எனவே சோதனைகள் வரும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். தாக்குப் பிடியுங்கள். பாடம் படியுங்கள். பக்குவம் அடையுங்கள். ஒரு கட்டத்தில் எங்கோ ஒரு கதவு கண்டிப்பாகத் திறக்கும். அதன் வழியாகப் பயணித்து சோதனையைக் கடந்து சாதனை படையுங்கள்.
மேலும் படிப்போம் ....

Saturday, 8 October 2011

காதலி ....... (கவித்துளிகள் )

அன்பு நண்பர்களே .... சில கவிதை வரிகளை (அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் ) உங்களின் பார்வைக்கு அளிக்கிறேன் ...... படித்துவிட்டு கருத்துக்களை மறவாமல் கூறுங்கள் ............






வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்

உந்தன் மடிதேடி 
கடல்தாண்டி மலைதாண்டி 
வந்து விழுவேன் கண்ணம்மா 
நீ எழுலோகங்கள் 
காணாத பெண்னம்மா

****************************************************************************


என் சிந்தனைகளுக்குச்
சிறகுதந்து 
சிரித்துச் சென்றவளே !
என் கற்பனைகளுக்கு 
கண்களை அசைத்து 
காதல் வளர்த்தவளே !
என் கண்களைப் பார்த்து 
ஒருமுறை சொல் என்மேல் 
காதல் இல்லையென்று ...........!

Sunday, 2 October 2011

யார் உண்மையான கேப்டன்? - 1

வணக்கம் ...... நண்பர்களே .........

நம் நண்பனில் இருந்து கேப்டனை சிறப்பு பேட்டி எடுப்பதற்காக அழைத்திருந்தோம் . (சும்மா கற்பனைதான் ..ஹி!!ஹி!!!) கேப்டன் விஜயகாந்த் மட்டும் வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நடந்தது வேறு , நமது அலுவலகத்தில் (??!!!) மிகப்பெரிய கூட்டம் , நான்தான் உண்மையான கேப்டன் என்று கூறிக்கொண்டு பலர் வந்திருந்தார்கள். நல்ல மாட்டிக்கிட்டோம் என்று எண்ணிய படி பேட்டியை துவக்கினோம் (வேறு வழி ). விஜயகாந்த் கோபத்துடன் காணப்பட்டார் அவரிடம் இருந்து பேட்டியை ஆரம்பிப்போம் ..



விஜயகாந்த் : கண்கள் சிவக்கிறது ..... புருவத்தை தூக்கி ... கை விரல்களை மடக்கி நம்முடன் பேச தொடங்குகிறார் ஏன்டா நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு ... கேப்டன் பிரபாகரன் படத்துல நடிச்சு ... வீரப்பன புடிசஅதோட மட்டுமில்லாம , பல படங்கள்ல போலீஸ் அதிகாரியா நடிச்சு பல தீவிரவாதிகள அழிச்சு மக்களை காப்பாத்தி கேப்டன் கிற பேர DEVELOP பண்ணி வச்சிருக்கேன் நீ பேட்டி எடுக்கறேன்னு சொல்லி ஆப் கூட அடிக்காம தெளிவா வந்திருக்கேன். (ஐயோ உளறிட்டேனா ) ஆ...ங்... எனக்கு குடிக்கிற பழக்கமெல்லாம் கிடையாது எப்பவுமே தெளிவாதான் இருப்பேன் ......(உதவியாளர் : சார் இப்பவே உளற ஆரம்பிச்சுட்டிங்க கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க ) ம்... சரி ... பேட்டிய ஆரம்பிங்க .............
நாம் : சார் நீங்கதான் கேப்டன் அப்படின்னு சொல்லறிங்க ஆனா இவுங்கல்லாம் நான் தான் கேப்டன் அப்படின்னு சொல்லி கிளம்பி வந்திருக்காங்களே இதப்பத்தி என்ன நினைக்கிறிங்க .

விஜயகாந்த் : நான்தா அப்பவே சொன்னனே ... எவ்வளவு கஷ்டப்பட்டு பேர டெவலாப் பன்னிருகேன்னு ...... அது மட்டுமில்லாம வீரப்பன நான்தானே பிடிச்சேன் .... வேற எவனாவது பிடிச்சானா?

நாம் : வீரப்பன பிடிச்சது விஜயகுமார் ங்கற போலிஸ் அதிகாரி......... நீங்க பிடிச்சது படத்துல ..........

விஜயகாந்த் : எப்படி பிடிக்கணும்னு நான் சொல்லிகொடுத்தது தான் ....... இல்லனா புடிச்சிருக்க முடியாது ........ அதுமட்டுமில்லாம பாகிஸ்தான் தீவிரவாதிய பிடிச்சிருக்கேன் (?) .. இது தெரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க ......... இவ்வளவு பேசறிங்களே தொப்புள்ள பம்பரம் விடற தைரியம் வேற எவனுக்காவது இருக்கா?? என்ன தவிர கேப்டன் - கிற பேரு யாருக்கும் சொந்தமில்ல .. ஆங் .......

அடுத்ததா மன்சூர் அலிகான் வரார் ..........
நாம் : சார் வணக்கம் .............
மன்சூர் : வணக்கம் .... ஒழுங்கா மாஷா மாஷம் கவர்மென்டுல ஷம்பழத்த ... வாங்கி .. வூட்டுக்கு குடுத்திட்டு இருந்த ... இனி குடுக்க மாட்டங்களே .. புரியல ? அவுங்க குடுப்பாங்க வாங்கறதுக்கு நீஇருக்கமாட்டே...... ஹ!ஹ !!ஹா...........
நாம் : (பயந்துகொண்டே ) என்ன சார் பேட்டி குடுக்க சொன்னா கேப்டன் பிரபாகரன் பட வசனத்த பேசறிங்க ......

மன்சூர் :பேசறதுமட்டுமில்ல உன்ன கொல்லவும் போறேன் .......... (பெரிய துப்பாக்கியை எடுக்கிறார் ... கொக்கு சுடும் துப்பாக்கி என்று நினைக்கிறேன் .......)

நாம் : (நம்ம கதை முடிஞ்சது .... ) சார் சுட்டடதிங்க சார் , நீங்க சொல்லறத அப்படியே பதிவா போ... ட......... ரே ....................ன்ன்ன்ன்.........

மன்சூர் : ஓ.. அப்படியா ? அப்பா எதுக்கு கேப்டன் பேட்டின்னு சொல்லிட்டு என்ன கூப்பிடல ...........

நாம் : அவரு தானே கேப்டன் ......... (விஜயகாந்த் )


மன்சூர் : யாரு ... அந்த விசயகாந்தா .......... டாய்... அந்த ஆளு கேப்டன் பிரபாகரன் ந்டிச்சதுனாலதான் இந்தளவுக்கு பேரும் புகழும்.... நான் தான் அந்த படத்துல மெயின் டைரக்டர் ...... ( உதவியாளர் : சார் அது டைரக்டர் இல்ல கேரக்டர் ) டாய்... வில்லன்ன சும்மாவா அப்படித்தான் தப்பு தப்ப பேசுவேன் ......... அப்பத்தான் நாலுபேர் பயப்படுவான் ( உதவியாளர் : கிளிஞ்சது ..........) அத்தஉடு ... மேட்டருக்கு வரேன் . போலீஸ் டீம்க்கு அந்த ஆளு கேப்டன் னா ... வில்லன் டீம்க்கு நான்தானே டாப்டென் ...(உ : யோவ் கேப்டன் யா ...) ஏதோ ஒன்னு, அந்த படத்துல எனக்கு ஒரு பாட்டுகூட இருக்கு அதுனால நானும் கேப்டன் தான் ... இத யாராவது மாத்தி சொன்னிங்க ... கொன்னு போட்ருவேன்........ ஹ!ஹ !!ஹா........... ஹ!ஹ !!ஹா........... வருட்டா .........?

நாம் :தப்பிச்சம்டா சாமி ......

மற்றவர்கள் பேட்டி நாளை ............