நகரத்தில் எழுத்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற பத்திரிக்கையாளர் ஜெனிலியா. கிராமத்தில் அப்பாவி இளைஞனாக விஜய். ஜெனிலியாவால்தான் விஜய் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகிறது.
கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறார் விஜய். தங்கையின் திருமணம் வரும் போது சிட்பண்டில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுக்க சிட்டிக்கு வருகிறார்.
அங்கே வில்லன் அங்கங்கே பாம் வைத்து கலவரத்தை தூண்டுகிறான். இந்த சதிச்செயலை செய்வது யார் என்று கண்டுபிடிப்பதில் திணறுகிறது போலீஸ்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஜெனிலியா, இந்த சதிக்காரனை கண்டுபிடித்து சாகடிக்க வேலாயுதம் வருவான் என்று துண்டு பிரசுரங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் கட்டுரை மூலம் பரப்புரை செய்கிறார்.
இந்த சமயம் பார்த்து அப்பாவி விஜய் கோயிலில் வந்து அர்ச்சனை செய்யும் போது பெயர் என்ன என்று அய்யர் கேட்க, வேலாயுதம் என்று அவர் சொல்ல, அய்யர் உட்பட சாமி கும்பிட வந்தவர்கள் எல்லோரும்,,,,ஆ! வேலாயுதம்...வேலாயுதம்...என்று பிரமிக்கிறார்கள்.
வில்லன் வைத்த பாம் தற்செயலாக வெடிக்க முடியாமல் போகும் போதெல்லாம் அங்கே வேலாயுதம் நிற்கிறார். இதனால் வேலாயுதம் பெயரும், முகமும் பிரபலமாகிவிடுகிறது.
கற்பனை பாத்திரம் நிஜமாய் வந்துவிட்டது என்று சந்தோசப்படுகிறார் ஜெனிலியா. இந்த சந்தோசத்தை விஜய்யை நேரில் சந்தித்தும் பகிர்ந்துகொள்கிறார். ஆனால் விஜய் அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஒதுங்குகிறார்.
இதனால் வில்லன் வேலாயுதத்தை பலிவாங்க துடிக்கிறார். இந்த சமயத்தில் ஊரில் வேலாயுதம் தங்கையின் திருமணம் நடக்கிறது. சமயம் பார்த்து வேலாயுதத்தை பலிவாங்கத்துடிக்கும் வில்லன், திருமண பந்தலில் பாம் வைத்து விடுகிறார். இதில் தங்கை இறந்துவிட இன்னும் வீரியமாக புறப்படுகிறார் வேலாயுதம்.
வில்லன் முஸ்லீம். ஆனால் வேதம் ஓதும் இந்து வேடத்தில் இருந்து கொண்டு நாசவேலைகளில் ஈடுபடுவதை மக்களுக்கு அம்பலப்படுத்தி வில்லனை பலிவாங்குகிறார் வேலாயுதம்.
ஜெனிலியாவை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அவரின் அத்தை மகளான ஹன்சிகாவைத்தான் கடைசியில் திருமணம் செய்துகொள்வார்.
இந்தக்கதை உமக்கு எப்படி தெரியும் என்று நினைக்கிறீர்களா?
2000ல் தெலுங்கில் வந்த ஆசாத் படத்தின் ரீமேக்தான் வேலாயுதம். நாகார்ஜூன்,சவுந்தர்யா,ஷில்பாஷெட்டி, ரகுவரன்,பிரகாஷ்ராஜ் நடித்த இப்படத்தை மறைந்த இயக்குநர் திருப்பதிசாமி இயக்கியுள்ளார்.
மதக்கலவரம் வராம இருந்தா சரி,,,,
ReplyDeleteஉலகப் போரே... வந்தாலும் வரும் ..........
ReplyDeleteநன்றி நண்பா........