Monday, 30 April 2012

ஒற்றைத் தலைவலிக்கு எளிதில் உண்டு தீர்வு!

 மனிதனை பாடாய்படுத்தும் நோய்களுள் ஒன்று... ஒற்றைத் தலைவலி. பெரும்பாலும் அதிகமான மன அழுத்தம் காரணமாகவே இது வருகிறது. என்றாலும், குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் இது வரலாம்.
இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் மற்றும் வயிறு பிரச்சினைகளை ஒற்றைத் தலைவலி வரும் ஒருவர் சந்திக்க நேரிடுகிறது. ஒற்றைத் தலைவலி தீர எளிய வழிமுறைகள் உள்ளன. அவை...
* எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
* நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்தலாம்.
* முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக்கொண்டு தலையின் மீது ஒத்தடம் தரலாம். முட்டைக்கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டி பயன்படுத்துங்கள்.
* குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டலாம். பின் கைகளையும் கால்களையும் சுடுநீரில் விடவும்.
* 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.
* வாசனை எண்ணெயால் தலைக்கு ஒற்றடம் தரலாம். தேய்த்தும் விடலாம்.
இவை தவிர, முன்னெச்சரிக்கையாக இருந்தும் ஒற்றைத் தலைவலி வருவதை தவிர்க்கலாம். புகை மற்றும் மது தலைவலியை தூண்டக் கூடியவை என்பதால் அவற்றை தவிர்த்திடுங்கள். மேலும், வெயிலில் அலைவது, காரமான உணவு வகைகளை உட்கொள்வது, வயிறு முட்ட சாப்பிடுவது, தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை கொள்வது போன்றவற்றை தவிர்த்து வந்தாலும் ஒற்றைத் தலைவலி நம்மை நெருங்காது.

Sunday, 29 April 2012

விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!


தெலுங்கில் ஒரு படத்தின் ரீ-மேக் உரிமையை விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கேட்டு, அவர்களுக்கு கிடைக்காதது, இப்போது விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்கு கிடைத்திருக்கிறது. நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன், அவரது அப்பாவை போலவே சினிமா மீது ஆர்வம் கொண்டுள்ளார். மகனின் விருப்பத்தை ஏற்று அவரை சினிமாவில் களம் இறங்க விஜயகாந்தும் முயற்சித்து வருகிறார். இதற்காக பல டைரக்டர்களிடமும் ‌கதை கேட்டு வருகிறார். ஆனால் இதுவரை விஜயகாந்த் கேட்ட கதைகள் எதுவும் திருப்தியில்லை. இதனால் தெலுங்கு படத்தை ரீ-மேக் செய்ய எண்ணியிருந்தார். இதற்காக தெலுங்கின் பல படங்களையும் அவர் பரிசீ‌லனை செய்துள்ளார். அதில் கடைசியாக அவர் திருப்தியடைந்த படம் பிருந்தாவனம்.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் இந்த பிருந்தவானம். பிருந்தாவனம் படத்தின் ரீமேக் உரிமைக்கு விஜய் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்கள் பலர் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் அவர்களுக்கு எல்லாம் கொடுக்காத தயாரிப்பாளர், விஜயகாந்த் மகனுக்கு என்றதும் பேரம் பேசாமல் கொடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தை விஜயகாந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸே தயாரிக்க இருக்கிறது. படத்தில் சண்முகப்பாண்டியனுக்கு ஏற்ற கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்புகள் வெளியாகலாம்.