செய்முறை.....
சமமான தரையில் இரு கால்களையும் முடிந்தவரை பிரித்து வைத்துக் கொண்டு இரு கைகளையும் இருபுறம் தூக்கி கழுத்து அளவிற்கு வைத்துக் கொள்ள வேண்டும். (மூச்சை உள்ளிழுத்த நிலையில்). பின் மூச்சை வெளியே விட்டு ஒரு புறம் கால் முட்டியை மட்டும் மடக்கி உடம்பை அந்தப்புறம் வளைக்க வேண்டும். இரு கைகளையும் கீழே போட்டு ஒரு புறம் வளைந்த முட்டிக்காலுடன் நிற்க வேண்டும்.
பின் எதிர்புறம் உள்ள கையை தலைக்கு மேலே மூச்சை உள்ளே இருந்த வண்ணம் கையை உயர்த்த வேண்டும். உடம்பையும் ஒரே புறமாக ஒரு சாய்க்க வேண்டும். மூச்சை மெதுவாக வெளியே விட்டு மெதுவாக முதல் நிலைக்கு வர வேண்டும். பின் இது போல மறுகாலின் முட்டியை வளைத்து இருந்து கையை மேலே தூக்கி பின் தளர்த்தவும். முடிந்தவரை இருபுறமும் மாறி மாறி செய்திடல்.
பயன்கள்.....
இந்த ஆசனா இடுப்பு, பின்புறம் அடிவயிறு போன்ற பகுதிகளை வலுப்படுத்தக் கூடியது. ஜீரண உறுப்புக்களை சீராக இயக்கச் செய்கிறது. கால்களுக்கு வலுச்சேர்க்கின்றது. சுவாசமண்டலப்பிரச்சனைகளுக்கும் உதவி புரிகின்றது.
No comments:
Post a Comment
கருத்துக்கள்