வீரத்தின் விளைநிலம்
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த
ஆங்கிலேய கிழக்கிந்தியக்
கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக
நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத்
தடுக்க வேண்டும்
என்று சின்னமலை விரும்பினார்.
இன்றைய கேரளத்திலும்
கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும்
இருந்த கிழக்கிந்திய
கம்பெனிப்படை ஒன்று சேர விடாமல்
இடையில் பெரும் தடையாகச்
சின்னமலை விளங்கினார்.
1801 -இல் ஈரோடு காவிரிக்கரையிலும்,
1802 -இல் ஓடாநிலையிலும்,
1804 -இல்
அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன்
நடைபெற்ற போர்களில்
சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
சின்னமலையின் ஓடாநிலைக்
கோட்டையைத் தகர்க்கக்
கள்ளிக்கோட்டை யிலிருந்து மிகப்பெரும்
அளவில் பீரங்கிப்படை வந்தது.
சுபேதார் வேலப்பன்
அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப்
பழனிமலைத் தொடரில் உள்ள
கருமலை சென்றார்.
போரில் சின்னமலையை வெல்ல
முடியாது என்று கண்ட ஆங்கிலேயர்
சூழ்ச்சி மூலம், சின்னமலையைக்
கைது செய்து சங்ககிரிக்
கோட்டைக்குக்
கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி
ஜூலை 31,1805
அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும்,
கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம்
எய்தினர்.
வீரர்கள் மற்றும் துரோகிகளால்
நிரம்பிக் கிடக்கிறது வரலாறு.
No comments:
Post a Comment
கருத்துக்கள்