பிரபல பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் நடிகர் சிம்பு.
இதுவரை லூசுப்பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான் போன்ற பாடல்களை எழுதி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும், பெண்கள் மத்தியில் அதிருப்தியையும் சம்பாதித்து கொண்ட சிம்பு, பெண்களையும் திருப்திபடுத்தும் விதமாக, சமீபத்தில் ஒஸ்தி படத்தில் பொண்டாட்டி பாடலை எழுதினார். இந்தபாடலை கேட்டு பலரும் தங்களுக்கு வரப்போகிற கணவர் இப்படி இருக்கமாட்டாரா...! என்று பெண்களை ஏங்க வைத்தார்.
இந்நிலையில் இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபடி மேலே போய், உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். பிரபல அமெரிக்க பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் சேர்ந்து இந்த பாடலை உருவாக்கிறார் சிம்பு. 96 மொழிகளில் காதல் என்று பொருள்படும் வார்த்தைகளை இப்பாடலில் பயன்படுத்தி இருக்கிறார் சிம்பு. 96 மொழிகளையும், பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு " என்று சிம்பு சொல்லியிருக்கிறார். மேலும் அன்புக்கான பாடலாக, உலகத்தின் அன்பு கீதமாக இந்த பாடல் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.நேற்று வெளியான இப்பாடல், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் தனுஷின் கொலவெறி பாடல், அவரை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இதனால் புகழின் உச்சியில் இருக்கிறார் தனுஷ். அதேபோல் சிம்புவும், தனுஷூக்கு நிகராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சி தான், இந்த உலக அமைதி பாடல் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

No comments:
Post a Comment
கருத்துக்கள்