Wednesday, 21 December 2011

உலகின் காஸ்ட்லி ஆப்ரோடு குவாட் பைக் அறிமுகம்



கரடு முரடான சாலைகளில் அனாயசமாக செல்லும் ஆற்றலும், வடிவமைப்பும் கொண்ட புதிய குவாட் பைக்கை பிரான்சை சேர்ந்த லாசரேத் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வஸுமா வி8 என்ற பெயரில் வந்துள்ள இந்த குவாட் பைக் கார் போன்று நான்கு சக்கரங்களை கொண்டுள்ளது. இதில், ஃபெராரி கார்களில் பொருத்தப்படும் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

அதிகபட்சம் 250 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த பைக் அதிகபட்சம் மணிக்கு 240 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.

பார்ப்பதற்கு ரேஸ் கார் போன்று இருந்தாலும், இதில் ஸ்டீயரிங் வீலுக்கு பதில் மோட்டார்சைக்கிள்களில் உள்ளது போன்று ஹேண்டில் பார் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஹேண்டில் பார் பிஎம்டபிள்யூ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதன் அகலமான டயர்கள் இந்த பைக் அதிவேகத்தில் சென்றால் கூட அதிக ரோடுகிரிப்பை கொடுக்கும்.

இந்த பைக் ரூ.1.40 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்துக்கள்