கடலில் மீன் பிடிக்கும் படகு ஓட்டிகள் மற்றும் கப்பல் மாலுமிகளுக்கு புரியும் வகையில் அந்தந்த துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. இதன் மூலம் காற்றின் வேகத்தை புரிந்து கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எச்சரிக்கை கூண்டு 1
புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதை குறிக்கிறது.
எச்சரிக்கை கூண்டு 2
புயல் தூரத்தில் இருப்பதை குறிக்கிறது.
எச்சரிக்கை கூண்டு 3
துறைமுகங்களில் வழக்கத்தை விட அதிகமாக காற்று வீசுவதைக் குறிக்கிறது.
எச்சரிக்கை கூண்டு 4
கடலில் புயல் உருவாகியுள்ளதையும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள போதிய நேரமிருப்பதையும் உணர்த்தப்படுகிறது.
எச்சரிக்கை கூண்டு 5,6,7
புயல் தீவிரமடையாததை குறிக்கிறது. மேலும், மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என உஷார்படுத்துகிறது.
எச்சரிக்கை கூண்டு 8,9,10
பெருத்த அபாய எச்சரிக்கை. மணிக்கு 120 முதல் 135 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
எச்சரிக்கை கூண்டு 11
வானிலை ஆய்வு மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு , பெருத்த சேதத்தை வுருவாக்கும் என்பதை குறிக்கிறது.
நன்றிங்க பகிர்வுக்கு
ReplyDelete