நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Thursday, 15 November 2012

பெண்களுக்கேற்ற யோகா

* மாதவிடாய் கோளாறுகள் – வலியுடன் கூடிய உதிரப்போக்கு, அடிவயிற்றில் வலி, தசை இசிவு, வாந்தி, எரிச்சல் முதலிய பிரச்சனைகளுக்கு மாதவிடாயின் போது – வஜ்ராசனா, சசாங்காசனா இதர நாட்களில் – சூர்ய நமஸ்காரம், ஹாலாசனா, மத்ஸ்யாசனா, புஜங்காசனா, பத்தகோனாசனா, சலபாசனா, தனுராசனா, பஸ்சிமோத்தாசனா மற்றும் பிராணயாமம். யோகாசனங்களுடன் பிராணாயமம் (பஸ்திரிகா, கபால பூதி முதலியன செய்யலாம்). பந்தங்கள், யோகமுத்திரைகள் – மூல பந்தம், வஜ்ரோலி முத்திரை.
* கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய ஆசனங்களை நல்ல யோகா குருவிடமும், உங்கள் டாக்டரையும் கலந்தாலோசித்து மேற்கொள்ளவும்.
* இது மாதவிடாயின் போது ஏற்படும் அதீத போக்கு. இதற்கு உடல் உறுப்புக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆசனங்கள் – சூர்ய நமஸ்காரம், வஜ்ராசனம், உஷ்ட்ராசனம், சசாங்கசனம், விபரீத கரணி ஆசனம், சவாசனம். பிராணாயாமம் – பஸ்திரிகா, உஜ்ஜையி, நாடிசோதன் பந்தம் – மூல பந்தம், யோகநித்ரா.
* பெண்களின் அதீத உடல் பருமனுக்கு  – உடலுழைப்பும், நடமாட்டமும் குறைந்து விட்ட இந்த கால சூழ்நிலையில் பெண்களில் பலர் அதிக குண்டாகி விடுவது சகஜம். சுற்றுப்புற சூழ்நிலை மாசுகளும், ஹார்மோன் கோளாறுகளும் காரணமாகும்.