நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 23 May 2012

புதிய முறையில் மின்சார தயாரிப்பு

sridhar_270
கே.ஆர்.ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.


நல்ல திறமைசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை.முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.


அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.


தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார்.


அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.


தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவுபெரிய தொகையை முதலீடு செய்தார்.


நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.


உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்பு கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.


இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E Bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.


100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E Bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E Bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும் என்கிறார்கள்.


சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும் என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை* நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.  
* தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்கக்கூடாது. பழக பழக வந்துவிடும்.
*  யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள்ளவும்.
* ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து விட்டு அடுத்த ஆசனத்தை தொடரலாம்.
* தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கியமாக செய்யவும்.
*  யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய்யக்கூடாது. காலை சூரிய ஒளிபட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.
* சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது.

காதலியுடன் முதல் சந்திப்பா?

நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர் கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும். முதல் சந்திப்பு!
 1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி!
 முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண் டும். இதற்கு கொஞ்சம் ஹோம் வொர்க் செய்து தயாராக வேண்டி யது அவசியம்! சாதாரணமான கேள்வி களுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித் தன்மையான பதில்களைத் தயார்செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!
2. மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது (நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!)  என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது!!
3. நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.
4. அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக்கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.

5. அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.
6. அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும் போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!
7. தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசு ம் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.
8. கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்று முற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.
9. கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.அன்றைய சுவரசியமான செய்தி பற்றி உங்கள் காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.
10. முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன்கூட்டியே தயார்செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்று விட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!
11. அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லா ப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!
12. அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை, கைப் பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப்பற்றி புகழ்ந்து பேச நான் உங்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன!!
 14. அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்.. நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லை யென்றாலும் சரிதான் .. ஏன் வளர்க் கவில்லை என்று கேட்டு பேச்சை வளர்க்கலாம்..


15. அவளின் குடும்பத்தில் உள்ள நபர் களைப் பற்றி, அண்ணன்கள், தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.
16. இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விசய்ங்களைப் பிடித்துக் கொண்டுபேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது!!

Tuesday, 22 May 2012

பரசவோடானாசனா


செய்முறை...
சம தரையில் நன்றாக நின்று கொள்ள வேண்டும். கால்களை சிறிது அகற்றி விரித்து வைத்துக் கொண்டு இரு கைகளையும் பின்புறமாகக் கட்டிக்கொள்ள வேண்டும்.  கால்களை சிறிது முன்னும் பின்னுமாக வைத்துக் கொண்டு மூச்சை உள்ளே இழுக்கவும். மூச்சை வெளிவிட்டு விட்டு அப்படியே (கைகள் பின்புறம் கட்டியபடி).
குனிந்து முடிந்தவரை காலைத் தொடவும் அல்லது தொட முயற்சிக்கவும்.  பின் மூச்சை உள்ளே இழுத்து 2 ஆம் நிலைக்குத் திரும்பி பின் முதல் நிலையை அடையவும். இதே போல மறுபக்கமும் செய்யவும் பின் சிறிது இடைவெளி விட்டு மாறி மாறி செய்யவும்.    
பயன்கள்....
இந்த ஆசனம் இடுப்புப் பகுதிக்கு நல்ல வளையும் திறனைக் கொடுக்கும். அடிவயிற்றின் உட்புறச் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. சிறுகுடல் பெருங்குடல் போன்றவற்றை வலுப்படுத்திடும்.

Monday, 14 May 2012

40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள்


கண்கள்.
மனித உடலில் மிக இன்றியமையாத, மென்மையான உறுப்புகள்.

கண்களில் எப்போது வேண்டுமானாலும் பாதிப்புகள் வரலாம். ஆனாலும் 40 வயது வரை இந்த உலகை கலர் கலராய், விதவிதமாய் பார்த்து ரசித்தவர்கள் அதன் பின்பு `என்ன கொஞ்சம் சிரமமாக இருக்கிறதே'-என்று புலம்ப தொடங்கு கிறார்கள். 40 வயதுக்கு பிறகு கண்களில், அது தரும் காட்சிகளில் லேசான அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டாலே, உடனே கவனித்து அதற்கான தீர்வுகளை தேடிக்கொண்டால், தொடர்ந்து முழுமை யான பார்வை பலனை அனுபவிக்கலாம்.

பொதுவாக 40 வயதுக்கு பிறகு கண்களில் என்னென்ன பிரச்சினை ஏற்படும்? அதற்கு என்ன தீர்வு? என்பதனை விளக்குகிறது, இந்த கட்டுரை. 40 வயதுக்கு மேல் செய்தித்தாள் படிப்பது சிரமமாக உள்ளது, சிறிய எழுத்துக்கள் தெரிவதில்லை. இது எதனால் ஏற்படுகிறது?

40 வயதுக்கு மேல் அனைவருக்கும் இந்த நிலை ஏற்படும். இது ஒரு நோய் அல்ல. இதை சாளேஸ்வரம் அல்லது வெள்ளெழுத்து என்று கூறுவர். நமது கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான லென்ஸ் சுருங்கி விரியும் தன்மை கொண்டது. இதனால் 40 வயதுக்கு முன்பு சிறிய எழுத்தையும் படிக்க இயலும். இந்த சுருங்கி விரியும் தன்மை 40 வயதுக்கு மேல் படிப்படியாக குறைகிறது. இதுவே சிறிய எழுத்துகளை படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இந்த குறைபாட்டை எப்படி சரி செய்யலாம்?

40 வயதுக்கு மேல் சிறிய எழுத்துக்களை படிப்பதற்கு மூக்கு கண்ணாடி அணிய வேண்டும். கண்ணின் லென்சின் சுருங்கி விரியும் தன்மை படிப்படியாக குறைவதினால் 2 வருடத்திற்கு ஒரு முறையாவது கண்ணாடி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

வெள்ளெழுத்தினால் கண்களுக்கு வேறு பாதிப்பு ஏற்படுமா?

வேறு பாதிப்புகள் ஏற்படாது. இந்த வெள்ளெழுத்து 40 வயதுக்கு மேல் அனைவருக்கும் ஏற்படக்கூடிய இயல்பான வயது சம்பந்தப்பட்ட விஷயம்தான். ஒருவர் 40 வயதுக்கு முன்பு கண் மருத்துவரை அணுகாமல் இருந் திருக்கலாம். ஆனால் 40 வயதில் ஒவ்வொருவரும் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடி அணியவேண்டும். கண்ணாடியில் பைபோகல், புரோகிரசிவ்  என இருவகைகள் உள்ளன. கண்ணாடி அணிய விருப்பம் இல்லாதவர்கள்,

கண்ணாடி அணியாமலே வெள்ளெழுத்து குறைபாட்டை சரி செய்ய இயலுமா?

சரி செய்ய இயலும். அதற்கு நவீன அறுவை சிகிச்சை உள்ளது.  இந்த சிகிச்சையில் கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான லென்ஸை அகற்றி விட்டு, அந்த இடத்தில் விசேஷ செயற்கை லென்ஸ் (மல்ட்டி போகல்) பொருத்தப்படுகிறது. இந்த சிகிச்சை 2 கண்களிலும் அடுத்தடுத்து செய்யவேண்டும். இந்த சிகிச்சைக்கு பிறகு ஆயுள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டாம். தற்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் இந்த அறுவை சிகிச்சை ஒரு வரப் பிரசாதமாகும். காரணம், 40 வயதுக்கு மேல் இந்த சிகிச்சை செய்து கொண்டால் கண்ணாடி அணியாமல் இளமையான தோற்றத்துடன் இருக்கலாம். 40 வயதுக்கு மேல் கண்களில் ஏற்படும் மற்ற பாதிப்புகள் என்ன? 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்கள் கண்களையும் பாதிக்கும். எனினும் ஆரம்ப நிலையில் இவை கண்களில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. எனவே மேற்கண்ட நோய்கள் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை கண்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். இதனை லேசர் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

கண் பார்வை குறைவதற்கு வேறு காரணங்கள் உண்டா?

40 வயதுக்கு மேல் கண்களில் `க்ளோக்கோமா' என்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கண்ணின் அழுத்தம் இயல்பை விட அதிகமானால் அதனை க்ளோக்கோமா என்று அழைக்கிறோம். இந்த நோய் வயதானவர்களுக்கே வரும். கண்ணில் அழுத்தம் அதிகம் ஆவதால் பார்வை நரம்பு பலவீனம் அடைகிறது. இதன் விளைவாக பக்கப்பார்வை பறிபோகும். இந்த நோயால் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதை முழுமையாக சரிசெய்ய இயலாது.

க்ளோக்கோமாவின் அறிகுறிகள் என்ன?

க்ளோக்கோமா ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. எனவே 40 வயது ஆனவுடன் அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக ஏற்கனவே குடும்பத்தில் யாருக்காவது க்ளோக்கோமா பாதிப்பு இருந்தால் தவறாமல், மருத்துவரை அணுகவேண்டும். க்ளோக்கோமா நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து சரி செய்தால் பார்வை பாதிப்பு ஏற்படாது. தற்போது இந்த நோயை குணப்படுத்த பலவிதமான நவீன சிகிச்சைகள் உள்ளன. சொட்டு மருந்து தவிர நவீன லேசர் சிகிச்சையும் உள்ளது. இந்த சிகிச்சையால் அறுவை சிகிச்சையின் அவசியம் குறைந்து உள்ளது. க்ளோக்கோமாவின் தீவிரம் அதிகமானால் பார்வை மிகவும் மோசம் அடைந்து விடும்.

40 வயதிலேயே கண்புரை பாதிப்பு ஏற்படுமா?

பொதுவாக கண்புரை 50-55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே வரும். எனினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு முன்பே வர வாய்ப்பு உண்டு. குறிப்பாக சர்க்கரை கட்டுப்பாடு சீராக இல்லை என்றால் 40 வயதிலேயே கண்புரை வரலாம். இதை தவிர கண்ணில் அடிபட்டால் அல்லது ஸ்டிரொய்டு  வகை மருந்துகள் உட்கொண்டால் 40-45 வயதிலேயே புரை வர நேரிடும். இதனை கண்புரை அறுவை சிகிச்சையால் சரி செய்திடலாம்.