நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Sunday, 1 December 2013

ரோல்ஸ்ராய்ஸ் அந்தஸ்தை ஆட்டிப் பார்த்த இந்திய மன்னர்

 
அந்தஸ்தை கூட்டுவதற்காக ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவது இன்று நேற்றல்ல, தொன்று தொட்ட வழக்கமாக உள்ளது. ஆனால், உலக அளவில் ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருப்பதை அகவுரமாக நினைக்க வைத்தார் ஓர் இந்திய மஹாராஜா. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை மண்டியிட வைத்த அந்த மஹாராஜாவின் செயல் இன்று வரை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன வரலாற்றில் மாறாத வடுவாக இருந்து வருகிறது.
 
ஆல்வார் மன்னர்

ஆல்வார் மன்னரான ஜெய் சிங் ஒருமுறை லண்டன் சென்றிருந்தார். அங்குள்ள பாண்ட் சாலையில் சாதாரண உடையில் சென்று கொண்டிருந்த அவரது கண்ணில் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம் ஒன்று கண்ணில் பட்டது. உடனே, ரோல்ஸ்ராய்ஸ் ஆசையில் உள்ளே நுழைந்துவிட்டார்.

அவமரியாதை 
 
ஷோரூமில் இருந்த விற்பனை பிரதிநிதி சாதாரண உடையில் இருந்த மன்னருக்கு தகவல்களை கூறாமல் மிகவும் இளக்காரமாக பேசியுள்ளார். கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத அளவுக்கு வார்த்தைகளால் மன்னரை ஏளனப்படுத்திவிட்டார்.
கோபம் மவுனமாக ஓட்டல் அறைக்கு திரும்பிய மன்னர் ஜெய்சிங், தனது பணியாளர்களிடம் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூமுக்கு போன் போட சொல்லி கார் வாங்க வருவதை தெரிவிக்குமாறு கூறிவிட்டார். பின்னர், மன்னர் உடையில் தனது பரிவாரங்களுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது மன்னருக்கு ஷோரூமில் இருந்தவர்கள் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தனர்.

6 கார்கள் 
 
அப்போது, அந்த ஷோரூமில் நின்றிருந்த 6 கார்களையும் மன்னர் ஜெய்சிங் வாங்கியதுடன், முழுப் பணத்தையும் உடனடியாக செட்டில் செய்துவிட்டு வந்தார்.
 
குப்பை வண்டி 
 
ஊருக்கு வந்தவுடன் ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார். கார்கள் அரண்மனைக்கு வந்தவுடன் முதல் வேளையாக அனைத்து கார்களையும் குப்பை வண்டியாக்க உத்தரவிட்டார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் இந்த செய்தி ரோல்ஸ்ராய்ஸ் கார் உரிமையாளர்களுக்கு எட்டியது.

விற்பனை பெரும் சரிவு 
 
ரோல்ஸ்ராய்ஸ் கார்களை கவுரத்திற்காக வாங்கியவர்கள் மத்தியில் இந்த செய்தி மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், குப்பை வண்டியாக பயன்படும் கார்களை தாங்கள் வைத்திருப்பதை அகவுரமாக வாடிக்கையாளர்கள் நினைக்கத் தோன்றினர். இதனால், ரோல்ஸ்ராய்ஸ் கார் ஆர்டர் செய்திருந்த பலர் ஆர்டரை திரும்ப பெற்றனர். இதனால், ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனத்தின் விற்பனை படு மோசமடைந்ததால், வருவாயிலும் பெரும் இழப்பு ஏற்பட துவங்கியது.

மன்னிப்பு கடிதம் 
 
 நிலைமையை உணர்ந்து கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மன்னர் ஜெய்சிங்கிடம் கடிதம் மூலம் மன்னிப்பு கேட்டது. அத்துடன், ரோல்ஸ்ராய்ஸ் கார்களை குப்பை வண்டியாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு பாடம் கற்பிக்கவே இதுபோன்று செய்ததாகவும், அதனை ரோல்ஸ்ராய்ஸ் உணர்ந்து கொண்டதால், குப்பை வண்டியாக கார்களை பயன்படுத்த வேண்டாம் என்று பணியாளர்களுக்கு மன்னர் உத்தரவிட்டார்.
 
கார்கள் பரிசு 
 
மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல் குப்பை வண்டியாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பதிலாக 6 புதிய கார்களையும் பரிசாக வழங்கியது. இந்த நிகழ்வுக்கு பின்னர் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கியது.

Thursday, 22 August 2013

அண்ட்ராய்டு டிவைஸ்

::::::::::::: (Kilakarai Classified Global Info : IT) :::::::::::::

சைலன்டில் வைத்த அண்ட்ராய்டு தொலைபேசியை கண்டறிவது எப்படி?

How to find Misplaced android Mobile Phone kept in Silent Mode.?

பெரும்பாலும் நமது தொலைபேசியை இடம் தவறி வைத்திருப்போம். நாம் தொலைபேசியின் ரிங் ஒலியடக்கி வைத்திருந்தோம் என்றால், அதை கண்டுபிடிக்க மற்றொரு தொலைபேசியில் இருந்து அழைத்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

அண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜராக இருந்தால் மட்டும் 'Go to google.com/android/devicemanager.' இந்த தளத்திற்கு சென்றால் தானாகவே உங்கள் தொலைபேசியை இணைக்கும் மற்றும் செய்தி போன்று காண்பிக்கும்: 'கடைசியாக பயன்படுத்தப்பட்டது ஆகஸ்ட் 14, 2013. 6:42 PM. 574 மீட்டர் துல்லியம் கொண்டுள்ளது, மானெக் ஷா பரேட் மைதானம் பஸ் ஸ்டாப், கப்பன் சாலை, சிவாஜி நகர், பெங்களூர், கர்நாடகா 560001, இந்தியா. கடைசியாக அமைந்துள்ளது'.

சாதனத்தை கண்டுபிடிப்பதற்காக, ரிங் கிளிக் செய்யவும். சாதனம் 5 நிமிடங்கள் முழு கன அளவில் ரிங் ஒலிக்கும் . நீங்கள் அந்த ஒலியை நிறுத்துவதற்கு ஆற்றல் பொத்தானை அழுத்த வேண்டும்.

Monday, 15 April 2013

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!

Monday, 8 April 2013

சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!தற்போது சுகப்பிரசவம் என்பது குறைந்துவிட்டது. பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் நடைபெறுகிறது. பொதுவாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும் போது சிக்கல் ஏற்பட்டால், தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண்களும் சிசேரியன் பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது எற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே தான். ஆனால் உண்மையில் சிசேரியன் பிரசவத்தின் போது அவ்வளவாக வலி தெரியாவிட்டாலும், அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஆம், சிசேரியன் பிரசவத்தை தேர்ந்தெடுத்தால், அதற்கு பின் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொள்ள, கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


* முதலில் சிசேரியன் பிரசவம் என்றாலேயே வயிற்றை கிழித்து, ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுப்பது தான். அவ்வாறு ஆப்ரேஷன் செய்வதால், வயிற்றில் தழும்பானது வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும். பின் என்ன தான் செய்தாலும் போகாது. அதுமட்டுமின்றி அவ்வாறு அடிவயிற்றில் ஆப்ரேஷன் செய்யும் போது, பிற்காலத்தில் வேறு ஏதாவது ஆப்ரேஷன் வயிற்றில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும். * சுகப்பிரவத்தை விட சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்களுக்கு குறைந்தது 3 மாத ஓய்வானது அவசியம். வேலை செல்லும் பெண்களுக்கு இது மிகவும் பிரச்சனையாகிவிடும். ஏனெனில் அலுவலகத்தில் மகப்பேறு விடுப்பு மூன்று மாதம் என்பதால், அதற்கு மேல் விடுப்பு எடுத்தால், சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்பதை விட, குழந்தையுடன் அதிகமான நேரத்தை செலவழிக்க முடியாது. * பொதுவாகவே தசையில் ஏதேனும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் குடலிறக்கம் என்னும் ஒருவித புடைப்பானது உண்டாகும். குறிப்பாக சிசேரியன் பிரசவத்திற்கு பின் இந்த மாதிரியான குடலிறக்கம் ஏற்படும். அதிலும் சிசேரியன் பிரசவத்திற்கு பின் சரியான ஓய்வு எடுக்காவிட்டால், இறுதியில் குடலிறக்கத்திற்கு உள்ளாகக்கூடும். * ஒரு முறை சிசேரியன் பிரசவம் மேற்கொண்டால், அடுத்த முறை சுகப்பிரசவம் ஏற்படாது என்பதில்லை. ஆனால் பெரும்பாலானோருக்கு முதல் முறை சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் இருந்ததில்லை. மேலும் மருத்துவர்கள் இரண்டாம் முறையும் சிசேரியன் என்றால், இதற்கு மேல் குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். ஏனெனில் ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் சிசேரியன் செய்தால், பின் அதிகப்படியான பிதற்றல் ஏற்படும். * சிசேரியன் செய்த பின்னர் அடிக்கடி கடுமையான முதுகு வலியானது ஏற்படும். அதிலும் சிசேரியன் போது தையல்கள் போட்டிருப்பதால், ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும், இருமலின் போதும், தையல் போட்ட இடத்தில் ஒருவித அழுத்தம் மற்றும் வலியை உணர நேரிடும். இதனாலும் முதுகு வலி ஏற்படும்.


பிரதமராவதற்கு முன்பு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு 'தரகராக' செயல்பட்டார் ராஜிவ் காந்தி?


டெல்லி: நாட்டின் பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது ஸ்வீடன் நிறுவனங்களுக்கான தரகராக ராஜிவ்காந்தி செயல்பட்டிருக்கிறார் என்று விக்கிலீக்ஸ் அதிரடி தகவல்களை வெளியிட்டிருக்கிறது. தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களின்படி 1970களில் ஸ்வீடன் நிறுவனமான சாப்-ஸ்கானியா இந்தியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்தது. இதில் ராஜிவ் காந்தி இடைத்தரகாக செயல்பட்டிருக்கிறார். இந்தியாவின் போர் விமான கொள்முதலில் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் 1975ஆம் ஆண்டு ஆவணத்தில், ஸ்வீடன் தூதரக அதிகாரி ஒருவர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்து வந்த ராஜிவ் காந்தி தொழில்முனைவோர்' என்ற பெயரில் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்தார் என்று கூறியுள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆவணங்களையும் தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. ஆனால் இதை நிரகாரித்திருக்கும் காங்கிரஸ், விக்கிலீக்ஸின் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாகும். இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி நிராகரித்திருக்கிறது. பாரதிய ஜனதாவோ, விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்கள் மிக முக்கியமானவை. நாட்டின் அனைத்து போர் தளவாட கொள்முதலிலுமே சோனியா காந்தி குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். போர்தளவாட கொள்முதல் தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதே தி ஹிந்து நாளிதழ்தான் ராஜிவ் காந்தியின் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் 1989-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்க நேரிட்டதும் குறிப்பிடத்தக்கது.


Thursday, 31 January 2013

தீரன் சின்னமலைமாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.

 
தீரன் சின்னமலை ஓடாநிலை மணிமண்டபம்

வரலாறு

இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.
 
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

வெற்றி

 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

தூக்கிலிடப்படல்

 போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

 

கௌரவிப்பு

 முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

 இந்திய அரசு வெளியிட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு தபால் தலை