நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Friday, 25 November 2011

விஜய் அடுத்து நடிக்கும் துப்பாக்கி !

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில், விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில்எஸ்ஏ சந்திரசேகரனும் ஜெமினி பிலிம்ஸும் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

நண்பன் படத்தை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் விஜய் நடிக்கும் இந்த படத்திற்க்கும் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது


அகத்தீசுவரர் கோயில், தாராபுரம்காலை 6.30 முதல் பகல் 11.30 மணி, மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
நாம் எல்லாவற்றிலுமே வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், பல முட்டுக்கட்டைகள் நம் இலக்கை அடையவிடாது தடுக்கின்றன. இவற்றையெல்லாம் தகற்துத் தள்ளுபவராக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் அருளுகிறார். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு அருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கயிலாயத்தில் சிவபிரான், பார்வதிதேவியை திருமணம் செய்த போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லுமாறு, அகத்தியருக்கு சிவன் கட்டளையிட்டார். அங்கு செல்லும் வழியில், அகத்தியர் பல இடங்களில் இலிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டார். அமராவதி ஆற்றங்கரைக்கு வந்த போது, மணலில் ஒரு இலிங்கம் வடித்தார். அகத்திஸ்தியர் வடித்த இலிங்கம் என்பதால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், இலிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் வடிக்கப்பட்டது. இந்த ஊரே தற்போதைய தாராபுரம்.
பஞ்சபாண்டவர்கள் ஒரு ஆண்டு இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. திருமலை சுவாமி சித்தர் வழிபட்டுள்ளார். ராமேசுவரம், கும்பகோணம், காஞ்சிபுரம் நகரிலுள்ள கோயில்களில் உள்ள மணல் இலிங்கங்களுக்கு அபிசேகம் நடப்பதில்லை. ஆனால், இங்கு தினமும் அபிசேகம் நடந்து வருகிறது. எண்ணெய் காப்பு சாத்தும் முன் இந்த இலிங்கத்தில், மணலில் சேர்ந்துள்ள “காக்கா பொன்” என்னும் துகள் ஒளிர்வதைக் காணலாம். இந்த இலிங்கத்தை இங்கு நிறுவுமுன், இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட அகத்தியர், இவ்வூரில் காசியில் இருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அது முடியாமல் போனதால், அமராவதி ஆற்றை கங்கையாக எண்ணி, அதிலுள்ள மணலை பிடித்தே இலிங்கம் வடித்தார். இதனால், தடையில்லாமல் விரைவில் செயல்களை முடிக்க இந்த அகத்தீசுவரரை வணங்குகின்றனர். குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரவும், தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கவும், படித்து முடித்ததும் தாமதமின்றி வேலை கிடைக்கவும், முன்னேற்ற திருப்பங்கள் ஏற்படவும் பூஜை செய்து வரலாம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்சபூதங்களையும் வணங்கும் வகையில் ஒரே சன்னதியில் ஐந்து இலிங்கங்கள் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இவை உயரத்தில் மாறுபட்டவை. சிவராத்திரி மற்றும் பிரதோச காலங்களில் பஞ்சலிங்கங்களை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளும் கிடைக்கும். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி அம்பிகை சன்னதியில், கன்னியர்கள் திருமணத் தடையை நீக்கவும், திருமணமான பெண்கள் சுமங்கலி பாக்கியம் வேண்டியும் வழிபடுகின்றனர். அமராவதி ஆற்றில் குளித்து ஈரப்புடவையுடன் அம்பாளை பயபக்தியுடன் வணங்குவதை காணமுடிகிறது . அத்துடன் அம்பாள் சன்னதியிலோ, வீட்டிலோ திரிசதி 300 நாமாவளியை ஐந்து அல்லது ஒன்பது வெள்ளிக்கிழமை பூஜித்து வந்தால் திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு ஆகிய பலன்கள் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

கோயில் வாசலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி எழுந்தருளியுள்ளார். பெருமாளை வணங்கிவிட்டு அகத்தீசுவரர் கோயிலுக்கு உள்ளே செல்லும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெருமாள் மனக்குறையைத் தீர்த்து வைப்பவராக உள்ளார்.

Wednesday, 23 November 2011

Vithagan - Joshua Sridhar

Vithagan - Joshua Sridhar

Vithagan Tamil Movie, Vithagan Songs Free Download Music By Joshua Sridhar - Vithagan

Featuring : R. Parthiban, Poorna

Production : 7th Channel
Starring : R. Parthiban, Poorna
Director : R. Parthiban
Lyrics : R. Parthiban 

கொலை வெறி டி' பாடலுக்கு 18 லட்சம் ஹிட்!

மிழ்த் திரை இசை ரசிகர்கள் ஒரு புதிய சாதனை படைத்துள்ளனர். நடிகர் தனுஷ் தமிழையும், ஆங்கிலத்தையும் மிக்ஸ் செய்து, எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியாக உருவாக்கிய ஒய் திஸ் கொலை வெறி டி என்ற தமிங்கிலீஷ் பாடலுக்கு யூடியூபில் இதுவரை 18 லட்சம் ஹிட்கள் கிடைத்துள்ளதாம்.

3 என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவரது மனைவி ஐஸ்வர்யாதான் இதன் இயக்குநர். ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில்தான் இந்த ஒய் திஸ் கொலை வெறிடி என்ற வித்தியாசமான பாடல் இடம் பெற்றுள்ளது.

தமிழையும் ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து எந்த மொழிப் பாடல் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவுக்கு ஒரு வித்தியாசமான பாடலாக இது உருவாகியுள்ளது. இந்தப் பாட்டுக்குத்தான் திரை இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

 

இந்தப் பாடலை அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியிட்டனர். அதற்கு முன்பே இந்த பாடல் இணையதளங்களில் லீக் ஆகி விட்டது. இப்போது அந்தப் பாட்டுக்கு இதுவரை 18 லட்சம் ஹிட்கள் கிடைத்துள்ளதாம்.

தென்னிந்திய திரை இசை வரலாற்றிலேயே ஒரு பாடலை இத்தனை பேர் மாய்ந்து மாய்ந்து கேட்டது இதுவே முதல் முறையாகுமாம். அந்த வகையில் இது ஒரு சாதனை என்கிறார்கள்.

பாடல் வெளியாகி 4 நாட்களிலேயே இத்தனை பேர் கேட்டிருப்பது பெரிய சாதனை என்று கூறப்படுவதால் தனுஷும், ஐஸ்வர்யாவும் சந்தோஷமாகியிருக்கிறார்களாம்.


Song download here
Tamil Movie 3
Cast : Dhanush,Shruti Haasan,sivakarthikeyan
Music Director : Anirudh
Director : Aishwarya Dhanush
Produced by : Kasthuri Raja


Why this Kolaveri di Song - Download

Tuesday, 22 November 2011

ஒஸ்தி பாடல்கள் இலவசம்  Osthi (2011) 

Actors Simbu, Richa, Jithan Ramesh 
Director Dharani
Music Director : Thaman S
Producer Balaji Real Media Pvt Ltd
Website :
  Pondati 
   Singer : Silambarasan 
 Unnale Unnale 
   Singer : Thaman S, Rita
 Osthi Maamey 
   Singer : Baba Sehgal. Ranjith, Rahul Nambiar, Naveen
 Kalasalla 
   Singer : L.R.Easwari, T.Rajendar, Solar Sai 
 Neduvaali 
   Singer : Rahul Nambiar, MahathiDownload Mirrors:


Monday, 21 November 2011

புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை


கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். திராட்சைப் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.
இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.


கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும். இதற்கு திராட்சைச் சாறு அருமருந்தாகிறது.


ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பலச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.


ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிர்க்கு திராட்சை சிறந்த மருந்து.


சிறிய அளவில் எடுத்துக் கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு. திராட்சைப் பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள்.


அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாத உடம்புக்குள்ளானவர்களும் அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

Friday, 18 November 2011

டாட்டா நானோ டீசல் கார்

பெரும் ஆவலைத் தூண்டியுள்ள டீசல் நானோ காரை வரும் மார்ச்சில் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்கெட்டில் டீசல் நானோ நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து கார் நிறுவனங்களும் டீசல் கார்களை அறிமுகப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அதிக மைலேஜ், மிகக்குறைந்த விலை என்ற அஸ்திரத்தோடு டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ள டீசல் நானோ கார் மார்க்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஏஆர்ஏஐ நடத்திய சோதனை ஓட்டங்களில் டீசல் நானோ கார் லிட்டருக்கு 30கிமீ முதல் 34 கிமீ வரை மைலேஜ் தருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்திய மார்க்கெட்டில் அதிக மைலேஜ் கொடுக்கும் காராகவும் நானோ டீசல் மாடல் இருக்கும் என மார்க்கெட் பரபரக்கிறது.

இந்த நிலையில், வரும் மார்ச்சில் டீசல் நானோ காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் அறிமும் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல் மாடலை விட கூடுதல் விலை கொண்டதாக நானோ வந்தாலும் மற்ற நிறுவனங்களின் டீசல் கார்களின் விலையை ஒப்பிடும்போது நானோ டீசல் விலை குறைந்ததாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, 15 November 2011

புதிய பார்ச்சூனர் எஸ்யூவியை அறிமுகம் செய்ய டொயோட்டோ தீவிரம்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய பார்ச்சூனர் எஸ்யூவியை அறிமுகம் செய்ய டொயோட்டோ ஆயத்தமாகி வருகிறது. இதற்காக, பெங்களூரில் புதிய பார்ச்சூனர் சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரிமியம் எஸ்யூவி என்ற பெருமையை டொயோட்டோ பார்ச்சூனர் தக்க வைத்து வருகிறது. கம்பீரமான தோற்றம், சொகுசு என அனைத்திலும் நெஞ்சை அள்ளும் பார்ச்சூனர் இந்திய வாடிக்கையாளர் நெஞ்சங்களில் தனி இடத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், மார்க்கெட்டில் புதிது புதிதாக ஏராளமான எஸ்யூவி மாடல்கள் வந்த வண்ணம் இருப்பதால் பார்ச்சூனர் எஸ்யூவியை மேம்படுத்தி அறிமுகம் செய்ய உள்ளது டொயோட்டோ. மேலும், பெங்களூரில் புதிய பார்ச்சூனர் எஸ்யூவியின் சோதனை ஓட்டங்களை அந்த நிறுவனம் நடத்தி வருகிறது.

புதிய எஸ்யூவி 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வசதியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள் கூடுதல் அகலத்துடனும், புதுப்பொலிவுடனும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முன்பக்க கிரில்லிலும் கூடுதல் குரோம் பூச்சுடன் வரும் என்று தெரிகிறது
. அடுத்த ஆண்டு இந்த புதிய பார்ச்சூனர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், போட்டியை எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதமாக குறைந்த விலையில் 2 வீல் டிரைவ் பார்ச்சூனர் எஸ்யூவியை அறிமுகம் செய்ய டொயோட்டோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Monday, 14 November 2011

சுட்ட கவிதை .....

 சில நாட்களுக்கு முன்னர் வலையில் உலா வந்த போது என் கண்ணில் சிக்கிய சில கவிதைகள் உங்களால் பார்வைக்கு.....

அல்லது - பெண்!

கருவில் சுமந்து
உயிர் கொடுத்த தாயாக!
அல்லது,
அவளே என்னைப் படைத்த
கடவுளாக!

கைப் பிடித்து
கொஞ்சி விளையாடும் சகோதரியா!
அல்லது,
அவளே எனக்கு பாசவலையிட்ட
உயிராக!

உணர்வை பகிர்ந்து
இறுதிவரை தோள்கொடுத்த தோழியாக!
அல்லது,
அவளே என்னை உற்சாகமூட்டவந்த
தேவதையாக!

மனதை திருடி
உயிருடன் கலந்த காதலியாக!
அல்லது,
அவளே எனக்கென்று பிறந்த
அழகியாக!

மாலையிட்டு மணக்கோலத்துடன்
வாழ்க்கையை பகிரவந்த மனைவியாக!
அல்லது,
அவளே எனக்கு மற்றுமொரு
தாயாக!

கொஞ்சும் மொழியில்
என்னை மறக்கசெய்யும் மகளாக!
அல்லது,
அவளே எனக்கு இறைவனளித்த
பரிசாக!

இந்த உலகை
சொர்க்கமாக்க வந்த பெண்களாக!
அல்லது,
இவர்கள் இல்லா உலகம்
சூன்னியமாக!இமயம் வேண்டாம்...
 


எனக்கு இமயம் வேண்டாம்
குன்று போதும்
அல்லது
ஒரு கல்துண்டு மட்டும்!

எனக்கு கங்கை வேண்டாம்
நீரோடை போதும்
அல்லது
இலையில் ஓர் துளி மட்டும்!
எனக்கு வானம் வேண்டாம்
மேகம் போதும்
அல்லது
ஒரு நட்சத்திரம் மட்டும்!

எனக்கு ஆழ்கடல் வேண்டாம்
அலைகள் போதும்
அல்லது
அதன் சிதறல் மட்டும்!
எனக்கு பெருமழை வேண்டாம்
தூறல் போதும்
அல்லது
மண்வாசம் மட்டும்!

எனக்கு வைரம் வேண்டாம்
பவளம் போதும்
அல்லது
ஒரு முத்து மட்டும்!

எனக்கு நூலகம் வேண்டாம்
புத்தகம் போதும்
அல்லது
ஒரு தாள் மட்டும்!

எனக்கு மதங்கள் வேண்டாம்
கடவுள் போதும்
அல்லது
மந்திரச்சொல் மட்டும்!

 
எனக்கு சூரியன் வேண்டாம்
நிலவு போதும்
அல்லது
ஒரு மின்மினி மட்டும்!

எனக்கு காதல் வேண்டாம
நினைவுகள் போதும்
அல்லது
ஒரு முத்தம் மட்டும்!

எனக்கு சரித்திரம் வேண்டாம்
சம்பவங்கள் போதும்
அல்லது
ஒரு சாகசம் மட்டும்!

எனக்கு மெத்தைகள் வேண்டாம்
தாய்மடி போதும்
அல்லது
ஆறடி பூமி மட்டும!

இவை எல்லாம் நடக்க வேண்டாம்
எல்லோரும் நினைக்கவாவது வேண்டும்
அல்லது
இப்படி நிழல்களில் மட்டும்!


நன்றி : http://kolipaiyan.blogspot.com/