நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Tuesday, 31 January 2012

பெர்முடா முக்கோண மர்மங்கள்

இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.
÷”பிளைட்-19′ என்பது குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். இது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. இந்த விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்துகொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் இதுதான்:
÷”"விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானி லெப்டினென்ட் சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.”
÷இதைவிட மர்மமான இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலை மீட்பதற்காக கடற்படை விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக் கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த விமானம். சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த விமானத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே தொலைந்துபோய்விட்டது! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில் நடந்தது.
÷1872-ஆம் ஆண்டு 282 டன் எடைகொண்ட “மேரி செலஸ்டி’ என்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி “மேரி செலஸ்டி’ என்று அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில் மறைந்துபோனதாக பழைய கால செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
÷மேலும், இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. பார்படோஸ் தீவிலிருந்து கிளம்பியது “யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்’ எனும் ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.
÷”ஆரான் பர்’ என்பவர் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகள் “தியோடோசியா பர் அல்ஸ்பான்’, தெற்கு கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு “பேட்ரியாட்’ எனும் கப்பலில் பயணம் செய்தார். பின்பு, அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பெர்முடா முக்கோணத்தில் 1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவம் இது.
÷முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் “டக்லஸ் பிசி-3.’ மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.
÷அசோர்ஸிலிருந்து பெர்முடா செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனது. 1949 ஜனவரி 17-இல் ஜமைக்காவிலிருந்து, கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற இன்னொரு விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த இரண்டு விமானங்களும் தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான ஒரே ரக விமானங்கள். இதுவும் பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.
÷இன்னும் ஒரு பெர்முடா தகவல். முன்பு கந்தகம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது “எஸ் எஸ் மரைன் சல்பர் குயின்’ எனும் கப்பல். இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக சென்றுகொண்டிருந்தது. அதில் 39 பயணிகள் இருந்தார்கள். அந்தக் கப்பலிலிருந்து பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல் “காண முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது’ என்ற தகவலை மட்டும் பத்திரிகைகளில் காணமுடிந்தது.
÷மேலும், ஒரு வியப்பான சம்பவம் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது. இது நடந்தது 1921-இல். “ரய் ஃபுகு மரு’ எனும் ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து,”"கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது…! விரைந்து உதவிக்கு வாருங்கள்…”எனும் வார்த்தைகள் அபாய அறிவிப்பாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.
÷மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.
÷1962-இல் “பிளைட்-19′ தொலைந்துபோன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விமான ஓட்டி,”"நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை…” என்று தகவல் அனுப்பியதாக , அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. மேலும், வின்சென்ட் காடிஸ் என்பவர் “அர்கோசி’ எனும் இதழில் எழுதும்போது, இந்த விமானம் தொலைந்ததற்கு மாயச் சக்திகளே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடற்படை விசாரணைக் குழு அதிகாரிகள்,”"விமானம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது” எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தச் சமயத்தில் பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் உலக நாடுகளெங்கும் பத்திரிகைகளில் பிரசுரமாயின.
÷இந்த மர்ம நிகழ்ச்சிகளுக்கு மேலும் திகிலூட்டும் விதமாக,”நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்’ எனும் கட்டுரையும், “கண்ணுக்குத் தெரியாத வெளிகள்’ மற்றும் “சாத்தானின் முக்கோணத்தில்’ எனும் புத்தகங்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், “வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருக்கலாம். அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று எழுதப்பட்டிருந்தன.
÷கரீபியன் தீவு மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.
÷இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், “தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு’ என்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் தொலைதல்களுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சில எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும், இது மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வேலை என்று கதைவிடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
÷சில ஆய்வாளர்கள், “”பெர்முடா முக்கோணப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமங்களாகச் சேகரமாகியிருக்கின்றன. இந்த மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியைக் குறைத்து பெரிய நீர்க் குமிழ்களை உருவாக்கி கப்பல்களை மூழ்கடித்துவிடுகின்றன” என்று தெரிவிக்கின்றனர். மேலும் சில ஆய்வாளர்கள்,”"திடீர் மீத்தேன் வெடிப்புகள் சேற்று எரிமலைகளை உருவாக்கி கப்பல்களை மிதக்க முடியாமல் மூழ்கடித்துவிடுகின்றன” என்ற தகவல்களை வெளியிட்டனர்.
÷ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிலவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,”"உலகம் முழுதும் கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள் பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக, தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய “ப்ளேக்ரிட்ஜ்’ பகுதியில் இச்சேகரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், அக் கடற்பகுதியில் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடப்பதைப்போன்ற எந்த நிகழ்வுகளும்
நடப்பதில்லை. பெர்முடா முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக் குறைவு. எனவே, மர்மச் சம்பவங்களுக்கு ஹைட்ரேட்டுகள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தது.
÷இதுவரை ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.

இணைய தொடர்பு இல்லாமல் UPDATE செய்யலாம் உங்கள் அண்டி வைரஸ் - ஐ(OFFLINE UPDATE)

நாம் சாதரணமாக இணையத்தை பயன்படுத்தும் போதுதோ அல்லது நண்பர்களின் பெண் டிரைவ்  மூலம் எதாவது ஒரு தகவலை நம் கணினிக்கு கொண்டுவரும்போதுதோ, இணையத்தில் இருந்து ஏதேனும் ஒரு மென்பொருள் அல்லது ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது அதில் இருந்து நமக்கு தெரியாமல் கணினியை பாதிக்கும்  வைரஸ் நமது கணினியில் இருக்கும் மென்பொருளையோ அல்லது சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை அழிக்க முற்படலாம் . இதுபோன்ற செயல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க நாம் கணினியில்  ஆண்டி வைரஸ் போன்றவை இன்ஸ்டால் செய்திருப்போம். அவற்றை முறையாக அப்டேட் செய்தால் மட்டுமே  
அவற்றிகுண்டன செயல்களை அவை செய்யும்.. பெரும்பாலும் நாம் இதை செய்வதில்லை.

இணைய இணைப்பு இல்லவதர்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால் அதற்கு OFFLINE UPDATE என்னும் ஒரு மாற்று வழியுள்ளது .எல்லா 
ஆண்டி வைரஸ்களுக்கும் பெரும்பாலும் இதுபோன்ற OFFLINE UPDTAE  கிடைப்பதில்லை AVAST, AVIRA, ESET NOD 32 போன்ற ஆண்டி வைரஸ்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. 
இதில் எனக்கு தெரிந்தவரை EST NOD 32 ஆண்டி வைரஸ் நன்றாக உள்ளது. 


OFFLINE UPDATE எப்படி செய்வது என்பது குறித்த விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்1. முதலில் இணையத்தில் கிடைக்கும் OFFLINE UPDATE என்பதை டவுன்லோட் செய்துகொள்ளவேண்டும் 

2/. இல்லையெனில்   இங்கு சொடுகவும்

    1. EST Smart Security  5                http://www.wupload.com/file/1926983242/06.11.2011_eset.rar
                                          (OR)
                                              http://grupload.com/xznpmwcumnef/06.11.2011_eset.rar.html
    
    2. Offline Update for Version 5       http://grupload.com/xznpmwcumnef/06.11.2011_eset.rar.html
  
   3. Offline Update for version 3 & 4  http://www.wupload.com/file/1848744886/eset_upd.rar3. மேலே உள்ள படத்தை போன்று அதனை EXTRACT செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கீழுள்ள படத்தை போன்று கிளிக் செய்து (INSTALL)இன்ஸ்டால் என்பதை கொடுத்தால் c:\update  என்று வரும் அதை (RIGHT)ரைட் கிளிக் செய்து (COPY)கோப்பி செய்துகொள்ளவேண்டும்
 

4.  அதன்பிறகு ESET NOD 32 மெனுவில் (SETTING)செட்டிங் என்பதை தேர்வு செய்து (ADVANCED SETTING)அட்வான்ஸ் செட்டிங்  என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்


5. அடுத்து கிடைக்க பெரும் (MENU)மெனுவில் (UPDATE)அப்டேட் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

(கீழுள்ள படத்தை போன்று)

6. இப்போது கிடைக்கும் (MENU) மெனுவில் (EDI) எடிட் என்பதை தேர்வு செய்து நாம் ஏற்கனவே (COPY) கோப்பி செய்து வைத்துள்ள c  :\update   பேஸ்ட் செய்து add  என்பதை ஓகே கொடுத்து  close  செய்யவும். இப்போது அப்டேட் மெயின் மெனுவில் பார்த்தால் நாம் இணையத்தில் அப்டேட் செய்தது போல் அப்டேட் ஆகிருக்கும்

 கீழுள்ள படத்தை போன்று)குறிப்பு :
                     இது  ANTI VIRUS VERSION-க்கு ஏற்றாற்போல்  மாறுபடும்

Sunday, 29 January 2012

“TEA” சொல்லும் உண்மைகள்

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல்வதுண்டு’ இவற்றில் எது உண்மை?…

* டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல.
உண்மை: ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
* டீ குடிப்பதால் பல்லில் கறை ஏற்படும்.
உண்மை: டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `டீ’ச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.
* டீ குடிப்பது வயிற்றுவலிக்கு காரணமாகும்.
உண்மை: வயிற்றுவலி (அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும்போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.
* டீ எலும்புகளுக்கு கெடுதல் விளைவிக்கும்.

 
உண்மை: டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* டீ குடிப்பதனால் இரும்பு சத்து உடலில் சேர்வது குறைகிறது.
உண்மை: இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் `ப்ளேவோனாய்ட்ஸ்’ தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.
* உடலில் தண்ணீர் பற்றாக்குறை எனப்படும் `டிஹைட்ரேஷனை’ தேநீர் ஏற்படுத்தும்,
உண்மை: மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.
* டீ குடித்தால் உடல் எடை கூடும்
 
உண்மை: டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.

மேற்கண்டவை, புதிய ஆய்வுத் தகவல்கள். இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில், “மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.
உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ, உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.Saturday, 28 January 2012

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
4. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
7. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
9. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Friday, 27 January 2012

புயல் எச்சரிக்கை கூண்டுகள் எதை குறிக்கின்றது ?

டலில் மீன் பிடிக்கும் படகு ஓட்டிகள் மற்றும் கப்பல் மாலுமிகளுக்கு புரியும் வகையில் அந்தந்த துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. இதன் மூலம் காற்றின் வேகத்தை புரிந்து கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


எச்சரிக்கை கூண்டு 1 
புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதை குறிக்கிறது.

எச்சரிக்கை கூண்டு 2
புயல் தூரத்தில் இருப்பதை குறிக்கிறது.

எச்சரிக்கை கூண்டு  3
துறைமுகங்களில் வழக்கத்தை விட அதிகமாக காற்று வீசுவதைக் குறிக்கிறது.

எச்சரிக்கை கூண்டு  4
கடலில் புயல் உருவாகியுள்ளதையும்  பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள போதிய நேரமிருப்பதையும்  உணர்த்தப்படுகிறது.

எச்சரிக்கை கூண்டு  5,6,7
புயல் தீவிரமடையாததை குறிக்கிறது. மேலும், மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என உஷார்படுத்துகிறது.

எச்சரிக்கை கூண்டு 8,9,10
பெருத்த அபாய எச்சரிக்கை. மணிக்கு 120 முதல் 135 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

எச்சரிக்கை கூண்டு  11
வானிலை ஆய்வு மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு , பெருத்த சேதத்தை வுருவாக்கும்  என்பதை குறிக்கிறது.

மனிதனின் கட்டாயத் தேவையான கொழுப்பு அமிலம்...!

omega_3மனிதனின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் சர்க்கரை/மாவுப்பொருள், புரதம் மற்றும் கொழுப்பு தேவை. அதிலும் குழந்தைகளுக்கு புரதமும் கொழுப்பும் அதிகம் தேவை. கொழுப்பில், கிளிசராலின் மூன்று எஸ்டர்களும், கொழுப்பு அமிலங்களும் உள்ளன. வைட்டமின் A ,D , E & K போன்றவை கொழுப்பில்தான் கரையும். நம் உடலின் தோல், முடி போன்றவை நன்றாக இருக்கவும், உடலின் வெப்பநிலையை ஒரே அளவில் சீராக பராமரிக்கவும், செல்கள் நன்கு செயல்படவும், உடலுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கவும், நமக்கு கொழுப்பு கட்டாயம் வேண்டும். மேலும் கொழுப்பு உடலுக்கு வேண்டிய ஆற்றலை சேமித்தும் வைக்கிறது. நீங்கள் விரதம் என்று பட்டினி கிடக்கும்போது, உங்களுக்கு தேவையான சக்தியைத் தருபவர் சேமிக்கப்பட்ட கொழுப்புதான்..! அதிக கலோரி தரும் பொருளும் கொழுப்புதான்..! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் விளைவுதான் கொலஸ்டிரால்..!
இன்றியமையாத கொழுப்பு அமிலம் ஒமேகா 3!
  கொழுப்பே இல்லாத உணவை உண்பது என்பது சாத்தியம் அல்ல. அரிசியில் கூட கொஞ்சூண்டு கொழுப்பு உள்ளது. சில கொழுப்பு அமிலங்கள் நம் உடல் செயல்பாட்டுக்கு கட்டாயம் தேவை. நம் உடலால் உற்பத்தி செய்ய முடியாதவைகளையே, உடலுக்குத் தேவையான கட்டாய பொருள்கள் என்கிறோம். அது போல ஒரு முக்கியமான கொழுப்பு அமிலம்தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ( ω−3 fatty acids or omega-3 fatty acids) கடந்த 20 ஆண்டுகளாக, இதன் மகத்துவம், ஆராய்ச்சி மூலம் அறியப்பட்டு, மிகவும் மதிக்கப்படுகிறது. அப்படி என்ன இது செய்கிறது என்கிறீர்களா? இதயப் பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயமாக இதன் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
  ஒமேகா-3-கொழுப்பு அமிலம் என்பது ஒரு பூரிதமற்ற கொழுப்பு அமிலம் (poly-unsaturated fatty acid). இந்த அமிலம் பொதுவாக மீன், விதைகள் மற்றும் அதிக பசுமையான அனைத்துப் பொருள்களிலும் முக்கியமாக கீரை வகைகளில் காணப்படுகிறது. இது இதய நோய்கள், வீக்கம், சிலவகை புற்றுநோய்கள், சர்க்கரை நோய், கண் தொடர்பான வியாதிகள் போன்றவற்றிலிருந்து நமக்கு பாதுகாப்பு கவசம் தருகிறது. மேலும் சூலுற்ற பெண்ணின் கருப்பையில் வளரும் கருவின், மூளை நன்கு உருவாக ஒமேகா-3-கொழுப்பு அமிலம் அவசியம் தேவைப்படுகிறது. இது வளரும் சிசுக்களின் சரியான மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு செயல்பாடுகளுக்கு மிக முக்கிய தேவையாக இருக்கிறது.
அதனால்தான் குழந்தைகளுக்கான பால் பவுடரில் இது கலக்கப்படுகிறது. அதுதான் டோகொசா ஹெக்சனாயிக் அமிலம்/ஆல்பா லினோலெனிக் அமிலம் ( docosahexaenoic acid (DHA) / α-linolenic acid (ALA) எனப்படுகிறது. இது ஒமேகா-3-கொழுப்பு அமிலத்தின் வழியே உருவாகும் ஒரு வேதிப்பொருள். இது அதிகமுள்ள உணவு, கெட்ட கொழுப்பை(LDL - Low Density Lipid , VLDL - Very Low Density lipid ) குறைக்கிறது; நல்ல கொழுப்பை (HDL -High Density Lipid)அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த தமணிகளின் மேல் படிந்துள்ள கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் குறைப்பதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கு வயதான காலத்தில் ஏற்படும் நினைவு மறதி நோயை (Alzheimer's disease) தடுக்கவும் இது உதவுவதாக, 2005 ம் ஆண்டின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
 அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் காணப்படுகிறது. மீனில் மிகக் குறைந்த கொழுப்பே உள்ளது. மேலும் இதில் நமக்குத் தேவையான புரதம், வைட்டமின் A &D உடலின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், ஐயோடின், புளுரின் போன்ற ஏராளமான தாது உப்புக்கள் உள்ளன. இதில் கொஞ்சம் கூட மாவுப்பொருள் கிடையாது. மிக குறைந்த கலோரியே உள்ளது. அமெரிக்க இதய சங்கம் வாரத்திற்கு இருமுறை, மீன் சாப்பிடச் சொல்லி சிபாரிசு செய்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி, நிறைய உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், ரொட்டி, கேக், யோகர்ட் என்னும் இனிப்பான தயிர், குழந்தைகளுக்கான உணவுகள் இவற்றில் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் சேர்க்கின்றன . மீன் தவிர, இது சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றிலும் உள்ளது. 
  கடல் மீனின் நன்மைகள்..! 
   heart_303_copyநீங்கள் 150 கிராம் கடல் மீன்/கடல் உணவு சாப்பிட்டால், அது உங்களின் ஒரு நாளைய புரத தேவையின் 50 -60%த்தை நிறைவு செய்துவிடும். அனைத்துவித கடல் உணவுகளும், இறால் தவிர, குறைவான கொழுப்பு உள்ளவையே..! கடல் மீனில் 5%கும் குறைவான கெட்ட கொழுப்பே உள்ளது. இவைகளில், அதிக கொழுப்பு இருந்தாலும், அதனை இதிலுள்ள ஒமேகா-3-கொழுப்பு அமிலத்தின் ஆல்பா லினோலினிக் அமிலம் ( DHA - α-linolenic acid (ALA),எபிகோசாபெண்டானாயிக் அமிலம் ( EPA -eicosapentaenoic acid (EPA) ஈடுகட்டிவிடுகின்றன. வாரம் இருமுறை மீன் சாப்பிட்ட மாதவிடாய் நின்று போன சுமார் 3 ,500 பெண்களிடம் ஆய்வு செய்ததில் இவர்களின் கருப்பை புற்றுநோய் விகிதம் குறைந்துள்ளதாம். கருவுற்ற காலத்தில் நிறைய மீன் உண்டதால், குறைமாத குழந்தை பிறப்பும், எடை குறைவான குழந்தை பிறப்பும் குறைந்துள்ளதாம்.
டிமென்ஷியா(Dementia) என்னும் ஞாபக மறதி நோயை 30% கட்டுப்படுத்துகிறது. மிகவும் நாள்பட்ட நோய்களை சரியாக்குகிறது. மேலும் 2009ல் இதய நோய் உள்ளவர்ககுக்கு, மீன் சாப்பிடச் சொல்லி, பல நாடுகள் நடத்திய ஆய்விலும் இதய நோயாளிகளின், இதய நிலைமையில், சீரான நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.

ஒமேகா-3 -கொழுப்பு அமிலத்தின் சிறப்பு நன்மைகள்:
இரத்தக் குழாய் நோய்கள், இதயம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
கெட்ட கொழுப்பைக் குறைத்து, நமக்குத் தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
ஜியார்டியா பல்கலைக் கழக ஆய்வின்படி, உடல் எடையைக் குறைத்து சீராக்குகிறது.
மார்பகம், பெருங்குடல் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோயைத் தவிர்க்கிறது. மேலும் புற்றுநோய் பாதிப்பு வந்தவர்களுக்கும், மீன் உணவு உதவுகிறது.
மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவுவதால், அல்சீமர் மற்றும் மறதி நோயைக் கட்டுப்படுத்துகிறது. சிலருக்கு குணப்படுத்தியும் இருக்கிறது.
மூட்டு வாத நோயையும், வீக்கத்தையும் குணப்படுத்தும்.
கண் பார்வைக்கு பெரிதும் உதவும். மீன் உண்பதால், வயது மூப்பால் ஏற்படும் பார்வை பிரச்சினை தவிர்க்கப்படும்.
தோலை பளபளப்பாக, பளிங்கு மேனியாக வைக்க பணிபுரியும்.
மன அழுத்தம், சோர்வு, மன உளைச்சல் போனவற்றை விரட்டும்.
ஆஸ்துமாவின் நிவாரணி.
புற்றுநோய் வருவதை தவிர்க்கும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
தோலின் சொறி, சிரங்கு வராமல் பாதுகாக்கும்.
ஒற்றைத் தலைவலி, வராமல் விரட்டும்.
உடல் பருமனை வளர விடாது.
மீனை குழம்பில் போட்டு சாப்பிட்டால் மட்டுமே இந்த பலன்கள் கிட்டும். எண்ணெயில் பொரித்தால்....கொலஸ்டிரால் கூடும். கவனம் இதில் தேவை..!

Thursday, 26 January 2012

ரஜினி - திரைக்கு வெளியே சாதித்தது என்ன?

"இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா..." என்று ‘பாட்ஷா’ திரைப்படப் பாடலில் வரி ஒன்று வந்து போகும். 64வது பிறந்த நாள் கொண்டாடிய ரஜினிகாந்த்தின் நீண்ட, நெடிய திரையுலகப் பயணத்தை ஒரு முறை மீள்பார்வை பார்க்கையில், அந்த வரிகளில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்கிறது மனது. இருக்கலாம். இல்லாமலா, ஒரு தெய்வத்தை ஆராதிப்பது போல மாநிலம் முழுக்க டிசம்பர் 12ம் தேதி ரஜினி கட்&அவுட்களுக்கு பாலாபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடக்கும்?
இத்தனைக்கும், தமிழ் சினிமாவை புதிது, புதிதாய் நிறைய இளைஞர்கள் இன்றைக்கு ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். ஒன்றும் உருப்படி இல்லை என்றாலும் கூட, அவர்களுக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களை மையமாகக் கொண்டு பல கோடிகள் வர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களை விட இரு மடங்கிற்கும் அதிகமான வயதாகியும் கூட, இன்னமும் ‘மவுசு’ குறையாமல் வைத்துக் கொள்வது உண்மையாகவே சாகசம்தான். பேருக்குள்ளே காந்தம் இருக்கத்தான் செய்கிறது.
மக்களை ஆளுமைப்படுத்துகிற திறன், வாய்க்கப்பெறுவது சாதாரண காரியமல்ல. ஆனால், அந்தத் திறன் இருப்பது மட்டுமே போற்றுதலுக்கு உரியதுமல்ல. விகிதாச்சாரப்படி ஏறக்குறைய உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெரும்பகுதியை தனது ஆளுமையின் கீழ் வைத்திருக்கிறது மது என்பதற்காக, மது போற்றுதலுக்கு உரிய, ஆராதிப்பதற்கான பொருளாகி விடாது. ரஜினி விஷயமும் அப்படியே. அவருக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கலாம். அது மட்டுமே தகுதி ஆகி விடமுடியாது.
ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களின் ஆதரவுக்கு அப்பால், அந்த மனிதரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதே சரியான ஒரு மதிப்பீட்டை நமக்கு முன்வைக்கும். ரஜினியை அந்தக் கோணத்தில் நாம் அணுகினால், மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. லட்சக்கணக்கான பேர் அவரது பெயரை தாங்கிப் பிடித்துக் கொண்டு பின்னால் வருகிறார்கள் என்றால், சினிமாவில் அவர் காட்டிய பொய்யான பிம்பங்களின் வெற்றி அது. ரஜினி என்ற மனிதனின் நிஜத்துக்காக குவிந்த கூட்டமல்ல அது.

தொழிலாளர்களின் உரிமைக்குப் போராட, தானும் ஒரு சக தொழிலாளியாக... படு விலையுயர்ந்த காலணி, ஆடைகள் அணிந்தபடி வசனங்கள் பேசுவது, கெட்டவர்களை ஒழித்துக் கட்ட தாவிக் குதித்தும், எகிறிப் பாய்ந்தும் தாக்குவது எல்லாமே, சினிமாவுக்கான பொய் பிம்பங்கள்தானே? நிஜத்தில் ரஜினி யார்? அடித்தட்டு மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குறியாக்குகிற விலை உயர்வுகளின்போது, பன்னாட்டு நிறுவனப் படையெடுப்புகளால் சிறுதொழில் செய்பவர்கள் நிலைகுலைந்து நின்றபோது, பக்கத்து மண்ணில் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டபோது, மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் மனிதர்கள் மோதிக் கொண்டபோது.... சினிமா திரைக்கு வெளியே இருக்கும் ரஜினியால் என்ன சாகசங்கள் செய்யமுடிந்தது?
சிகரெட்டை மேலே விட்டெறிந்து, திரும்பி வரும்போது உதட்டால் ‘கேட்ச்’ பிடிக்கும் சாகசம், நியூட்டன் அரும்பாடு பட்டுக் கண்டறிந்த புவியீர்ப்புக் கொள்கைகளை பொய்யாக்குகிற அளவுக்கு தரையில் கால் படாமல் தாவித் தாவி வானத்தில் சர்க்கஸ் நடத்தும் செயல்கள்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறதே தவிர... நிஜ வாழ்க்கையில் அவரது ஒரு சிறு துரும்பளவு செயல் கூட இதுவரை போற்றப்பட்டதாகவோ, பின்பற்றப்படுவதாகவோ தகவல் இல்லை.
ரஜினி என்கிற மனிதரின் பொய் பிம்பங்கள் மட்டுமே காலம் கடந்தும் நிற்கிறது என்றால், அதில் பெருமைப்பட்டுக் கொள்ள எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. உலகம் கொண்டாடக்கூடிய தலைவர்களின் வாழ்வை புரட்டிப் பார்க்கையில், அவர்களது நிஜங்களே, புகழுக்குக் காரணமாய் நிற்பதைப் புரிந்து கொள்ளமுடியும். ‘ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?’ என்று சினிமாவில் பாடியவர் அவர். ஒழுங்காக இருக்கும் தலையை, அடிக்கடி கலைத்து விட்டுக் கொள்வதும், சிகரெட்டை புதுப்புது விதமாய் பிடிப்பதும் மட்டுமே, தங்கக்காசுகளைக் கொடுத்த மக்களுக்கு அவர் திருப்பித் தருகிற விஷயங்கள் என்றால், அது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக இல்லை.
சினிமாத்திரைக்கு வெளியேயும் அவர் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. பொய்களைப் புறந்தள்ளி நிஜத்தின் பக்கம் கவனம் திருப்புவாரா ரஜினி?


நன்றி  :http://www.keetru.com/

Wednesday, 25 January 2012

உலகின் முக்கிய ஆளுமைகளுடன், பேட்டி எடுக்கும் தொடர் விக்கிலீக்ஸ் இல் விரைவில் ஆரம்பம்

உலகை துகிலுரிக்கும் இணையதளமான "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், உலகின் முக்கிய ஆளுமைகளுடன், தான் பேட்டி எடுக்கும் தொடர் ஒன்றை விரைவில் துவங்கப் போவதாக அறிவித்து உள்ளார்.

அசாஞ்ச் தற்போது தன் மீதான பாலியல் வழக்கில் சுவீடனுக்கு நாடு கடத்தப்படும் விவகாரத்தில் சிக்கியுள்ளார். பிரிட்டனில் தங்கியுள்ள அவர் நேற்று இணையதளத்தில் விடுத்த அறிக்கை: "தி வேர்ல்டு டுமாரோ' என்ற தலைப்பில், 10 பாகங்களாக இந்த தொலைக்காட்சித் தொடர் வெளியாகும். இதில் உலகின் முக்கிய அரசியல்வாதிகள்,சிந்தனையாளர்கள், புரட்சியில் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட ஆளுமைகள் பலர் கலந்து கொள்கின்றனர். இத்தொடரின் நோக்கம், எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும்? லட்சிய சமுதாயமான யுட்டோப்பியாக இருக்குமா? அல்லது அதற்கு எதிர்மாறானதாக இருக்குமா? என்பது பற்றி இத் தொடர் அலசி ஆராயும். இத்தொடர், மார்ச் மாத மத்தியில் இருந்து துவக்கப்படும், என்று அறிவித்துள்ளார்.

Tuesday, 24 January 2012

கேரளாவுக்கு பதிலடி கொடுக்க பாண்டியாறு புன்னம்புழா திட்டம்?

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் முரண்டு பிடிக்கும், கேரள அரசுக்கு "செக்' வைக்க, பாண்டியாறு புன்னம்புழா திட்டத்துக்கு, தமிழக அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பாண்டியாறு புன்னம்புழா நீர்மின் திட்டம், 1969ம் ஆண்டில் முழு வடிவம் பெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து மரப்பாலம் பகுதி வரை, இதற்கான பணிகளை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, கூடலூர் சுற்றுப்புற பகுதிகளில் ஓடும், 10க்கும் மேற்பட்ட சிறு ஆறுகளை இணைத்து, பாண்டியாறு புன்னம்புழா நீரை, மின் உற்பத்திக்குப் பயன்படுத்த அணைகள் கட்ட திட்டமிடப்பட்டன. மரப்பாலம் பகுதியில், 42 மீ., உயரத்திலும், பாண்டியாறு பகுதியில், 62 மீ., உயரத்திலும், சோலாட்டி புழா பகுதியில், 65 மீ., உயரத்திலும், மூன்று அணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டது. இந்த அணைகள் கட்டப்படும் போது தேக்கி வைக்கப்படும் தண்ணீர், நீர்மின் திட்ட பணிகளுக்காக, மாயாருக்கு திருப்பி விடவும் திட்டமிடப்பட்டது. மின் உற்பத்தி பணிகளை, மசினகுடி அருகேயுள்ள சீகூர் மேற்கொள்ளவும், மின் உற்பத்திக்குப் பின் தண்ணீரை, கீழ் பவானி திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும், 14 டி.எம்.சி., தண்ணீரை, தமிழக, கேரள மாநிலங்கள் சரி சமமாக பங்கிடுவது என்றும், இதன் மூலம், 260 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும், அப்போது கணக்கிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு, 1,600 கோடி ரூபாய் செலவாகும் எனவும், அப்போது மதிப்பிடப்பட்டது.

கேரள அரசின் எதிர்ப்பும், அச்சமும்
கேரள அரசு, பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு காரணம், கேரளாவின் ஜீவநதியான சாலியார் ஆற்றின் நீர்வரத்து அடியோடு நின்றுவிடும் என்றும், அச்சம் தெரிவித்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பந்தலூர், இளம்பிராலி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் சிற்றாறுகள், கேரள எல்லையில் இணைந்து சாலியார், கரியம்புழா, பேப்பூர்புழா என, மூன்று நதிகளாக பிரிந்து, அரபிக் கடலில் கலந்து வீணாகி வருகிறது. அரபிக் கடலில் வீணாகும் தண்ணீரைத் தேக்கி வைத்து, நீர்மின் திட்டத்திற்கும், நீர்ப்பாசன தேவைகளுக்கும் பயன்படுத்தவே, தமிழகம் தரப்பில் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்துக்கு அதிக மின்சாரம் கிடைக்கும் என்பதே முக்கிய காரணமாக இருந்தது.

கிடப்பில் போடப்பட்டது ஏன்? 
பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் ஆய்வாளர்களை கொண்டு முதற்கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வாளர்கள் அரசுக்கு சமர்ப்பித்த தகவல்களின் படி, "நீலகிரியில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் 5000 ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் முழ்கும். இதில், 2500 ஏக்கர் வனப்பகுதியாகவும் இருக்கும். ஆதிவாசிகளின் குடியிருப்புகளும் பாதிக்கப்படும். தவிர, முதுமலை காப்பகத்தில் 27 கி.மீ., நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் போது வனவிலங்குகள் பாதிப்படையும் வாய்ப்புள்ளது' என ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டதை தொடர்ந்து, பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் அப்போது கிடப்பில் போடப்பட்டது.

முல்லைப் பெரியாறு பிரச்னை
அரசியல் லாபத்துக்காக முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரள அரசியல் கட்சிகள் பெரிதாக்கி வரும் நிலையில், பாண்டியாறு- புன்னம் புழா திட்டம் உள்ளிட்ட பிற முக்கிய அணை திட்டங்களையும் மாநில அரசு நடைமுறை படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும், கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளை போல, அணை விஷயத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, நீலகிரி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணைக்கும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எனினும், தற்போது எழுந்துள்ள அணைப் பிரச்னையால், மக்கள் மத்தியில் பாண்டியாறு அணை பற்றி பேசப்படுகிறது. அதேவேளையில், அரசின் சார்பில் இது குறித்து ஆய்வுகள் நடத்த எவ்வித தகவலும் எங்களுக்கு வரவில்லை' என்றனர்.

Monday, 23 January 2012

இராணுவத்தினரைக் கொலை செய்யும் கொடூர காணொளியை வெளியிட்ட தலிபான்கள்

பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் 15 பேரை மோசமாகப் படுகொலை செய்யும் காணொளிக் காட்சியை தலிபான்கள் வெளியிட்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 2.38 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியில் கடத்திச் செல்லப்பட்ட இராணுவ வீரர்களின் கண்களைக் கட்டி தலிபான்கள் அவர்களை வரிசையாக நிற்க வைத்துள்ளனர்.

பின்னர் அவர்களின் பின்னால் நின்று தலிபான்கள் ஒவ்வொரு உறுப்பினராக சுட்டு வீழ்த்துகின்றனர்.

தமது இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டமைக்கே, இவர்களைக் கொன்றதாகவும் அக்காணொளியில் தலிபான் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தலிபான் இயக்க உறுப்பினர்கள் கொலைசெய்யப்பட்டால் இத்தகைய கொலைகள் மேலும் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள் வட மேற்கு பாகிஸ்தானில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.

 
பின்னர் அவர்களின் சடலங்கள் இம்மாத ஆரம்பத்தில் மீட்கப்பட்டன.மேலும் இக்காணொளியில் கடத்திச் செல்லப்பட்ட இராணுவ வீரர் ஒருவர் இக்கடத்தல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதனை விளக்கும் பகுதியொன்றும் இடம்பெற்றுள்ளது.

தெரீக் ஈ தலிபான் அமைப்பு இக்கொலைகளுக்கு உரிமைகோரியிருந்தது. 


Saturday, 21 January 2012

உலக அழிவு உண்மைதான்!

2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில இணையதளங்கள் மூலமாகவும், மின் அஞ்சல் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வாயிலாகவும் அண்மைக் காலமாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.
அமெரிக்க துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த 'மாயன்' என்கிற சமூகத்தாரின் பஞ்சாங்கம் 2012ம் ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும், 2012ல் உலகம் அழிந்து விடும் என்பதை அவர்கள் அறிந்து இருந்ததனால்தான் அதற்கு மேல் அந்த பஞ்சாங்கம் தொடரவில்லை என்பதுமே இக்கூற்றினை பரப்புவோரின் வாதத்திற்கு ஆதாரமாகும்.
இன்னொரு சூரியன்
ஆகாயக் கோள்கள், நட்சத்திரங்கள் என்பன போன்றவற்றின் நிலைகளில் நேர்ந்திடும் மாற்றங்களையும் கூட இந்த வாதத்திற்கு சான்றாக அவர்கள் எடுத்தாளுகின்றனர். அவற்றுள் புதிதாக வந்த ஒரு கூற்றுதான் இன்னொரு சூரியன் தோன்றப் போகிறது என்பதும்!
வானியலை பற்றியும், நட்சத்திரங்களின் தோற்றம் - பரிணாமம் போன்றவை பற்றியும் எதுவுமே தெரியாது இருந்த காலத்தில் சூரியனையோ, சந்திரனையோ போல ஒளிர்கின்ற புதிய பொருள் ஒன்று வானத்தில் திடீரென தோன்றினால் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக பயந்திடத்தானே செய்திருப்பான்?
இன்னுங்கூட மிகுதியானவர்களுக்கு வானியல் பற்றி போதிய அறிவோ, விழிப்புணர்வோ இல்லாத நிலையில் - அடுத்த வருடம் நாம் இரு சூரியன்களை காண்போம் என்று ஓர் அறிவிப்பை ஏதாவது ஒரு விஞ்ஞானி வெளியிட்டால் வரவிருக்கும் ஓர் பேராபத்தின் முன்னறிவிப்பாகவே இருக்கக் கூடும் அது என்று பலரும் எண்ணத்தானே செய்வர்! அதற்காக அந்த பாமரர்களை குற்றஞ்சாட்ட முடியுமா?
இணைய தளங்களில்...
கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் அப்படி ஒரு செய்தி இணையதள வெளியீடுகள் சிலவற்றில் பிரசுரமாகி இருக்கின்றன. (நம் நாட்டு இணையதளங்களில் இச்செய்தி இடம்பெறவில்லை என்பது சற்று ஆறுதலான விசயம்) இதனைத் தொடர்ந்து உடனடியாக வேறு சில விஞ்ஞானிகள் அதனை மறுத்துக் கூறியபோதும் அந்த மாற்றுக் கருத்துக்கு - முந்தைய செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைத்திடவில்லை. எனவே அந்த தகவலின் அடிப்படை என்ன? உலகம் அழியத்தான் போகிறதா? என்பன பற்றி நாம் இங்கே சற்று ஆராய்வோம்.
நீர் சுள்ளான்
ஹைட்ரஜன் என்கிற நீரிய வாயு ஹீலியமாக மாறிடும் செயல்பாட்டின் மூலம்தான் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திர காம்பில்தான் இந்த செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும்போது ஹைட்ரஜனின் அளவு குறையக் கூடிய தருணத்தில் அதனால் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாமல் ஆகிவிடுகிறது. உட்புறத்தில் இருந்து கொண்டிருக்கும் வெப்பம் தணிந்து விட்டால் நட்சத்திரம் தனது ஈர்ப்பு சக்தியால் தானாகவே சுருங்கிப் போய் விடும். இவ்வாறு சுருங்கி விடும் நடைமுறையே மீண்டும் வெப்பத்தை உருவாக்கி விடும். அந்த வெப்பத்தால் ஒளிர்கின்ற நட்சத்திரம்தான் "நீர் சுள்ளான்" என்ற பெயரில் அறியப்படுகிறது. கடைசியில் வெப்பத்தை தொடர்ந்து தாங்கிட இயலாத நிலை நேரும் போது - ஒளியை உற்பத்தி செய்திட இயலாமல் ஆகி, நம் பார்வையை விட்டு அது மறைந்து விடுகிறது.
நாம் இன்று காண்கிற நமது சூரியனுக்கும் எதிர்காலத்தில் இப்படி ஒரு முடிவே நேர்ந்திடக் கூடும். இந்த அறிவியல் விளக்கம் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தான் கூறப்பட்டுள்ளது. இந்த சூரியனும், நட்சத்திரங்களும் கடைசி காலத்தில் செக்க சிவந்த பிரம்மாண்டங்களாக ஆகி அதன் பின்னர்தான் அவை 'நீர் சுள்ளான்'களாக ஆகிவிடும்.
சூப்பர் நோவா
ஆனால் சூரியனைவிட ஒன்றரை மடங்கிற்கு மேல் பெரிய அளவிலான கோள் வடிவ நட்சத்திரங்களின் விதி வேறுபட்டதாகும். அவற்றின் முடிவு அதி பயங்கர வெடிப்பின் மூலம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, இருட்டுப் பள்ளமாகவோ அவை ஆகிவிடும். அத்தகையதோர் வெடிப்பின் வாயிலாக வெளிப்படும் எரிசக்தி, சூரியனுக்கு இணையானதோர் நட்சத்திரம் அதன் ஆயுட்காலம் முழுமைக்கும் வீசுகின்ற அளவிற்கு இருக்கும். ஒரு நட்சத்திர சமூகத்தை விட அதிகமான ஒளியுடன் அப்போது அது காட்சி தரும். ஒரு நட்சத்திர சமூகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் இத்தகையதோர் மகா வெடிப்பின் தீவிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய வெடிப்புகள் 'சூப்பர் நோவா' என்ற பெயரில் அறியப்படுகின்றன.
திருவாதிரை நட்சத்திரம்
திருவாதிரை என்கிற செக்கச் சிவந்ததோர் வண்ணம் பெரிய நட்சத்திரமாகும். அதன் கோள் வடிவம் சூரியனை விட 20 மடங்கு பெரியதாகவும், அதன் விட்டம் பல நூறு மடங்கு பெரியதாகவும் இருக்கும். சூரியன் இருக்கும் இடத்தில் அது இருக்குமானால் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் பூமி ஆகிய கோள்களும் விரவிக் கிடக்கின்ற இதர பல கிரகங்கள் யாவும் அதனுள் ஆழ்ந்து - அமிழ்ந்து போயிருக்கும்! அந்த அளவுக்கு பிரம்மாண்டமானதாகும் திருவாதிரை என்கிற நட்சத்திரம்!
இந்த நட்சத்திரம் அடுத்த ஆண்டு ஓர் சூப்பர் நோவாவாக ஆகி வெடித்து சிதறும் என்றும், அப்போது அதன் ஒளி சூரியனின் ஒளிக்கு ஒப்பானதாக இருக்கும் என்றும் - ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு குயின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பிராண்ட் கார்ட்டர் அறிவித்தார்.
இது சரியல்ல என்றும், திருவாதிரை நட்சத்திரம் எப்போது சூப்பர் நோவாவாக ஆகும் என்பதை கனித்து முன்னறிவிப்பு செய்ய எவராலும் முடியாது என்றும் வேறு பல அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் திருவாதிரை சூப்பர் நோவாவாக ஆனாலும் கூட அது ஏறத்தாழ சந்திர ஒளியின் அளவுதான் பூமியில் தென்படும் என்றும் சுட்டிக்காட்டினர் அந்த அறிவியலாளர்கள். ஆயினும், இம்மாற்று கருத்துக்களுக்கு எந்த ஒரு இணையதளமும் உரிய முக்கியத்துவத்தை வழங்கிடவில்லை.
நாம் இன்று கற்றறிந்துள்ளவற்றின் அடிப்படையில் திருவாதிரையை போன்றதோர் நட்சத்திரம் நிச்சயமாக சூப்பர் நோவாவாக ஆகி விடும் என்பது உண்மையே! ஆனால் அது எப்போது நிகழும் என்பதை கணித்துச் சொல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நாம் இன்னும் எட்டவில்லை. என்றாவது ஒருநாள் அதற்கான அறிவாற்றலை மனிதன் அடையக் கூடும். அதன் கால அளவைக்கூட இன்று நம்மால் கணக்கிட்டு கூறமுடியாது.
பூமி சாம்பலாகி விடும்
நாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று! ஆனால் அது எப்போது? எங்கே? எப்படி நேரும் என்பதை எவறாலும் கூறிவிட இயலாது அல்லவா. அதுபோலத் தான் திருவாதிரை வெடித்துச் சிதறும் என்பது திண்ணம். ஆனால் அது நிகழும் நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது.
சூரியன் அதன் முடிவை நெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமி எரிந்து சாம்பலாகி விடும். அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரை பூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும் அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனித இனம் அதுவரை பூமியில் நீடித்து இருக்குமா என்பதை யாராலும் கூற முடியாது.
கட்டுப்பாடற்ற புவி வெப்பத்தின் மூலமாகவோ, சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடிய போர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரின வாழ்வு மண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனித இனமும் எஞ்சியிருக்கக் கூடும். ஆயினும், நாம் அறிந்துள்ளதோ, அறியாததோ ஆன காரியங்களின் மூலம் இந்த பூவுலகின் ஆயுள் ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.
அழிவு நிச்சயம்
உதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒரு பெரும் பொருள் நிலை குலைந்து வேகமாக வந்து பூமியில் மோதினால் இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விட அதுவே போதுமானதாகும். அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு தான் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் - அப்படி எதுவும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறிட எவராலும் இயலாது.
சூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவு ஏதேனும் காரணத்தால் சற்றே கூடினாலும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாத நிலை நேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவே என்று அறிவியலாளர்கள் கூறுவர். என்றாலும், நாம் இன்று காண்கிற இந்த பிரபஞ்சம் என்றாவது ஒரு நாள் அழிந்து விடும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.
ஆயினும் உடனடியாக இந்த உலகம் அழிந்து விடப்போவதில்லை என்பதும் அதுபோலவே நிச்சயமானதேயாகும். அப்படி நிகழ்வதற்கேற்ற எந்த ஒரு சாத்தியக் கூறினையும் தற்போது நம்மால் காண முடியவில்லை. இதே உலகம் அழியப் போகிறது என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டும் காரணிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அவை அடிப்படையற்றவை என்பது புலனாகும். இத்தகைய வதந்திகள் இதற்கு முன்னரும் பலமுறை பரவியுள்ளன.
அறியாமை
உலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்.
2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும். அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.
இப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒரு வேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை!
அறிவுடைமை
ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.
உலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது. ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக எவராலும் கூறவும் முடியாது. ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப்பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.

Friday, 20 January 2012

2011 இல் அதிகமாக சம்பாதித்த 10 இணையதளங்கள். 700 மில்லியன் வாசகர்கொண்ட Facebook 16ம் இடத்தில்

பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும்
பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் iTunes இணையதளமாகும். பத்தாவது இடம் என்றவுடன் சாதாரணமா நினைச்சிடாதிங்க இந்த தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் 60.21$ இந்தியமதிப்பில் Rs. 3130 ரூபாய். ஆண்டிற்கு $1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் வருகிறது.
ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும். உலகம் முழுவதும் பணம் பணம் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள இணையதளமாகும். இந்த தளம் வினாடிக்கு 91.90$ ஆண்டிற்கு $2,900,000,000 சம்பாதிக்கிறது. 
பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ள தளமாகும். டிக்கெட்டுகள் வாங்குவதில் இருந்து விமானங்களின் நேரங்கள் மற்றும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த தளம் வருடத்திற்கு $2,937,010,000 வருமானம் பெற்று தருகிறது. இந்த தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் $93.07 ஆகும். இந்த தளத்தின் உரிமையாளர் Mark schroeder என்பவர். 
Expedia
7. AOL
இந்த தளம் இணையத்தில் பல்வேறு தலைப்புகளில் லேட்டஸ்ட் செய்திகளை பகிரும் தளமாகும். அலேக்சாவில் 61 வது இடத்தை பிடித்துள்ள தளமாகும். இந்த தளத்தின் உரிமையாளர் எரிக பிரின்ஸ் என்பவர். இந்த தளம் வினாடிக்கு 99.41$ ஆண்டிற்கு $3,137,100,000 வருமானமும் தளத்தின் உரிமையாளருக்கு பெற்று தருகிறது.
இதுவும் ஆன்லைனில் செய்தி பகிரும் தளமாகும். இதன் உரிமையாளர் மார்சல் வாஸ் என்பவர். வினாடிக்கு 107$ வருமானமும் ஆண்டிற்கு $ 3,400,000,000 வருமானமும் பெற்று தருகிறது. 
Reuters
இந்த தளத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இணையத்தில் மிகப்பிரபலமான தளமாகும். News, Search, mail என பல்வேறு வசதிகளை கொண்டது. அலேக்சாவில் 4 இடத்தில் உள்ளது. இதனுடைய ஆண்டு வருமானம் $6,460,000,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $204.71 ஆகும்.
yahoo
4. ebay
Amazon தளத்தை போன்று இதுவும் ஆன்லைனி பொருட்களை வாங்க உதவும் இணையதளமாகும். இந்த தளத்தின் உரிமையாளர் Pierre Omidyar என்பவர். வினாடிக்கு 276.56$ ஆண்டிற்கு $8,727,360,000 சம்பாதிக்கிறது. 
ebay
அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் இந்த தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த தளத்தின் ஆண்டு வருமானம் $8,727,360,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு 276.56$ சம்பாதிக்கிறது.
comcast
2. Google
அப்பாடா நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த தளம் வந்துவிட்டது. இதனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இணையத்தின் நாடித்துடிப்பு இந்த தளம் ஒரு நாளைக்கு இதன் சேவை நிறுத்தப்பட்டால் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள். கூகுளின் ஒரு வருடத்திற்கு வருமானம் $23,650,560,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $749.46 ஆகும். இந்திய மதிப்பில் Rs. 38971(இப்பவே கண்ண கட்டுதே) ஆகும். 
Google search engine
வெற்றிகரமாக முதல் இடத்திற்கு வந்தாச்சு. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் தளமாகும். கூகுளிடம் ஒப்பிடுகையில் இந்த தளத்தின் வாசகர் வரத்து , அலெக்சா மதிப்பு அனைத்தும் குறைவு தான் ஆனால் பொருட்களை வாங்க மொத்த சந்தையாக இந்த தளம் உள்ளதால் தான் கூகுளை காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறது.
Amazon
என்னடா ஏதோ மிஸ் ஆகுதேன்னு பாக்குறீங்களா!! பெரும்பாலானவர்களின் விருப்பமான அலேக்சாவில் 2 இடத்தில் உள்ள பேஸ்புக் தளத்தை பட்டியலில் காணவில்லையே என யோசிக்கிறீங்களா?
கூகுளையே ஆட்டி வைத்த பேஸ்புக் தளம் இல்லையே என்பது எல்லோருக்கும் வரக்கூடிய சந்தேகம் தான் ஆனால் அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் 16 வது இடத்தை பிடித்துள்ளது. அந்த தளத்தின் ஆண்டு வருமானம் $1,000,000,000 வினாடிக்கு $31.69 வருமானம் ஈட்டுகிறது.

Thursday, 19 January 2012

தலைவலி

உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபுறமும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும். ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும். ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.

நோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.

1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.

2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.

3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.

4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.

5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவதால் தலைவலி வரலாம்.

6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடையதால் தலைவலி உண்டாகும்.

7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலைவலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.

9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்கவாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.

10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.

மருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.

1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache) 2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension) 3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation) 4. தசைச் சுருக்கம் (Muscle Spasm) 5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache) என மருத்துவர்கள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.

மருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.

அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்.

Monday, 16 January 2012

எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்...

நாளை  இந்திய வரலாற்றில் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒப்பற்ற மக்கள் தலைவரின் பிறந்த நாள் இந்த நன்னாளில் அவரது வரலாற்றை காண்போம் ........
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.


இளமைப்பருவம்

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரனும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

இல்லறம்

எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். அவர் தங்கமணியை மணந்தார். தங்கமணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த இல்லற வாழ்க்கையால் தங்கமணி கற்பமானார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.

செல்லப் பிராணிகள்

எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரை நியமித்திருந்தார்.

திரைப்பட வாழ்க்கை

1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

அரசியல் வாழ்க்கை

இவர் , முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடை பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும்,தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988 இல் பிரிந்து 1989ல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அவர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியிலிருந்த போதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

மக்கள் தலைவரின் கடைசி நாட்கள்.......

1987 டிசம்பர் 2...
ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.

டிசம்பர் 5...
அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.

டிசம்பர் 6... சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 15..
எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.

டிசம்பர் 20... ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா... நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்...’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்...’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச் சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 22... சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 23...
மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்...’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்... கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.

டிசம்பர் 24...
அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்...’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை.

ஜான் பென்னிகுவிக்

தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick).1841 ஆம் ஆண்டு ஜனவரி 15 -ல் புனேவில் பிறந்தவர் . அவர் பொறியியல் படிப்பை லண்டனில் முடித்துவிட்டு மீண்டும் 1860 ம் ஆண்டு நவம்பர் 11 -ல்  இந்தியா திரும்பினார் .

இந்தியாவில் பிறந்ததாலோ என்னவோ இந்தியாவின் மீது அவருக்கு அளவுகடந்த பாசம். கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலந்தது. மற்றொருபுறம்  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் பல விவசாய நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடந்தது . இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மமறுத்ததோடு அரசின் பணத்தை வீணடித்த காரணுத்துக்காக ஆங்கிலேய அரசு  அவரை பணிநீக்கம் செய்த்தது. கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னி குக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய முழு உருவச்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் இருக்கும் பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுக் படம் வைக்கப்பட்டுள்ளது. இன்றும் பல விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுக் என்று பெயர் வைக்கும் இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம், லோயர்கேம்ப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1 கோடி செலவில் பென்னிகுவிக் சிலையுடனான மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட உள்ளது