நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Sunday, 16 February 2014

உறவுகள் மேம்பட

# எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள். (Diplomacy)
விட்டுக் கொடுங்கள்.(Compromise)
# சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான்
ஆக வேண்டும் என்று உணருங்கள்.(Tolerance)
# நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்
.(Adamant Argument)
#குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.(Narrow Mindedness)
# உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை
அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும்
விடுங்கள்.(Carrying Tales)
# மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி
நினைத்து கர்வப்படாதீர்கள்.(Superiority Complex)
# அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
(Over Expectation)
# எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு
சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
# கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
# அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
# உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல்
கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.(Flexibility)
# மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற
நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.(Misunderstanding)
# மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான
சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)
# புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை
சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
# பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்
தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து
அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
# அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
# பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர
வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.

இல்லாதவர்களைவிட ... இயலாதவர்களுக்கு உதவுங்கள்

என் வாழ்க்கையில் தினமும்
காண்கிறேன்...
கை,கால் ஊனமுற்றவர்கள்
பார்வையற்றவர்கள்
பசியில் வாடும் குழந்தை
முதுயமையில் வறுமை
குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும்
பெண்கள்,
மனநலம் பாதிக்கபட்ட இளைஞர்கள்.
தங்க இடம் இல்லாமல் ரோட்டோரத்தில்
தூங்கும் குடும்பம்...
இப்படி இருக்கும் நம் நாட்டின்
நிலையை பார்க்கும் போது கண்கள்
கலங்குகிறது...
எப்போது தான் இவர்கள்
நிலை மாறும்???
'ஒருவன் அளவில்லாத பணத்துடன்
தூங்குகிறான்,
ஒருவன் அளவுக்கு மீறிய பசியுடன்
தூங்குகிறான் '
கண்டிப்பாக இந்த நிலை மாற
வேண்டும்.
நம்மால்
முடிந்ததை ஏதாவது செய்தே ஆக
வேண்டும்....thanks to fb

கோடையில் உடம்பு 'ஜில்'லுன்னு இருக்க சில டிப்ஸ்!


சாலையில் இறங்கி நடந்தாலே தகிக்கிறது வெயில். வெப்பத்தின் தாக்கத்தினால் உடம்பில் வியர்வை ஊற்றெடுக்கிறது. அதோடு மட்டுமல்லாது கோடை கால நோய்களாக தலைவலி, வயிற்று வலி, வாய்புண், தோல் வெடிப்புகள், வேர்க்குரு என வரிசைக்கட்டி நிற்கும். கோடையை சமாளிக்க நமது உணவுப்பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள் அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.

நீர்ச்சத்து அவசியம்
கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். தாகத்துக்கு குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்சை தவிர்ப்பது நல்லது. பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. குழந்தைகளுக்கு தெருவில் விற்கும் குச்சி ஐஸ்களை வாங்கித்தரக் கூடாது. அதே சமயம் தண்ணீர் மட்டுமே கோடை இம்சைகளை துரத்திவிடாது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது நல்லது. அதிகமாய் வேக வைத்து அல்லது பொரித்து உண்பதில் பலன் கிடைக்காது. உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி,மீன்,பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

வெள்ளரிக்காய்
 கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் பல நோய்களுக்கும் பயன்படக்கூடியது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.விரும்பினால் மிளகுப்பொடி சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளரியில் சோடியம் அதிக அளவில் உள்ளது. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், குளோரைட், இரும்புச்சத்து போன்றவையும் உண்டு. விட்டமின் ஏபி,சி உள்ளன. வியர்வை மூலம் உடலில்இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்யக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு. வெயிலில் அதிகம் அலைவதால் உடலில் குறைந்து போன நிறத்தை மீண்டும் பெற வெள்ளரி சாறை சருமத்தின் மீது பூசலாம். இளநீரில் விட்டமின் பி,சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற பல தாது உப்புகள் உள்ளன. கோடையை சமாளிக்கவும், உடலை பாதுகாக்கவும் இளநீர் ஏற்ற பானம்.

வெட்டி வேர் பானம்
 கோடைக்கு குளிர்ச்சித்தருவது வெட்டி வேர். புல் வகையைச் சேர்ந்த வெட்டி வேர் மிகுந்த மணம் கொண்டது. இது வாசனைப் பொருள் தயாரிக்க பயன்படுகிறது. வெட்டி வேருடன் சந்தனக் கட்டையை சேர்த்து தண்ணீரில் ஊறவைத்து அந்தண்ணீரை அருந்துவது உடல் வெப்பத்தை தணிக்கும். மேலும், வியர்க்குரு, வேனல் கட்டிகளை குணப்படுத்தும். வெட்டி வேர் விசிறியை நீரில் நனைத்து விசிறிக்கொள்ள குளிர்ச்சியாக இருக்கும். கோடை காலத்திற்கு ஏற்றது. கோடைக்காலத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கப் போகும்முன் ஒன்று இரண்டு பழம் சாப்பிட்டு படுக்கலாம். இதனால் மலைச்சிக்கல் தீரும். ஆஸ்துமா, நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. சாத்துக்குடி சாப்பிடுவது தாகத்தை தணிக்கும்; வீரியத்தைக்கூட்டும். நோய் எதிர்ப்பு ஆற்றலும் சாத்துக்குடிக்கு உள்ளது என்பதால் கோடையில் தினமும் ஒரு சாத்துக்குடியாவது சாப்பிடுவது நல்லது.

 பொரித்த உணவு தவிர்க்கவும்
 கோடைகாலத்தில் மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது. உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும். குளிர்ந்த நீர், பூண்டு, பீட்ரூட், மிளகு, திராட்சை, பைன் ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும். கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ப்ரெஞ்ச் ப்ரை, சிக்கன் பிரை வகைகளை ஒதுக்கிவிடுங்கள்.

*கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல்
பொலிவு பெறும்.

*தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன்,ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.

*தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற
விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட
சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

*வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும்.குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக்கூடாது.
இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.

*கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் மினரல் வாட்டரை அடிக்கடி
சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

*கோடை காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதற்கு வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத
வெடிப்பு படிப்படியாக மறையும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும்,
காலுக்கு செருப்பும் அவசியமாகும்.

*உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால்
உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிக அளவு சோப்புகளையும் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

*கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். வெள்ளரி,தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக
சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம்.இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

*வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும்
இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை
தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகம் குடிக்கலாம்.

*வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

*ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள்
திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம்.
தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

*வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ளவேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.

*கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம்,
அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்துதிரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

விஷமாகும் குடிநீர் பாட்டில்கள்


குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.

குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

நவபாஷாணம்

பாஷாணம்

பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். பாஷாணத்தில் 64 வகையுண்டு. 64 பாஷாணத்தில் நீலி என்பது ஒரு பாஷாணம்.இந்த நீலி எனும் பாஷாணம் 63 பாஷாணங்களின் விஷத்தன்மை முறிக்கக்கூடியது. நவ பாஷாணம் என்றால் ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் கண்ட விதி முறைகளை உபயோகித்துக் கட்டுவதாகும்.

நவ (ஒன்பது) பாஷாணம்

நவ பாஷாணம் என்பது சித்தர் மரபறிவியலாகும் நவபாஷாணம் கட்டுவது என்பது ஒரு சித்தர் வேதியியல் முறையில் வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக்கொண்ட பாஷாணத்தின் அணுக்களை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பை உருவாக்குவதே சித்தர்களின் வேதியியல் ஆகும். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களைக் கொண்டது. அவை:
எண்பாஷாணம் (அ) விஷம்
1சாதிலிங்கம்.
2மனோசிலை
3காந்தம்
4காரம்
5கந்தகம்
6பூரம்
7வெள்ளை பாஷாணம்
8கௌரி பாஷாணம்
9தொட்டி பாஷாணம்
"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - போகர்
அதற்கான நவீன வேதியல் விளக்கம்.
கௌரிப் பாஷாணம்: Arsenic Penta sulphite (Arsenic pentasulfide is an inorganic compound contains arsenic and sulfur with the formula. The identity of this reddish solid remains uncertain. Solids of the approximate formula As2S5 have been used as pigments and chemical intermediates but are generally only of interest in academic laboratories, Arsenic and many of its compounds are especially potent poisons. Many water supplies close to mines are contaminated by these poisons. Arsenic disrupts ATP production through several mechanisms.)
கெந்தகப் பாஷாணம்: Sulfur (Elemental sulfur is non-toxic, but it can burn, producing sulfur dioxide. Although sulfur dioxide is sufficiently safe to be used as a additive in small amounts, at high concentrations it harms the lungs, eyes or other tissues. In organisms without lungs such as insects or plants, it otherwise prevents respiration. Sulfur trioxide and sulfuric acid are similarly highly corrosive, due to the strong acids that form on contact with water)
சீலைப் பாஷாணம்: Arsenic Di sulphite
வீரப் பாஷாணம்: Mercuric Chloride
கச்சாலப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
வெள்ளைப் பாஷாணம்: Arcenic Tri Oxide
தொட்டிப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
சூதப் பாஷாணம்: Mercury
சங்குப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை+

சித்தர் வேதியியல்

மேற்கண்ட ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும். இந்த ஒன்பது பாஷாணங்களை திரவமாக்கி மீண்டும் திடமாகக ஒன்பது வகை விறகுகளும் (எரிபொருட்களும்), ஒன்பது தடவை வடிகட்ட ஏதுவாக ஒன்பது வடிகட்டிகளும் கையாளப்பட்டன.
சித்தர்கள் பாஷானங்களைக் கட்டும்போது அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர். எரு, வறட்டி இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். காடைபுடம் 1; கவுதாரி 3; சேவல் 10; பன்றி 50; கனம் 700; கசம் 1000 என்றும், வறட்டி எண்ணிக்கையைக் கொண்டு புடத்தின் வகை குறிப்பிடப்படும். புடம்போடுவது என்பது சித்தர்களின் மற்றொரு வேதியியல் பிரிவு எனலாம்.
சித்த மருந்துக் கட்டு ஒவ்வொன்றுக்கும் அவற்றின் சேர்க்கைக்கும், தயாரிப்புக்கும் ஏற்றவாறு புடங்களின்வகை இருக்கும். சித்த மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புடங்களின் பட்டியல் இது;
புடத்தின் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கை
எண்புடத்தின் பெயர்எரு அல்லது வறட்டி எண்ணிக்கை
1காடைப் புடம்1
2கவுதாரிப் புடம்3
3குக்குடப் புடம்10 (அ) 8
4வராக புடம்50
5கஜம் (அ) யானை புடம்500 (அ) 1000
6கன புடம்700 (அ) 800
7மணல் மறைவுப் புடம்800
8கோபுடம்1000
நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம் தரும் புட வகைகளும் சித்தர்களால் பயன்படுத்தப்பட்டன. அவை: வரிசை எண் புடம் பெயர் பயன்படும் பொருள்.
எண்புடம் பெயர்பயன்படும் பொருள்
1கோபுர புடம்மணல்
2பாணிடப் புடம்தண்ணீர்
3உமிப் புடம்உமி
4தானியப் புடம்நெல்
5சூரியப் புடம்வெயில்
6சந்திரப் புடம்நிலவொளி
7பருவப் புடம்பௌர்ணமி நிலவு
8இருள் புடம்அமாவாசை இரவு
9பனிப்புடம்பனி
10பட்டைப் புடம்மரத்தூள்
11நிழற்புடம்சூரிய ஒளி படாத அறை

நவ பாஷாணக் கட்டு

நவ பாஷாணக் கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமானது எனலாம். ஏனென்றால் நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை கொண்டுள்ளதாம். மேலும் பாஷாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர் வீச்சு, கட்டுபவரின் மனோநிலையை மேம்படுத்துகிறதாம். நவ பாஷாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வசசிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடுகிறது என்று சித்தர்கள் நம்பினார்கள்.

போகர் சித்தர்

போகர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர். வேட்கோவர் வகுப்பைச் சார்ந்தவர். சர்வ சாத்திரங்களையும் கற்றுத் துறை போகியவர். இவர் சித்தத்தை அடக்கியதால் மட்டும் சித்தர் அல்ல, இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர் இவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் என்று அறியப்படுகிறார்.
இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும், ஆன்மீகத்தில் ஞான் சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. நவ பாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். நவ பாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார் என்பது உறுதி செய்ய இயலாத செவிவழி செய்தியாகும். அவை உள்ள இடங்கள்
  • பழனி தண்டாயுதபாணி (முருகன்) கோவில், திண்டுக்கல் மாவட்டம் .
  • குழ‌ந்தை வேல‌ப்ப‌ர் கோவில், பூம்பாறை, கொடைக்கான‌ல், திண்டுக்கல் மாவட்டம். கொடைம‌லைச‌ரிவில்,பூம்பாறையில் உள்ள இக்கோவில் மிக‌ப்ப‌ழ‌மை வாய்ந்த‌து என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும், சமண கால சிலை அழகும் சான்று.
  • மூன்றாவது சிலை யாரோ ஒரு வம்சத்தினர் வீட்டில் வைத்து பூசை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. .
போகர் மூன்று நவ பாஷாண சிலைகளையும் செய்த இடம் தமிழ்நாட்டில், வருஷ நாடு, வத்திராயிருப்பு என்ற பகுதியில். சதுரகிரி மலையில் கோரக்கர் குகை இருப்பது பற்றியும், இவர்கள் பயன்படுத்திய நவபாஷாணக் கலவைகளை கட்டிய இடம் இங்கு உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இத்தகவலை உறுதி செய்யும்படி சித்தர் பாடலோ அல்லது வேறு ஆதாரமோ கிடைக்கவில்லை.
ப‌ழ‌னி ம‌லைக்கோவிலின் தென்மேற்கு திசையில் உள்ளது “போகரின் ஜீவ சமாதி” இங்கு அவ‌ர் பூசித்த‌ “புவ‌னேசுவ‌ரி அம்ம‌ன் சிலையும், ம‌ர‌க‌த‌ லிங்க‌மும் இன்றும் பூசையில் உள்ளது இந்த‌ ச‌ன்னிதியில் இருந்து முருக‌னின் திருவ‌டி நிலைக்கு உள்ள சுர‌ங்க‌ பாதையில் சென்ற‌ போகர் திரும்ப‌வில்லை.


மகா சித்தர் போகர் வரலாறு


போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது.

மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.

ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.
உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால்
பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான்.

பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு : சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால், இந்த பூமியில் அவதரித்தவர் போகர். இவரின் தந்தை ஒரு முழு தமிழர்.இவர் வணிக தொழிலில் ஈடுபட்டு, கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று வருபவர். அப்படி வணிகத்திற்காக சீனா சென்ற போது,தான் சந்தித்து பழகிய, சீனா நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான் அய்யன் போகர்.தம்முடைய பத்து வயது வரை சீனா நாட்டில் வளந்த போகர்,பத்து வயது முடிந்த பின் தன் பெற்றோருடன் தமிழ் மண்ணிற்க்கு வந்து சேர்ந்தார்.


அதன் பிறகு தன்னுடைய 25 வயது நடக்கும் போது, நண்பர்கள் சிலருடன் வணிக கப்பல் ஒன்றின் மூலம் தாம் பிறந்த மண்ணான சீன நாட்டிற்க்கு சென்று வந்தார். தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு சில ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றதாகவும், பின்பு ஏட்டு படிப்பினால் பயன் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து,வாழ்க்கை கடலில் கரை சேர,ஞான கல்வி ஒன்றே தேவை என்று உணர்ந்து,அதற்கான ஆன்மிக தேடலில் இறங்கி உள்ளார்.


இயல்பாகவே இறை பக்திமிக்கவரான தந்தையும், சீனா நாட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருந்தாலும்,மண வாழ்விவில் ஈடுபட, தொடங்கிய பின்னர்,தன் கணவர் வழி நின்று,அவரோடு இணைந்து இறை வழிபாட்டில்,ஈடுபாடு கொண்ட தாயாரும்,போகரின் ஆன்மிக வாழ்விற்கு அடிதளமாக இருந்தனார்.


அப்பொழுது பழனியில் நிறைந்து வாழ்ந்த,சித்தர்கள்,யோகிகளின் நட்பு ஏற்பட்டு, போகர் சுவாமிகளும் சித்த மார்க்கத்திலே ஈடுபட துவங்கினார். பெரும்பாலும் பழனிமலையில்,மேலுள்ள குகையிலும்,சில நேரங்களில் பழனிமலையை, சுற்றி இருக்கும் மலைகளிலும் தவயோகத்தில் ஈடுபட்டு வரலானார்.


முற்பிறவிகளில் செய்த தவபலனோடு,இப்பிறவியில் செய்த தவ பலனும் சித்திக்க, சித்தருக்கு எல்லாம் மகா சித்தர் ஆனார். முருகக்கடவுளின் மேல் அதிகமான பக்தி கொண்டிருந்த போகர் சுவாமிகள், முருகனையே வழிபடும் கடவுளாக கொண்டிருந்தார். அதோடு சித்த மருத்துவம்,ரசவாதம்,நவபாஷண ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தேர்ந்தார். அகத்தியர் போகரே வேதியலின் தந்தை என்று புகழ்கிறார்.

நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது.


இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது. துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.
ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'மிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.


இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது?

இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.

அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.

சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.

அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.

போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டுபுலிப்பாணி ஆகாய மார்க்கமாக பழனி அருகே உள்ள கன்னிவாடி மலை  வந்தடைகிறார் . சகல கலைகளையும் மறந்து ஒரு சாதாரண மனிதரைப் போல் உள்ள குருவை எண்ணி புலிப்பாணி கண்ணீர் வடித்தார். போகர் அவரை தேற்றி,உனக்கு அஷ்ட மகா சித்திகளும் கைவர பெற்றுள்ளது சீடனே எனக்கு நீ குருவாக இருந்து அவற்றை போதித்துவிட்டால், நான் மீண்டும் பழைய நிலையை அடைந்து விடுவேன், என்றார் இருந்தாலும் ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி,  , தண்டம் ஒன்றை நிறுவி அதற்கு அனைத்து சித்துக்களையும் உபதேசிக்க போகர் அருகில் அமர்ந்து கேட்டு சகல சித்துக்களையும் கைவரப்பெற்றார் 

 போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.,


100 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் ஈரோடு - பழநி ரயில் திட்டம்: 49 ஓ-வை அழுத்தத் தயாராகும் 3 மாவட்டங்கள்

தாராபுரம் - பழநி ரயில் தடத்தில் உள்ள கிராமங்களை இப்போதே தேர்தல் பிரச்சாரம் களைகட்டிவிட்டது. தேர்தலை புறக்கணிக்கும் 49ஓவை அழுத்தச் சொல்லி, வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், இரவு நேர திண்ணைப் பிரச்சாரங்கள் என களைக்கட்டத்தொடங்கிவிட்டன. ரயில்வே மக்கள் பணிச் சங்கமும், வாக்காளர் பேரவையும் இணைந்து தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளன.
100 ஆண்டு திட்டம்
ஈரோடு- பழநி ரயில் திட்டம் 1915ல் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1952ல் தாராபுரம் கொளத்துப்பாளையம் மறைந்த கே.என்.லிங்கசாமி காலத்தில் தொடங்கிய போராட்டம் தற்போது வரை நிறைவேறவில்லை. கிட்டத்தட்ட ஒரு ரயில் பாதை திட்டத்திற்காக இத்தனை ஆண்டுகாலம் போராடிய மக்கள் வேறு யாரும் இருக்க முடியாது. 100 ஆண்டுகளை நெருங்கும் வேளையில் 3 தலைமுறைகளை கடந்த மிக நீண்ட நெடியபோராட்டம் இது.
இத் திட்டமானது, ஈங்கூர், சென்னிமலை, காங்கயம், தாராபுரம், தாசநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி உள்ளடக்கிய 91 கி.மீ பாதையாகும். இப் பகுதியில், சர்வே பணிகள் முடிக்கப்பட்டு, நில ஆர்ஜிதப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றன. மாநில அரசு நில ஆர்ஜித பணிகளை துரிதமாக முடித்து மத்திய அரசிடம் அளித்திருந்தால், இந் நேரம் இந்தப் பாதையில் ரயில்கள் சென்று கொண்டிருக்கும் என்கின்றனர் ரயில்வே மக்கள் பணிச் சங்கத்தினர்.
திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கியத் திட்டம் என்பதால் இப் பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், 2010ல் இறுதி சர்வே முடிவடையும் தருவாயில், காங்கயம், சென்னிமலை, பகுதியில் நிலம் சர்வே பணிகளை நிறுத்தி வைக்குமாறு ரயில்வே துறை அறிவுறுத்தியதால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தொழில் பகுதி
காங்கயம் பகுதியில் ஜமுக்காளம், கைலி, கைத்தறி தொழில்களும் தேங்காய்பருப்பு தொழிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தாராபுரம் பகுதியில் விவசாயமும், நூற்றுக்கணக்கில் அரிசி ஆலைகளும் உள்ளன. இப் பகுதியிலிருந்து பழநி மலைக்குச் செல்லும் முருக பக்தர்கள் ஏராளம். இவர்களுக்கு ஈரோடு -பழநி ரயில் திட்டம் ஒரு வரப்பிரசாதம். காங்கயம் பகுதி கிரானைட் மற்றும் கல், ராஜஸ்தான் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ரயில் போக்குவரத்தின் வருமானம் பெருமளவு அதிகரிக்கும்.
திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, மிகவும் வேகமாக சர்வே பணிகள் நடைபெற்றன. ரயில் பாதையில், எங்கு பாலம் வர வேண்டும்? நிலையங்கள் எங்கெங்கு வர வேண்டும் என நில அளவை முயற்சிகள் நடந்தன. இப்போது வருமானம் இல்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. பல ஆண்டு மக்கள் கோரிக்கையை புறக்கணிப்பது சரியல்ல;
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கி முயற்சி எடுத்த எம்.பி கார்வேந்தனுக்கு பாராட்டு விழாவும் நடத்தினோம். அவரும் ரயில் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கோரி இது தொடர்பாக நடைபயணம் மேற்கொண்டார். இத் திட்டத்தால் நேரிடையாக 7 லட்சம் பேரும், மறைமுகமாக 25 லட்சம் பேரும் பயனடைவார்கள்.
சுதந்திரத்திற்கு பின் இத்தனை எம்பிக்கள் கிடைத்தும் ஒரு திட்டத்தை நிறைவேற்ற ஏன் இவ்வளவு தயக்கம் என கேள்வி எழுப்புகிறார் ஈரோடு தாராபுரம் பழநி ரயில்வே மக்கள் பணிச் சங்க பொதுச் செயலாளர் லிங்கம் சின்னச்சாமி.
பிரதமரிடம் வலியுறுத்தல்
இந்த ரயில் திட்டத்திற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்த முன்னாள் எம் பி கார்வேந்தன் கூறியது:
சாம்ராஜ் நகர் முதல் பழநி வரை 2004-2005 ஆண்டு திட்டம் போடப்பட்டது. பயணிகள் தவிர சரக்குப் போக்குவரத்திற்கும் பிரதானமான பாதை தான் இது. 400 அரிசி ஆலைகள் இப் பகுதியில் உள்ளன. இதில் வட மாநிலத்திலிருந்து நெல்லாக கொண்டு வரப்பட்டு அரிசியாக இங்கிருந்து வட மாநிலத்துக்கு செல்கிறது. 2005-2006ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
திட்டக்குழு, ரூ.284 கோடி இந்த திட்டத்திற்கு அறிவித்தது. இத்திட்டத்தை நிறைவேற்ற 2008ம் ஆண்டு ஈரோடு பழநி பாதயாத்திரை பயணம் மேற்கொண்டோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இது தொடர்பாக பிரதமரிடம் மனு அளித்துள்ளேன். மத்திய அரசு நிதியோடு மாநில அரசு சற்று நிதி ஒதுக்கினால் இத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்கிற ஒரு கருத்தும் இதற்காக போராடுபவர்கள் மத்தியில் உள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற, தொகுதி மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து அவற்றை தீர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் சொல்லி வருகிறார். ஆனால், இப் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பது தொடர்பான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
இந்த 3 மாவட்ட மக்களின் 100 ஆண்டு பிரச்சினையை சம்பந்தபட்டவர்களுக்கு யார் புரிய வைப்பது?

Friday, 14 February 2014

Tamil Keyboard

Tamil Keyboard

1. Bamini Tamil Keyboard Layout
Bamini font is well known font for Tamil typing, it's the type writer font for Tamil Typing, Here we are showing layout of Bamini font Keyboard style. Candidates who are seeking to learn Tamil Typing they can start typing by mapping following image of Bamini font and English key mapping. 
BaminiKeyboardLayout
1. Tamil Inscript Keyboard
Tamil Inscript Keyboard
2. Tamil Phonetic Keyboard
Tamil Phonetic Keyboard

3. Tamil99 Keyboard Layout
Tamil Keyboard Tamil 99
3.1 Tamil 99 Keyboard with ^
Keyboard Tamil99 with
3.2 Tamil 99 Keyoard with ^#
Tamil Keyboard tamil99 with
4. Tamil Type Writer Keyboard Layout
Tamil typewriter keyboard layout
4.1  Tamil Type Write Keyboard Layout with ^
Tamil typewriter with shift
4.2 Tamil Type Writer Keyboard Layout with ^ #
Tamil Type writer 1

Tamil typing tool and Online Typing

online Tamil type

http://tamil.indiatyping.com/Tamil Typing Software Free Download

For type in Tamil langauge or tamil typing you will need a software. Here we are providing a free software for donwload and type in tamil. Features of this software is given below:
1. You can donwload ans install it on your system, you don't need internet or any tamil font installation to access this software.
2. The software has many keyboard option you can type in any keyboard you like.
3. On the fly help for suggest you correct word.
4. Auto completion option for fast working.
5. ofcourse it Free.

Instruction to Install Tamil Typing Software

Step 1: Download the Tamil Typing Software From Link given Above
Step 2: A file will download is a compressed file, extract the file with any zip opener like winzip or other software.
Step 3: After extracting the file you will find setup file.
Step 4: Double click on Set up File now the software will install on your system.
Step : 5 After Suceessful Installation of software you need to Configure it to Type in Tamil.

Instrctions to Configure Tamil Typing Software

Step 1: Go to Contral Panel
Step 2: Click on Change keyboard or Other Input Methods

Step 3: Click on Change Keyboard Option

Step 4: Click on Add Button at Text Services and Input Languages window
Step 5: Now Search for Tamil Language in the Add Input Language window where you will find so many languages. Select Tamil Indic Input IME 1 [V 5.0]. and click on OK Button. then apply and ok.
Step 6: Now Click on EN button at taskbar at the bottom of your desktop. It is the language Bar. Select Tamil India Option in Language Bar. You can also use shortcut key Alt+Shift to switch between the languages.
Step 7: After Selecting Tamil you will find a little window appear like this on the corner at date and time display.
Step 8: Now click on keyboard option you will find many Tamil keyboard options, Select one of your choice and Type in Tamil. You can also see the Tamil keyboard layout in keyboard option.