நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday 28 September 2011

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்


இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.




சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.



எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர்   கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து  பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.

இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன. 

8 comments:

  1. Thalappai parthu oru Viramani sisyarin kindalaga irukkum enru padithen. Ithu sambanthamana Nasa athikarapoorva vibaram kidaitthal mikka magilzhchi.

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றிகள் ............

    ReplyDelete
  3. BOSS...WE ARE VERY HAPPY TO READ THIS,
    BUT PLS GIVE THE PROOFS, REPORTS FROM NASA IF ANY...

    ReplyDelete
  4. கருத்துக்கு நன்றி நண்பரே ........
    விரைவில் உங்களுக்கு ஆதாரத்தை தர முயல்கிறேன் ..........

    ReplyDelete
  5. ஆதாரம் தேவை நண்பரே. திருந்அள்ளாறில் நடக்கும் குற்றங்களுக்கு அந்தக் கடவுள் என்ன செய்த்தது?

    ReplyDelete
  6. கருத்துக்கு நன்றி நண்பரே ........
    விரைவில் உங்களுக்கு ஆதாரத்தை தர முயல்கிறேன் .......... மேலும் , இதை தவறு என்று சொல்லவில்லை சனிபகானின் சக்தி என்றுதான் சொல்ல வருகிறேன் ....... தவறு இருப்பின் மன்னிக்கவும் ...........

    ReplyDelete
  7. ஏனுங்கோ நெசமாலுமே உண்மைதானுங்களா? என்னால் நம்பவே முடியவில்லை. இந்திய வானவியல் அறிஞர்களின் (அந்தக் கால ஜோதிடர்கள் தானுங்கோ) அறிவை எப்படி பாராட்டுவது. அதை விட உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  8. என்னங்க முத்து........... ஒரு மேட்டர சொன்னமுனா நம்போனும் அத உட்டுப்போட்டு , கேள்வியெல்லாம் கேக்ககூடாது .........
    (நம்ம கோயமுத்தூர் பக்கங்களா ? ) கருத்துக்களுக்கு நன்றி .......... தொடர்ந்து எழுதுங்கள் ,

    ReplyDelete

கருத்துக்கள்