நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Monday, 14 November 2011

சுட்ட கவிதை .....

 சில நாட்களுக்கு முன்னர் வலையில் உலா வந்த போது என் கண்ணில் சிக்கிய சில கவிதைகள் உங்களால் பார்வைக்கு.....

அல்லது - பெண்!

கருவில் சுமந்து
உயிர் கொடுத்த தாயாக!
அல்லது,
அவளே என்னைப் படைத்த
கடவுளாக!

கைப் பிடித்து
கொஞ்சி விளையாடும் சகோதரியா!
அல்லது,
அவளே எனக்கு பாசவலையிட்ட
உயிராக!

உணர்வை பகிர்ந்து
இறுதிவரை தோள்கொடுத்த தோழியாக!
அல்லது,
அவளே என்னை உற்சாகமூட்டவந்த
தேவதையாக!

மனதை திருடி
உயிருடன் கலந்த காதலியாக!
அல்லது,
அவளே எனக்கென்று பிறந்த
அழகியாக!

மாலையிட்டு மணக்கோலத்துடன்
வாழ்க்கையை பகிரவந்த மனைவியாக!
அல்லது,
அவளே எனக்கு மற்றுமொரு
தாயாக!

கொஞ்சும் மொழியில்
என்னை மறக்கசெய்யும் மகளாக!
அல்லது,
அவளே எனக்கு இறைவனளித்த
பரிசாக!

இந்த உலகை
சொர்க்கமாக்க வந்த பெண்களாக!
அல்லது,
இவர்கள் இல்லா உலகம்
சூன்னியமாக!இமயம் வேண்டாம்...
 


எனக்கு இமயம் வேண்டாம்
குன்று போதும்
அல்லது
ஒரு கல்துண்டு மட்டும்!

எனக்கு கங்கை வேண்டாம்
நீரோடை போதும்
அல்லது
இலையில் ஓர் துளி மட்டும்!
எனக்கு வானம் வேண்டாம்
மேகம் போதும்
அல்லது
ஒரு நட்சத்திரம் மட்டும்!

எனக்கு ஆழ்கடல் வேண்டாம்
அலைகள் போதும்
அல்லது
அதன் சிதறல் மட்டும்!
எனக்கு பெருமழை வேண்டாம்
தூறல் போதும்
அல்லது
மண்வாசம் மட்டும்!

எனக்கு வைரம் வேண்டாம்
பவளம் போதும்
அல்லது
ஒரு முத்து மட்டும்!

எனக்கு நூலகம் வேண்டாம்
புத்தகம் போதும்
அல்லது
ஒரு தாள் மட்டும்!

எனக்கு மதங்கள் வேண்டாம்
கடவுள் போதும்
அல்லது
மந்திரச்சொல் மட்டும்!

 
எனக்கு சூரியன் வேண்டாம்
நிலவு போதும்
அல்லது
ஒரு மின்மினி மட்டும்!

எனக்கு காதல் வேண்டாம
நினைவுகள் போதும்
அல்லது
ஒரு முத்தம் மட்டும்!

எனக்கு சரித்திரம் வேண்டாம்
சம்பவங்கள் போதும்
அல்லது
ஒரு சாகசம் மட்டும்!

எனக்கு மெத்தைகள் வேண்டாம்
தாய்மடி போதும்
அல்லது
ஆறடி பூமி மட்டும!

இவை எல்லாம் நடக்க வேண்டாம்
எல்லோரும் நினைக்கவாவது வேண்டும்
அல்லது
இப்படி நிழல்களில் மட்டும்!


நன்றி : http://kolipaiyan.blogspot.com/