நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Tuesday, 11 February 2014

இரும்பு வளையத்துக்குள் சசிகுமார்

நடிகரும், இயக்குநருமான சசிகுமார், இரும்பு வளையத்துக்குள் இருக்கிறார் என்றும், அவரை எளிதில் யாருக்கும் நெருங்க முடியாது என்றும் புதுமுக இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படம் 'பிரம்மன்'. இப்படத்தை புதுமுக இயக்குநர் சாக்ரடீஸ் இயக்குகிறார். இவர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், நளதமழந்தி ஆகியப் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

பிரம்மன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சாக்ரடீஸ், "சுப்புரமணியபுரம் படத்தைப் பார்த்தப் பிறகு சசிகுமார் சாரை ஒரு இயக்குநராக நான் காதலித்தேன். பிறகு நாடோடிகள் படத்தை பார்க்கும் போது அவர் ஒரு நடிகராக, ஹீரோவாக என் மனதில் பதிந்தார். அதனால் தான், இந்த கதையை நான் எழுதிய போதே, என் மனதில் அவர் வந்தார்.

கதையை தயாரி செய்துவிட்டு, தயாரிப்பாளரையும் ஓகே செய்துவிட்டு, இந்த கதையை சசிகுமார் சாரிடம் சொல்ல முயற்சித்தேன், சுமார் இரண்டு ஆண்டுகளாக அவரை என்னால் அனுக முடியவில்லை. அவரைச் சுற்றி ஒரு பெரிய இரும்பு கோட்டையே இருக்கிறது. அவ்வளவு எளிதாக அவரை என்னால் அனுக முடியவில்லை. பிறகு எப்படியோ, இறுதி வாய்ப்பாக எடிட்டர் ராஜா முகம்மது மூலமாக முயற்சித்து அதன், பிறகு இந்த கதையை சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கினேன். இதில் பிரம்மா என்றால் அது சசிகுமார் தான். எனக்கு, இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்க்கை கொடுத்த அவர் உண்மையிலும் பிரம்மா தான்." என்றார்.

பிறகு பேசிய சசிகுமார், "சாக்ரடீஸ் என்னை எளிதில் அனுக முடியாது, என்னைச் சுற்றி இரும்புக் கோட்டை இருக்கிறது என்று உணர்ச்சிவசப்பட்டு கூறிவிட்டார். அப்படி ஏதும் இல்லை. என்னை எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் அனுகலாம். கதை கேட்பதில் ஏன் இவ்வளவு தாமதம் என்றால், நான் ஒரு நடிகர் என்பதற்கு முதல் ஒரு இயக்குநர். அதனால், யாரிடமும் கதையை கேட்டுவிட்டு, அவர்களிடம் காத்திருங்கள் என்று சொல்ல மாட்டேன் அதற்காக தான் நான் கதை கேட்பதை குறைவாக வைத்துள்ளேன். நான் நடிக்க முடிவு செய்து இதுவரை மூன்று கதைகள் மட்டுமே கேட்டிருக்கிறேன், அந்த கதைகள் தான் சுந்தர பாண்டியன், குட்டிபுலி, பிரம்மன்.

சாக்ரடீஸ் என்னிடம் கதை சொல்ல அனுகியபோது, நான் ஈசன் படத்தை இயக்கிக்கொண்டிருந்தேன். அதன் பிறகு சமுத்திரக்கனி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். ஆக, இந்த வேலைகள் முடிந்த பிறகு, மற்றப் படங்கள் தொடர்பாக முடிவு செய்ய இருந்தேன். பிறகு நான் ஒரே ஆண்டில் மூன்று படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகே, இந்த கதையை கேட்டேன். அதனால் தான் இந்த தாமதம் தவிர, வேறு எந்த காரணமும் இல்லை." என்றார். (டி.என்.எஸ்)