நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Friday 7 September 2012

தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது ?

சமையல் செய்வது உள்ளிட்ட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தீக்காயம் ஏற்பட்டு விடுகிறது. பிற விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால், இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. சமையல் செய்யும்போது கையில் தீக்காயம் ஏற்பட்டால், உடனடியாக அந்த வெப்பத்தை வெளியேற்றுவது அவசியம்.

அதற்கு, தீக்காயம் ஏற்பட்ட கையை தண்ணீரில் மூழ்கச் செய்ய வேண்டும். தீக்காயம் உருவான இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்தும் வெப்பத்தை வெளியேற்றலாம். இதுதான், இந்த வகை தீக்காயத்திற்கு நாம் செய்யும் முதலுதவி. பிறகு, தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். தீப்புண்ணில் கிருமிகள் இருக்காது என்பதால் பிறர் கைகளில் உள்ள அசுத்தம் புண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக தீ விபத்துக்கு உள்ளானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது மன அளவில்தான். அதாவது, அதிக அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர் பதற்றப்படுவதை தவிர்க்க வேண்டும். தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரது உடல் பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாய்வதால் மற்ற உடல் பகுதிகளில் ரத்த ஓட்டம் குறையும்.

இதன் காரணமாக, அவரது உடல் ஜில்லென்று ஈரமாக இருக்கும். ஜீரண சக்தியும் அதிக அளவில் குறைந்து விடும். இதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர் சாப்பிட விரும்பினால் தண்ணீர் அல்லது லேசான தேயிலை பானம் போன்ற நீர் ஆகாரம் மட்டுமே தர வேண்டும். மேலும், ஆடையில் தீப்பற்றுவதன் மூலம் தீ விபத்தைச் சந்திப்பவர்கள் அதில் இருந்து விடுபட ஓடுவார்கள்.

அது தவறு. அவ்வாறு ஓடினால் வேகமாக காற்றோட்டம் உடலில் ஏற்பட்டு தீ வேகமாக பரவும். பக்கத்தில் இருப்பவர்கள், தீப்பற்றியவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைப்பதுதான் சிறந்த தடுப்பு முறை. அதேநேரம், மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய்ப் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக்கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெயை மேலும் பரவச் செய்து விடும்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்