Friday, 17 February 2012

அன்னை தெரசா சிலை திறப்பு




 கொல்கத்தா, கொல்கத்தாவில் அன்னை தெரசாவின் வெண்கல சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று திறந்து வைத்தார். கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தின் முன் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை கொல்கத்தாவின் ரஷ்ய தூதரால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். சிலையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி பேசும் போது "ஏதேனும் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டுமானால் அன்னை தெரசா தன்னை அவ்வப்போது அழைப்பார்" என்றும் மேலும், தான் அவரை பலமுறை சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ரஷ்யாவில் உள்ள கலுகா பகுதியின் துணை கவர்னர் நிகோலை லியுவிமௌ மற்றும் அன்னை இல்லத்தின் பெண் துறவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்