மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய
ஸைலோவை நேற்று முறைப்படி மார்க்கெட்டில் மஹிந்திரா அறிமுகப்
படுத்தியுள்ளது.
எம்யூவி ரகத்தை சேர்ந்த ஸைலோ மார்க்கெட்டில் முதன்முறையாக அறிமுகம்
செய்யப்பட்ட பின் இதுவரை எந்தவொரு மாற்றமும் செய்யாமல் விற்பனையாகி
வருகிறது.
இந்த நிலையில், மாருதி எர்டிகா, நிசான் என்ஜாய் உள்ளிட்ட எம்பிவி
கார்களால் ஸைலோவுக்கு நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து, ஸைலோவை கூடுதல் அம்சங்களுடன் மஹிந்திரா மேம்படு்த்தியுள்ளது.
கம்பீரமான முன்பக்க பம்பர், ஆல் வீல் டிரைவ் உள்ளிட்ட வடிவமைப்பு மற்றும்
தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு மாற்றங்களுடன் புதிய ஸைலோ வடிவமைக்கப்
பட்டுள்ளது.
5 மாடல்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
விலை:
விலை பேசிக் மாடல் 7.37
லட்சத்திற்க்கும் பிரிமியம் மாடல் X9- ரூ.10.25 லட்சத்திற்க்கும் டெல்லி
எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மஹிந்திரா மினி ஸைலோ வேரியண்ட்டை அறிமுகப்படுத்த
திட்டமிட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
No comments:
Post a Comment
கருத்துக்கள்