Monday, 20 February 2012

சின்முத்திரை

பத்மாசனத்தில் அமர்ந்து கையின் கட்டைவிரலின் முதல் அங்குலாஸ்தியை ஆள்காட்டி விரலின் நுனி தொடுமாறு அமைத்துக் கொள்வதை சின்முத்திரை என்று சொல்லுவார்கள். இவ்வாறு இரண்டு கைகளையும் சின்முத்திரையிட்டு முழங்கால் முட்டிகளின்மேல் கைகளை நீட்டிப் பொருத்திக் கொள்ள வேண்டும்.
நமது கையினுடைய கட்டை விரலில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்கின்றது. சிந்தனையின் சலனங்களைக் கட்டுப்படுத்துவதால் இதற்குச் சின்முத்திரை என்று பெயரிட்டார்கள்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்