தினமும் 2 டம்ளர் பால் குடித்தால் உடல் எடை குறையும் என்று சமீபத்தில்
இஸ்ரேல் ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இஸ்ரேலின்
நெகிவ் நகரில் உள்ள பென் குரியான் பல்கலைக்கழக பேராசிரியர் டானிட் ஷாகர்
தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் உடல் எடை குறைப்பு பற்றி ஆய்வு நடத்தினர்.
தினமும்
மனித உடலுக்கு 580 மில்லி கிராம் வைட்டமின் டி தேவைப்படுகிறது. இந்த
வைட்டமின்கள் உடலில் சரியான விகிதத்தில் சேர்ந்தால் பருமனாக இருப்பவர்கள்
எடையை குறைக்க முடியும் என்று அந்த குழு கருதியது. இதற்காக 40 முதல் 65
வயது வரையுள்ள பருமனான ஆண், பெண்கள் 300 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினமும்
580 மில்லி கிராம் வைட்டமின் டி சேரும் அளவுக்கு பால், பால் பொருட்கள்
அவர்களது உணவில் சேர்க்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஆய்வில்
தினமும் 580 மில்லி கிராம் வைட்டமின் டி (2 டம்ளர் பால்) உடலில்
சேர்ந்தவர்கள் 6 கிலோ எடை குறைந்திருந்தனர். பாலில் உள்ள கால்சியம் தவிர
வைட்டமின் டி உடல் எடை குறைய அதிக பங்கு வகிக்கிறது என்று பேராசிரியர்
டானிட் ஷாகர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்