தனுஷ் சிம்பு இடையே ஏற்கனவே மோதல் இருந்தது. இருவர் படங்களிலும்
ஒருவரையொருவர் தாக்கி வசனங்கள் இடம் பெற்றன. பொது நிகழ்ச்சிகளிலும்
மறைமுகமாக தாக்கி பேசினார்கள். பேட்டியும் அளித்தனர்.
இவர்கள் தகராறு சில மாதங்களுக்கு முன் உச்சநிலையில் இருந்தது.
பின்னர் சில நாட்களாக அடங்கி இருந்தன. ஆனால் தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது. டுவிட்டரில் ஒருவரையொருவர் விமர்சித்து கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். பாடல்கள் மூலம் இந்த தகராறு உருவாகியுள்ளது. தனுஷ் தமிழ், ஆங்கிலத்தில் எழுதிய கொலைவெறி பாடல் உலகமெங்கும் பிரபலமானது.
இதற்கு போட்டியாக சிம்பு லவ் ஆந்த என்ற பெயரில் நிறைய மொழிகளில் உள்ள வார்த்தைகளால் புதிய பாடல் ஒன்றை உருவாக்கினார். அமெரிக்காவில் அங்குள்ள இசை நிபுணர்களை வைத்து இப்பாடலை மெருகேற்றி வருகிறார். இதற்கிடையில் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்காக விளம்பர பாடல் ஒன்றை தனுஷ் பாடினார். இப்பாடல் இன்டர் நெட் 'யூ' டியூப்பில் வெளியிடப்பட்டது.
திடீரென்று அதில் இருந்து அப்பாடல் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தனுஷ் தயாரானார். உடனே மீண்டும் யூ டியூப்பில் மீண்டும் அப்பாடல் வந்தது. இதையடுத்து தனுசும் சிம்புவும் டுவிட்டரில் மோதினர். தனுஷ் டுவிட்டரில் சிலர் மற்றவர்களுக்கு கஷ்டம் வரும்போது சிரிக்கிறார்கள் என்று யூ டியூப்பில் இருந்து பாடலை தூக்கியதும் மறைமுகமாக சிம்புவை தாக்கி கருத்து வெளியிட்டார்.
இதற்கு பதிலடியாக சிம்பு 'காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமாக இருக்காங்களே' என்று டுவிட்டரில் தனுசை தாக்கி கருத்து சொன்னார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சச்சின் பாடலை காசு வாங்காமல் இலவசமாக பாடி கொடுத்தேன் என்று தனுஷ் குறிப்பிட்டார்.
பின்னர் சிம்பு இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த உலகத்தில் எதிரிகள் என்று இல்லை. வெற்றி உன்னை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. தோல்வி உலகத்தை உனக்கு அறிமுகபடுத்துகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

No comments:
Post a Comment
கருத்துக்கள்