செய்முறை:
விரிப்பில்
மல்லாந்து படுக்கவும். பாதங்கள் இரண்டும் தொடாமல் அகண்டிருக்கட்டும். கைகள்
இரண்டையும் உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு உடலோடு ஒட்டி வையுங்கள்.
பாதங்கள், முழங்காலின் ஆடுசதை, புறங்கைகள், முழங்கைகள், தோள்பட்டை பகுதி,
பிடரி ஆகியவை தரையோடு படிந்த நிலையில் இருப்பது அவசியம்.
இயல்பான
சுவாசத்தில் மனதை செலுத்தவும். கண்களை மூடி அகமுகமாக உடலை உற்று
நோக்குங்கள். இந்த நிலையில் உடல் பாரமற்றதாகிறது. எடையை தரை தாங்குவதால்,
உடலின் அத்தனை உள்-வெளி உறுப்புகளுக்கும் பூரண ஓய்வு கிட்டுகிறது.
அதற்குபிறகு, இடதுகால் கட்டை விரலில் தொடங்கி, ஒவ்வொரு பகுதியும் `சாந்தி
பெறுவதாக' என்று சொல்லவும். அப்படியே உச்சந்தலை வரைக்கும் வாருங்கள்.
அதற்குபிறகு
இரு புருவ மத்தியில், ஓரங்குல தீபம் எரிவதாக நினைத்துக்கொள்ளவும். இந்த
நிலையில் சில நிமிடங்கள் இருந்து பின் மூச்சு ஓட்டத்தை கவனியுங்கள்.
தீபத்தின் சுடர் உள் சுவாசத்தோடு கரைந்து உடலெங்கும் ஒளி, தேஜஸ் பரவுவதாக,
உங்களை நினைத்துக் கொள்ளவும். அதற்குபிறகு கை, கால்களை லேசாக அசைத்து
கண்களை திறக்காமல் மெல்ல எழுந்து உட்காரவும். அந்த நிலையிலேயே 1 நிமிடம்
அமரவும். பிறகு உள்ளங்கைகளை முகத்திற்கு முன்பாக நீட்டி உள்ளங்கைகளில்
கண்களை திறக்கவும்.
பயன்கள்:
புது உற்சாகமும், தெம்பும், சுறுசுறுப்பும் கிட்டும். உடல் ஓய்வுக்கு மட்டுமின்றி மன அமைதிக்கும் இந்த ஆசனம் உதவும்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்