Wednesday, 22 February 2012

காட்டுப்புலி - விமர்சனம்

அர்ஜூன், பியங்காதேசய் டாக்டர் தம்பதி. இவர்கள் குழந்தையுடன் காட்டுக்கு பிக்னிக் செல்கின்றனர். அதே காட்டில் ரஜ்னிஷ், ஷயாலி பகத் என மேலும் ஜோடிகளும் வருகிறார்கள். அங்கு ஒவ்வொருவரும் மர்மமாக கொல்லப்படுகின்றனர். இறுதியில் அர்ஜூன் குடும்பம் மிஞ்சுகிறது.

கொலையாளிகள் நர மாமிசம் சாப்பிடும் பயங்கர காட்டு மனிதர்கள் என்றும் உடல் உறுப்புகளை வெட்டி கடத்தும் சர்வதேச கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வருகிறது.

அர்ஜூன் மனைவி, குழந்தையும் அவர்களிடம் சிக்குகின்றனர். இருவரையும் மீட்க அர்ஜூன் நடத்தும் அதிரடிகள் கிளைமாக்ஸ்.

காட்டில் மலையேறும் ஜோடியை கொடூரமாக கொன்று காட்டுவாசிகள் தூக்கி செல்லும் ஆரம்பமே அதிர வைக்கிறது.

அர்ஜூன் காட்டில் பிரவேசித்ததும் காட்சிகள் எகிறுகிறது. மலை அருவி அடிவாரத்தில் இளம் ஜோடி அம்பு விட்டு கொல்லப்படுவது உதறல்.

மர்ம பங்களாவில் அர்ஜூன் மனைவி மகளுடன் சிக்குவதும், அங்கு மனித உறுப்புகள் பாட்டில்களில் அடைத்து வைத்திருப்பது கண்டு அலறுவதும் நடுக்கம்.

பங்களாவில் கொலை பாதர்களிடம் இருந்து தப்பி ஓடுவது “சீட்” நுனிக்கு இழுக்கும் திகில்.

ரஜ்னிஷ், ஷாயாலி அழகான இளம் ஜோடி. அர்ஜூன் குடும்பத்தை காப்பாற்ற காட்டு மிராண்டிகளிடம் சிக்கி பலியாகி பரிதாபப்பட வைக்கின்றனர். உடல்நலம் குன்றிய மகள் மனைவியுடன் நர மாமிச மனிதர்களிடம் இருந்து தப்பிக்க போராடும் அர்ஜூன் சென்டிமென்டிலும் ஆக்ஷனிலும் அனல் பறத்துகிறார்.

கிளைமாக்சில் அதி பயங்கர வில்லன்களுடன் அதிரடியாக மோதி “ஆக்ஷன் கிங்” என நிரூபிக்கிறார்.

வில் அம்பு, ராக்கெட், லாஞ்சர், துப்பாக்கி குதிரை சவாரி என வரும் காட்டு மிராண்டிகள் பயமுறுத்துகின்றனர். அந்த கும்பலின் தலைவனாக வரும் டினு வர்மா கொடூர வில்லன் அரிவாளால் வெட்டியும் சுட்டும் இவர் செய்யும் கொலைகள் ரத்தத்தை உறைய வைக்கிறது. இவரே இயக்கவும் செய்துள்ளார்.

காட்டுக்குள் நடக்கும் உயிர் போராட்டமும் திகில் கொலைகளுமான காட்சிகள் விறு விறுப்பாக நகர்கின்றன. ஆட்களை கொன்று உடல் உறுப்புகளை விற்கும் காட்டு மிரண்டிகள் பஞ்ச பரதேசிகள் போல் உலவுவது ஒட்டவில்லை. ராஜேந்திர பிரசாத்தின் ஒளிப்பதிவும், விஜய் வர்மா இசையும் பயங்கரத்தில் கட்டி போடுகின்றன.

No comments:

Post a Comment

கருத்துக்கள்