நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Friday, 6 January 2012

நெஞ்சைத் தொட்ட கவிதைகளின் தொகுப்பு


 பிறப்பு 

எனது செல்லமே.. உன்வாழ்க்கையை 
இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரையறைக்குள் 
உன்னைத் தள்ள எனக்கு இத்துளி சம்மதமும் இல்லை 
ஆனாலும் ஒரு தாயாக உன்னை கடைசிவரை 
மனிதாபிமானமுள்ள ஒரு "மனிதமாகவே" பார்க்க 
ஆசைப்படுகிறேன்   
பிறப்பு  
மகன் பிறப்பு குறித்து நண்பன் ஒருவன் உதிர்த்த வாசகம் 
"எப்படி இருக்கிறது நீ படைத்த கவிதை?" வாகாய்க் கவிதை செய்ய வார்த்தைகளோடு வதைபடும் மாயமான் விளையாட்டுகளின்றி இருக்கவேண்டுமே இவன் வாழ்வாவது என்றிருந்தது எனக்கு.   பிறப்பு 
அருவாக இருந்த என்னை கருவாக - உருச் சுமந்து உயிர் சுவாசம் தந்தவளே... என் பிறப்பு உன்னின் மறுஜென்மம்மாமே... சொல் அல்லது செய். பாலூட்டும் ஒவ்வொரு வேளையும் பக்குவமாய் ஊட்டி விடு உன் - எண்ணங்களையும் கனவுகளையும். கண்ணீர் தவிர் தாயே.... உணர்வுகள் மெய்பட காத்திரு. உன் - கவலைகள் அழிக்கும் என் கரம் சற்று நீளும் ரை   


உன் பிறப்பு 
வந்தாரை வாழ்விக்கும் வன்னி வரலாற்றுச் செந்தேன் தமிழ் மணக்கும் 

செம்மலை யிற் பிறந்து கம்பிக் கூடடைத்த காக்கியுடைக் காவலுக்குள்
 உயிரைப் பிடித்து வைத்து உற்றாரையுந் தொலைத்து
 வறுமையின் பிடியிற்குள் வயிற்றுப் பசியோ டிருக்க  அங்கமென விந்த

அகதி முகாமிற்குள் திங்களொரு பத்திந்தத் தாய் 
வயிற்றிற் காத்திருந்து தங்க மகனே நீ தவறி வந்து ஏன் பிறந்தாய்? 
முள்ளி வாய்க்காலில் - உனக்கு மூத்தவரை மட்டுமல்ல அள்ளி அணைத்தெடுக்கும் - உன் அப்பனையும் தானிழந்து கள்ளிச் செடியாகத் தனித்திருந்த எந்தனுக்கு கொள்ளி வைக்க என்று வந்த குலவிளக்கு நீ தானோ? துவக்குகளின் வேலிக்குள் - உன்னைத் தூங்க வைக்க நான் பாடும் தாலாட்டு ஓசை இந்தத் தரணியெங்கும் கேட்டிடுமா? 
உயிரோடு உறவு தனை ஓர் நாளில் தொலைத்து விட்டு வேரிழந்த என் 
வாழ்வில் விழுதெறிந்த உன் பிறப்பு பேராக நான் வாழ்ந்த
- என் பிறந்த இடம் சேர்க்காதா?