நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday 11 January 2012

கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!

தனுஷ் எழுதிப் பாடி நடித்துள்ள கொலவெறி பாடல் இணையத்தால் பெரும் ஆரவார வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் அதற்கு தமிழ்நெறியாளர்கள், கவிஞர்கள், பிறமொழி பாடகர்கள், கவிஞர்களும் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணினி வல்லுநர் ஜெர்ரி ஸ்டாலின், அதேபோன்ற தாள லயத்துடன் தமிழ்நெறியைப் புகழ்ந்து எழுதியுள்ள பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. யூ ட்யூப் தளத்தில் இப்பாடலை இதுவரை 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர்வரை பார்த்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

அப்பாடல் இங்கே வரிவடிவில்:

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?





என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…


4 comments:

  1. சிறப்பான பதிவு..
    சிறப்பான பாடல் வரிகள்.
    தமிழ் வாழ்க..

    எனக்கும் அந்தப் பாடலில் வரும் வரிகளோ, அர்த்தமோ சுத்தமாக பிடிக்கவில்லை..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா ......... தொடர்ந்து கருத்துக்களை எழுதுங்கள் .........
      - உங்கள் நண்பன்

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. என்றுமே தன் மொழியைப் போற்றுவதில் ஈழத்தமிழன் முன்னனியில். ஆயினும் ஒரு வரி இந்த யேசு,பு(எ)த்தன்,காந்தி சொன்னவைகளைக் கேட்டே தமிழன் இன்னும் கோழையாய் வாழ்கின்றான்.

    ReplyDelete

கருத்துக்கள்