நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Tuesday 3 January 2012

இளையராஜாவின் இன்னிசையில் நனைந்த சென்னை நேரு ஸ்டேடியம்!

ஜெயா டி.வி., சார்பில் 6 வருடங்களுக்கு பிறகு என்றென்றும் ராஜா என்ற தலைப்பில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த இசைக்கச்சேரியில் பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.‌யேசுதாஸ், பால முரளிகிருஷ்ணா, சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சரியாக 6மணிக்கு வெளிநாட்டு இசை கலைஞர்களின் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு இளையராஜா மேடையில் தோன்றிய போது ரசிகர்களின் கரகோஷம் ஸ்டேடியத்தை அதிர செய்தது. 

முதல் பாடலாக ஜனனி ஜனனி.. பாடலை பாடினார் இளையராஜா. அதனைத்தொடர்ந்து யேசுதாஸ் பேசும்போது, நாங்கள் எல்லாரும் சின்ன வயசில் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்போது இந்த ‌இசை தான் எங்களை காப்பாற்றியது என்று உருக்கமாக கூறினார். பின்னர் தன்னுடைய இனிமையான குரலில் பூவே செம்பூவே பாடலை பாடியதோடு, இந்த பாடல் தனக்கு ரொம்ப பிடித்த பாடல் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து எஸ்.பி.பி., மறைந்த இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு சமர்ப்பணமாக நானாக நானில்லை பாடலை பாடி அசத்தினார். அவர் பேசுகையில் நானும், ராஜாவும் வேறு வேறு இல்லை. இருவருமே ஒன்று தான் என்றார். 

தொடர்ந்து டைரக்டர் மகேந்திரன் படத்தில் இடம்பெற்ற பாடலை, பாலு பாடி அந்த பாடல் எப்படி உருவானது என்பதையும் மேடையில் விளக்கி அசத்தினார்.  நிகழ்ச்சியின் இடையே நடிகர் கமல்ஹாசன், இளையராஜாவை வாழ்த்து பேசிய வீடியோ காட்சி ஒளிப்பரப்பட்டது.  நிகழ்ச்சியின் ஹைலைட்டாக பிரபல பின்னணி பாடகர் பால முரளி கிருஷ்ணா மேடையில் ‌தோன்றி, பாலுவுடன் சேர்ந்து சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலை பாடினார். அவரைத்தொடர்ந்து இளையராஜாவின் வாரிசுகள் யுவன், பவதாரணி ஆகியோரும், பிரபல பின்னணி பாடகர்கள் சித்ரா, ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் பாடி அசத்தினர். 

இசை நிகழ்ச்சிகளுடன் அவ்வப்போது பல சுவாரஸ்யமான தகவல்களையும் இளையராஜா பகிர்ந்து கொண்டார். கவிஞர் கண்ணாதசன் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை கூறிய ராஜா, இந்த உலகத்திலேயே கவிஞர் கண்ணதாசன் போல இன்ஸ்டன்ட் கவிஞர் யாரும் இல்லை. நான் நிறைய பேர் கூட வேலை பார்த்து இருக்கேன். ஆனால் கண்ணாதாசன் அவர்கள் கூட வேலை பார்த்தது சுவாரசியமான அனுபவம். ஒருமுறை ஸ்டுடியோவில் பாட்டு எழுத வந்தார் கண்ணதாசன். நான் டியூன்  போட்டு காட்டினேன். தூ என துப்பினார்.  ஐயோ இவர் இசையை கேட்டு துப்பினாரா அல்லது கதையை கேட்டு துப்பினாரா என்று புரியல. பிறகு இசையை கேட்டு அப்படியே வரிகளை சொல்ல ஆரம்பிச்சார், அந்த பாட்டு தான் ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள்... என்ற பாட்டு. அதில் தான் மலேசியா வாசுதேவன் அறிமுகமானார் என்றார்.   

இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களுடன் ஷோபா, விஜய் அண்டனி, ஜேம்ஸ் வசந்தன், தரன், தேவிஸ்ரீ பிரசாத், சரண்யா, ஜெய சித்ரா, பாலு மகேந்திர போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர். கொலவெறிக்கு இசை அமைத்த அனிருத் இடம் கிடைக்காமல் நின்றபடியே இசை நிகழ்ச்சியை ரசித்து பார்த்தார். இரவு 12 மணி வரை நீடித்த இளையராஜாவின் என்றென்றும் ராஜா நிகழ்ச்சி,  ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமைந்தது.

No comments:

Post a Comment

கருத்துக்கள்