நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Monday, 2 January 2012

புதிய எஸ்யூவி விலையை ரூ.55,000 வரை உயர்த்திய மஹிந்திரா

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்ற தனது புதிய எக்ஸ்யூவி 500 எஸ்யூவி விலையை ரூ.55,000 வரை உயர்த்தியுள்ளது மஹிந்திரா. வரும் ஜனவரி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட தனது புதிய எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்தது. ரூ.10.80 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்த புதிய எக்ஸ்யூவி 500 வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றது.

இந்த நிலையில், புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டபோதே, விரைவில் விலை உயர்த்தப்படும் என்று மஹிந்திரா வட்டாரங்கள் அப்போதே தெரிவித்தன. இந்த நிலையில், உற்பத்தி செலவீனம் கணிசமாக உயர்ந்திருப்பதால் புதிய எக்ஸ்யூவியின் விலையை உயர்த்துவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்:

வேரியண்ட்

டபிள்யூ-6 பேஸ் வேரியண்ட் : ரூ.30,000

டபிள்யூ-8 (2 வீல் டிரைவ்)    : ரூ.50,000

டபிள்யூ-8 (4 வீல் டிரைவ்)    : ரூ.55,000

இருப்பினும், ஏற்கனவே புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முந்தைய விலையிலேயே புதிய எஸ்யூவி டெலிவிரி செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி பிரச்னையால் புதிய எக்யூவியின் புக்கிங்கை மஹிந்திரா ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் மீண்டும் புக்கிங்குகள் துவங்கப்படும்போது புதிய விலையில் எக்ஸ்யூவி டெலிவிரி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்யூவிக்கு அதிக டிமான்ட் இருப்பதால் உற்பத்தியை இருமடங்கு உயர்த்த மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதனால், தற்போதுள்ள மாத உற்பத்தி எண்ணிக்கை 1,800 என்பது அடுத்த மாதம் முதல் இருமடங்காக உயர்த்தப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.