நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 21 December 2011

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பிறந்தநாள் விளம்பர செலவு ரூ.7.25 கோடி

முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி நாளிதழ்களில் விளம்பரம் செய்ய மத்திய அரசு ரூ.7.25 கோடி செலவு செய்துள்ளது.

இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் சி.எம். ஜதுவா ராஜ்சபையில் கூறியதாவது,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்க மத்திய அரசு ரூ. 4,79,73,656 செலவு செய்துள்ளது. அதில் சுகாதார அமைச்சகம் தான் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் செய்துள்ளது. இதை தொடர்ந்து புதிய மற்றும் மறுசுழற்சி மின் சக்தி அமைச்சகம் ரூ.82 லட்சமும், சுற்றுலா அமைச்சகம் ரூ. 79 லட்சமும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் ரூ. 65 லட்சமும், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ரூ.58 லட்சமும், சமூக நீதி அமைச்சகம் ரூ.51 லட்சமும் செலவு செய்துள்ளன. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.25 லட்சமும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் ரூ. 21 லட்சமும் விளம்பரத்திற்காக செலவு செய்துள்ளன.

இது தவிர முன்னாள் பிரதமர் இந்திர காந்தி பிறந்தநாளையொட்டி விளம்பரம் செய்ய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ரூ.60 லட்சமும், சமூக நீதி அமைச்சகம் ரூ.56 லட்சமும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் ரூ. 41 லட்சமும், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ரூ. 25 லட்சமும், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ரூ.22 லட்சமும், நீர் வளம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்கள் ரூ. 19 லட்சமும் செலவு செய்துள்ளன என்றார்.