நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday 21 December 2011

விரைவில் அறிமுகமாகும் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபியட் புன்ட்டோ ,லீனியா

கூடுதல் வசதிகளுடன், மேம்படுத்தப்பட்ட புதிய லீனியா செடான் கார் மற்றும் புதிய புன்ட்டோ ஹேட்ச்பேக் கார்களை வரும் ஜனவரியில் ஃபியட் அறிமுகம் செய்கிறது.

டாடா ஷோரூம்களில் கார் விற்பனை செய்து வரும் ஃபியட் நிறுவனம் விரைவில் தனியாக புதிய ஷோரூம்களை அமைத்து கார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்கான, முதற்கட்ட பணிகளில் அந்த நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தனது லீனியா மற்றும் புன்ட்டோ கார்களில் கூடுதல் வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் விரைவில் அறிமுகம் செய்கிறது ஃபியட்.




புதிய லீனியா:

மிட்சைஸ் கார்களுக்கான மார்க்கெட் நன்கு வளர்ந்து வருவதால், அதில் லீனியாவும் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஃபியட் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை கொடுத்துள்ளது.




புதிய லீனியாவில் மழை வந்தால் தானாக இயங்கும் ரெயின் சென்சிங் வைப்பர், அதிக திறன் வாய்ந்த ஏசி, இந்திய சாலை நிலைகளுக்கேற்ப கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ்(185மிமீ), டியூவல் டோன் பியேஜ் இன்டிரியர்ஸ் ஆகிய புதிய அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் புதிய லீனியா வருகிறது.

மேலும், ஆட்டோ ஆன்/ஆப் ஹெட்லைட்டுகள், புதிதாக நீல வண்ணத்திலும் லீனியா வர இருக்கிறது. புதிய லீனியா நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று ஃபியட் கருதுகிறது.

புதிய புன்ட்டோ:

லீனியா போன்றே புன்ட்டோ ஹேட்ச்பேக் காரும் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வருகிறது. புதிய புன்ட்டோ 1.3 லிட்டர் எஞ்சின் மாடல் மேம்படுத்தப்பட்ட கியர் பாக்சுடன் வருகிறது.

தவிர, 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்(195மிமீ)
கொண்டதாகவும், 1.4 லிட்டர் வேரியண்ட் 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் இருக்கும். லீனியா போன்றே புதிய புன்ட்டோவும் புதிய நீல வண்ணத்தில் கிடைக்கும் என்று ஃபியட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த 2 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்கள் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்த ஃபியட் திட்டமிட்டுள்ளது. மேலும், கார்களின் விலையை வரும் ஜனவரி முதல் 2 சதவீதம் உயர்த்த இருப்பதாக ஃபியட் ஏற்கனவே அறிவித்துவிட்டதால், புதிய மாடல்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்