நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Monday, 26 December 2011

அமைச்சரவை விரைவில் மாற்றம்

தமிழக அமைச்சரவை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்று போயஸ் தோட்ட வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் அதிமுகவை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்னும் ஏன் மாற்றப்படவில்லை என்று பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆளும் கட்சி வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது தமிழக அமைச்சர்கள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்ற தகவல் கிடைத்தது.

இந்த அதிரடி மாற்றப் பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பவர்கள்:
போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,தொழில்துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி வனத்துறை அமைச்சர் பச்சமால், வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்

உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம் அல்லது அமைச்சர்கள் வகிக்கும் துறைகளாவது மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டெல்லி புறப்பட்டதும் இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

அமைச்சரவை மாற்றப்பட்டால் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசைய்யா தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்பதால்

அவரை மாநிலத்தை வி்ட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.