நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 21 December 2011

வால்வோவுக்கு போட்டியாக டாடா ஆம்னி பஸ்

நகரங்களுக்கு இடையில் இயக்கும் வகையிலான புதிய ஆம்னி பஸ் மற்றும் புதிய ஸ்கூல் பஸ் மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கான மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் வால்வோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், வால்வோ பஸ் மார்க்கெட்டை உடைக்கும் வகையில், அனைத்து சொகுசு வசதிகளும் அடங்கிய திவோ என்ற பெயரில் புதிய சொகுசு பஸ் மாடலை டாடா அறிமுகம் செய்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு தக்கவாறு திவோ பஸ்சில் சொகுசு வசதிகளை கஸ்டமைஸ் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவோ சொகுசு பஸ்சுக்கான பாகங்கள் ஸ்பெயினில் உள்ள டாடா மோட்டார்ஸ் துணை நிறுவனமான ஹிஸ்பானோ கர்ரோசிராவின் ஆலையிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

திவோ சொகுசு பஸ்சில் 285 எச்பி ஆற்றல் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஸ்கூல் மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் புதிய ஸ்டார்பஸ் அல்ட்ரா என்ற புதிய பஸ் மாடலையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

22 இருக்கைகள் முதல் 46 இருக்கைகள் வரையிலான மாடல்களில் கிடைக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


திவோ சொகுசு பஸ் ரூ.66 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஸ்டார்பஸ் அல்ட்ரா பஸ் ரூ.15 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.