நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Tuesday 24 April 2012

அப்துல் கலாம் மீண்டும் அடுத்த குடியரசுத்தலைவர்?

குடியரசுத்தலைவருக்கான வேட்பாளர் தேர்வில் இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பி.ஜே.பி. தங்கள் சார்பில் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத்தலைவருக்கான வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதற்கு வலு சேர்க்கும் வகையில் சமாஜ்வாடி கட்சியும் அப்துல் கலாம் அடுத்த குடியரசு தலைவராவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் 2002 ம் ஆண்டே அப்துல் கலாமை குடியரசுத்தலைவருக்கான வேட்பாளராக பரிந்துரைத்ததாகவும், எனவே தற்போது அவரை குடியரசுத்தலைவருக்கான தேர்தலில் ஆதரிப்பதில் தங்கள் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சமாஜ் வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான சாகித் சித்திக் இன்று தெரிவித்துள்ளார்.
 
நேற்று தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, அடுத்த குடியரசுத்தலைவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்த்ருந்தார். ஆனால் இன்று தான் அவ்வாறு கூறவில்லை எனவும் யாருக்கும் தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் அனைத்து கட்சிகளும் அமர்ந்து பேசி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை குடியரசுத்தலைவராக்கலாம் என தான் கூறியதாக இன்று தெரிவித்துள்ளார். 
 
தற்போது, குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டனிக்கு போதுமான பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் மட்டும் தனித்து 30 சதவீத வாக்குகளும், அதன் கூட்டனிக்கு 40 சதவீத வாக்குகளும் இருக்கிறது. அதே சமயத்தில், தேசிய ஜனநாயக கூட்டனிக்கும் தனி பெரும்பான்மை இல்லை. பி.ஜே.பி. மட்டும் தனித்து 24 சதவீதமும் அதன் கூட்டனிக்கு 30 சதவீத வாக்குகளும் உள்ளன.
 
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனால் சமாஜ்வாடி கட்சி இத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். சமாஜ்வாடி கட்சியும் மம்தா பானர்ஜி கட்சியும் இணைந்தால் வரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் குறிபிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
 
மேலும் ஏ.ஐ.ஏ.டி.எம்.கே., பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய பிராந்திய கட்சிகளும் வரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் முக்கிய பங்காற்றும்.
 
குடியரசுத்தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி க்களும், எம்.எல்.ஏ க்களும் இணைந்து குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் 776 எம்.பி க்களும், 4,120 எம்.எல்.ஏ க்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு எம்.பி களின் வாக்கு மதிப்பு 708. ஆனால் எம்.எல்.ஏ க்களின் வாக்கு மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
 
நாட்டின் மொத்தம் உள்ள 4,120 எம்.எல்.ஏ.களின் வாக்கு மதிப்பு 5,49,474. அதே போல் அனைத்து 776 எம்.பி க்களின் வாக்கு மதிப்பு 5,49,408. இதில் அதிக வாக்குகள் பெறுபவரே இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்துக்கள்