நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday 25 April 2012

ஓல்டு ஸ்டாக், யூஸ்டு கார் தயாரிக்கப்பட்ட ஆண்டை எப்படி கண்டுபிடிப்பது?

கார் வாங்க கனவுகளுடன் ஷோரூமில் நுழைந்தவுடன் அங்கிருக்கும் ஷோரூம் விற்பனை பிரதிநிதிகள் சொல்வதை கேட்டு காதில் வாங்கியவுடன் நமக்கு பிடித்த கலர் காரை தேர்வு செய்துவிட்டு வந்துவிடுகிறோம். நம் கண்ணுக்கு கலர் மட்டும்தான் கண்முன் நிற்கும்.

ஆனால், காரை தேர்வு செய்யும்போது அந்த காரின் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட காரா அல்லது சில மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு நீண்ட நாட்களாக ஸ்டாக் வைக்கப்பட்டுள்ள காரா என்பது பற்றி பலர் பார்ப்பதில்லை. 

அந்த காரை சில ஆண்டுகள் கழித்து விற்பன செய்யும்போதுதான் நாம் வாங்கிய தேதிக்கும், தயாரிக்கப்பட்டதற்கும் மாதக்கணக்கில் வித்தியாசம் இருக்கும். இதில், ஆண்டு கணக்குகூட சில சமயங்களில் இடிக்கும்.

இதனால், அந்த காரை விலை குறைத்து மதிப்பிடக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே, காரை தேர்வு செய்யும்போது அது எப்போது தயாரிக்கப்பட்ட கார் மாடல் என்பதை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி இருக்கிறது.

அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு காருக்கும் பிரத்யேக அடையாள எண்ணை (வின் நம்பர்)குறிப்பிடுகின்றன. அதில், கார் தயாரிக்கப்பட்ட மாதம் மற்றும் வருஷத்தை துல்லியமாக குறிப்பிடுகின்றன. பூதாகரமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கில எழுத்தை குறியீட்டு எழுத்தாக கார் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

உதாரணமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படு்த்தும் 17 எழுத்துக்களில் 10வது எழுத்து வருஷத்தையும், 12 வது எழுத்து மாதத்தையும் குறிப்பிடுகிறது. இந்த குறியீட்டு எழுத்துக்கள் ஒன்றுதான் என்றாலும், எழுத்து வரிசை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுகிறது.

அதெல்லாம் சரி, இந்த வின் நம்பர் காரில் எந்த இடத்தில் பார்ப்பது. காரின் இடதுபுறத்தில் முன்பக்க கண்ணாடியும்(வைன்ட் ஷீல்டு) டேஷ்போர்டும் இணையும் இடத்தில் இருக்கும் அலுமினிய பட்டையில் வின் நம்பர் விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.

மேலும், யூஸ்டு கார் வாங்க செல்பவர்கள் தவறாமல் இந்த விபரத்தை கையில் எடுத்துச் செல்வது நலம். ஏனெனில், யூஸ்டு கார் மார்க்கெட்டில்தான் தயாரிக்கப்பட்ட ஆண்டு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இன்று டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தும் எழுத்து வரிசை விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

டாடா மோட்டார்ஸ்:
மொத்தம் 17 எழுத்துக்கள் மற்றும் எண்களை உள்ளடக்கிய வின் குறியீ்ட்டு எழுத்துக்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10வது எழுத்து வருஷத்தையும், 12 வது எழுத்து மாதத்தையும் குறிக்கும் வகையில் பயன்படுத்துகிறது.

மாதக் குறியீடு:

A- JANURUARY
B- FEBRUARY
C- MARCH
D- APRIL
E- MAY
F- JUNE
G- JULY
H- AUGUST
J- SEPTEMBER
K- OCTOBER
L- NOVEMBER
M- DECEMBER

ஆண்டு குறியீடு:

A- 2010
B- 2011
C- 2012
D- 2013
E- 2014
F- 2015
G- 2016
H- 2017
J- 2018
K- 2019

உதாரணமாக, டாடா மோட்டார்ஸ் கார் ஒன்றில் 10 வது எழுத்து A என்றும் 12 வது எழுத்து D என்றும் இருந்தால், அந்த கார் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தயாரிக்கப்பட்ட கார் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். பிற நிறுவனங்கள் எந்த வரிசையில் ஆண்டு, மாத விபரங்களை வின் நம்பர் வரிசையில் எந்த இடத்தில் குறிப்பிடுகின்றன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்