நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Tuesday, 24 April 2012

புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில் பயங்கர வைரஸ் கிருமிகள் மனிதனுக்கு துணை நிற்கப்போகின்றன!

புற்றுநோய், இன்றைய மனிதகுலத்தை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் நோய், புற்றுநோய் வந்தால் மரணம் நிச்சயம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. உடலுக்குள் வளர்ந்து உயிருக்கு உலைவைக்கக்கூடிய இக் கொடிய வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்காமல் இருப்பது ஓர் துர்பாக்கியமே.

புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் புதியதோர் மைல் கல்லை எட்டியுள்ளது. விஞ்ஞானிகள் புற்றுநோய் கலங்களுக்கு எதிராக பயங்கர வைரஸ்களை பயன்படுத்தமுடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
விசேடமாக கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட வைரஸ் கிருமிகள், புற்றுநோய் கலங்களின் வளர்ச்சியை தடுட்த்து நிறுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Massachusetts General Hospital இன் பிரதான அறுவைசிகிச்சை நிபுணரும், euroscience at Harvard மருத்துவ பாடசாலையில் பேராசிரியராகவும் கடமையாற்றும் Dr Robert Martuza, இக் கண்டுபிடிப்பு, புற்றுநோய் மருத்துவத்தில் பெரிய முன்னேற்றம் என குறிப்பிட்டுள்ளார்.இவ் வைரஸ் சிகிச்சை முறை, தோல் புற்றுநோய் மீது பிரயோகிக்கப்பட்டு வெற்றியளித்துள்ள நிலையில், தற்போது நுரையீரல் புற்றுநோய் மீது சோதனை நடைபெற்று வருகிறது.

இவ் வைரஸ் கிருமி உடலில் புகுத்தப்படுவதால் பக்கவிளைவாக காய்ச்சல் ஏற்படுகிறது. எனினும், தற்போது புற்றுநோய்க்கு வழங்கப்படும் chemotherapy சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவோடு ஒப்பிடுகையில் இது சிறிய பக்கவிளைவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.