நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Tuesday, 24 April 2012

அஜித் குமாரின் பில்லா 2 ரிலீஸ்...

மங்காத்தா படத்திற்குப் பிறகு அஜித் குமார் நடித்து வரும் படம் 'பில்லா 2'. இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார். பார்வதி ஓமனக்குட்டன் கதாநாயகியாக நடிக்கிறார்.


இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையத்து வருகிறார். விரைவில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. சாதாரண இளைஞனை சூழ்நிலைகள் எவ்வாறு பயங்கர தாதாவாக மாற்றுகிறது என்பதே கதை.

பில்லா படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. கடைசியாக ரிலீசான அஜித்தின் 'மங்காத்தா' படமும் வசூல் குவித்தது. எனவே பில்லா 2 படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட பெரிய பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.

தற்போது தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ரூ. 28 கோடிக்கு படத்தை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் விளம்பரத்துக்காக ரூ. 2 கோடி வரை செலவு செய்யப்படும் எனத் தெரிகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

மே 1-ந்தேதி பாடல் சி.டி.யை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதில் ஆஜித் படத்தின் நாயகிகள் பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர். ஏற்னவே பில்லா 2 படத்தின் டிரெய்லர்கள் இணைய தளங்களில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  தியேட்டர்களிலும் டிரைலர் திரையிடப்பட்டு வருகின்றன.