நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Tuesday, 11 February 2014

தாறுமாறாக பாடிய டி.ராஜேந்தர்


மன்மதன் படத்தில் மகன் சிம்புக்காக யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில், மைதிலி என்னை காதலி படத்தில் தான் இசையமைத்து எழுதி பாடிய, என் ஆசை மைதிலியே என்ற பாடலின் ரீமிக்ஸான, என் ஆசை மைதிலியே என் ஆசை மன்மதனே…

என்ற பாடலை பாடி பட்டைய கிளப்பினார் டி.ராஜேந்தர். அதையடுத்து, தரணி இயக்கத்தில் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்து கலாசலா கலசலா என்ற பாடலையும் பாடினார்.
அதையடுத்து, இபபோது சிம்பு நடித்து வரும் வாலு படத்திலும் தமனின் இசையில் ஒரு பாடலை மகன் சிம்புவுக்காக பாடியிருக்கிறார் டி.ஆர்., தாறுமாறு என தொடங்கும் அந்த பாடலை நிஜமாலுமே தாறுமாறாக பாடியிருக்கிறாராம் அவர்.
கூடவே அந்த பாடலில் சிம்புவும், ஹன்சிகாவும் நடிப்பதால், தனது பாணியில் டண்டனக்கா ரேஞ்சுக்கு பாடினாலும், மயிலிறகாய் மனசை தொடும் காதல் கவிநயத்துடனும் பாடியுள்ளாராம் டி.ஆர்.,
பாடலைக்கேட்ட சிம்பு, என் தந்தையின் பாடல்களுக்கு சின்ன வயதிலிருந்தே நான் ரசிகன். இப்படித்தான் என்று இல்லாமல் எல்லா ஏரியாவிலும் கலந்து கட்டி அடிப்பார்.
காதல், பாசம், சோகம் என அவரது படங்களில் சொல்லாத விசயங்களே இல்லை. அதனால், எனது படங்களிலும் அவரது இசைத்திறமையை அவ்வப்போது பயன்படுத்தி வருகிறேன்,. அப்படி எனக்காக அவர் பாடிய பாடல்கள் எல்லாமே மெகா ஹிட்தான்.
அதனால் வாலு படத்தில் அவர் எனக்காக பாடிய தாறுமாறு என்ற பாடல் தாறுமாறாக ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார் சிம்பு.