நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Sunday, 9 February 2014

வயிற்று சதை குறையும் எளிய பயிற்சி


வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து தசையை வலுவாக்க உடற்பயிற்சிகள் உதவுகின்றன. கார்டியோ பயிற்சிக்கு பிறகு இந்த வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து தரையை வலுவாக்கும் பயிற்சியைச் செய்ய வேண்டும். 

பயிற்சியை விடாமல் தொடர்ந்து தினமும் பயிற்சியை செய்யும்போது மட்டுமே முழுப்பலனையும் பெற முடியும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் தரையில் கால்களை நீட்டி படுத்துக் கொள்ளவும். பின்னர் இரண்டு கால்களையும் முட்டிவரை மடக்கி கொள்ளவும். 

கால் பாதங்கள் தரையில் பதிந்த படி இருக்க வேண்டும். கைகளை தலைக்கு பின் கட்டி, உடலின் மேல் பகுதியை முட்டி வரையில் கொண்டு செல்ல வேண்டும். இதனால் வயிற்றுப் பகுதி அழுத்தப்படுகிறது. வயிற்றில் உள்ள கொழுப்பு கரைந்து மேல் வயிற்றுத் தசை வலிமை அடையும்.இந்த பயிற்சியை தினமும் 30 முதல் 40 முறை செய்ய வேண்டும்.