நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 12 February 2014

தண்ணீர் மட்டுமே அருந்தி வாழும் வினோத பெண்

புதுடெல்லி அருகில் உள்ள சோனிபாத் நகரில் , மஞ்சு தாரா என்னும் 25 வயதான பெண்,  பிறந்ததில் இருந்தே திட உணவு பொருள்களை உண்ணாமல் தண்ணீர் மற்றும் பால் உள்ளிட்ட திரவ உணவுகளை மட்டுமே குடித்து உயிர்வாழ்கிறார்.
தினமும் ஐந்து முதல் ஆறு லிட்டர் பாலை  உணவாக எடுத்து கொள்ளும் அவர் டீ மற்றும் தண்ணீர் உள்ளிட்டவகளையும்  உட்கொள்கிறார். இவரின் இந்த நிலைக்கு காரணம்  உணவுக்குழாய் அலை இழப்பு அல்லது  உணவுக்குழாய் தசை தளராமை என்று கூறப்படுகிறது. அதாவது திட உணவு பொருட்களை உண்ண அவர் முயற்சித்தால் உடனடியாக வாந்தியெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
இது பற்றி மஞ்சு தாராவின் தாயார் கூறும்போது, அவள் பால், டீ, தண்ணீர் மற்றும் ஜூஸ் போன்ற திரவ உணவு பொருட்களை மட்டுமே ஆகாரமாக உட்கொள்கிறார். இரண்டு வயதில் அவளுக்கு அரிசி மற்றும் பிரெட் போன்ற உணவு பொருட்களை கொடுக்க முயற்சிக்கும்  போது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து அழுவாள், உடல்நிலையும் மோசமடையும்.
முதலில் குறும்பாக அவள் இதை உண்ன மறுக்கிறாள் என்று நினைத்தேன் ஆனால் நாளைடைவில் அவளது உடல்நிலையில் பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பலவிதமான சிகிச்சைக்களை மேற்கொண்டேன்.இருப்பினும் எந்த பயனும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.
மஞ்சு தாராவுக்கு இரண்டு சகோதரர்களும் , ஐந்து சகோதரிகளும் உள்ளனர்.உடன்பிறந்த அனைவரும் நல்ல உடல்நிலையுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.