நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Friday, 16 September 2011

ஆதலால் அலறுகிறான் .... (கவிதை )


வணக்கம் நண்பர்களே ......  எங்கோ படித்த கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது ..........  அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் பிடித்திருந்தால் ...  கருத்துக்களை தெரிவியுங்கள் .............
கூச்சத்தில் புதருக்குள் ஒளிந்து கிடக்கின்ற 

குழிமுயல் அவன் 

நீ அள்ளி அணைத்துக்கொள் 
பெருமழையில் நனைந்து நடுங்கும் 
சிறு ஆடு அவன் 
உன் விரல்களால் வெயில் போர்த்து
கனவு வாகனங்கள் மிகுந்த சாலையில் 
நினைவு தப்பிய பூனை அவன் 
உன் ஒளிபாயும் கண்களால் அவனுக்கு வழிகாட்டு 
அருகாமை வீடுகளில் கறிச்சோறு ஞாயிறுகளில் 
தனியே பசித்திருக்கும் நாய்க்குட்டி அவன் 
ஒரு கவளம் அன்பெடுத்து ஊட்டு 
இல்லையென்றால் ...
ஒரு சிங்கமென அவன் குகைக்குள் வா !
இரையாகப்போட   உள்ளங்கையில் 
இதயம் சுமந்து காத்திருக்கிறான் 
பாவிமகன் ...