நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 1 February 2012

கோச்சடையான் படப்பிடிப்பு துவக்கம் ........

ரஜினி நடிக்கும் `கோச்சடையான்' படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இப்படத்துக்கான ரஜினி கெட்டப்பை போட்டோ எடுக்கும் சூட்டிங் சென்னையில் நடந்தது. இதற்காக ரஜினி மீசை, தாடியை எடுத்து மேக்கப் போட்டார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமாகி நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி மேக்கப் போட்டதால் அதை ஒரு சடங்காக குடும்பத்தினர் நடத்தினர்.

புரோகிதர்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. ரஜினிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. திருஷ்டி தேங்காயும் உடைத்தனர். இதுகுறித்து ரஜினி மனைவி லதா டுவிட்டரில் கூறும்போது, எனது கணவர் ரஜினி கோச்சடையான் படத்துக்கு மேக்கப் போட்டதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

பூஜை செய்து ஆரத்தி எடுத்து தேங்காய் உடைக்கப்பட்டது. அது  பெரிய நிகழ்வாக இருந்தது என்றார். கோச்சடையான் படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். நாயகி வேடத்துக்கு கத்ரினா கயூப்புடன் பேசி வருகின்றனர். சரத்குமார், ஆதி, நாசர், வடிவேலு, சினேகா, ஷோபனா என பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது.