நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Monday, 6 February 2012

சச்சின் டெண்டுல்கருக்காக,'கொலவெறி' குழுவினர் உருவாக்கிய பாடல்

சச்சின் டெண்டுல்கருக்காக, தனுஷ்- அனிருத் 'கொலவெறி' குழுவினர் உருவாக்கிய பாடல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட முன்னரே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டெண்டுல்கர் நடிக்கும் பூஸ்ட் நிறுவன விளம்பர படத்தில் இப்பாடல் இடம்பெறுவதாகவும், குறித்த நிறுவனத்தினர் இப்படத்திற்கான பாடலை உருவாக்கி தரவேண்டுமென தனுஷிடம் கேட்டதும், சச்சினின் தீவிர ரசிகரான தனுஷ் உடனடியாக சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

'கொலவெறி' புகழ் அனிருத்தின் இசையில் இப்பாடலையும் சச்சினுக்காக எழுதியிருக்கிறார் தனுஷ். பாடலில் தனுஷுடன், அனிருத், அனுஷ்கா ஆகியோரும் தோன்றி ஆட்டம் போட்டிருகிறார்கள். ஹைதராபாத்தின் ராமோஜிராவ் நகரில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சச்சினின் 100 வது சதத்தை உலகமே எதிர்பார்த்து களைத்திருக்கும் இந்நிலையில் இப்பாடல் கொடுக்கும் பூஸ்ட்டிலாவது, அச்சாதனை பூர்த்தியாகட்டும் என்கிறார்கள் சச்சின், தனுஷ் ரசிகர்கள்.
தோனி எனும் பெயரில், தோனியை ரோல்மடலாக கொண்டு சாதிக்க துடிக்கும் ஒரு சிறுவனின் கதையை திரைப்படமாக உருவாக்கி அண்மையில் அதற்கான ஆடியோவைவும் வெளியிட்டு வைத்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். இப்போது சச்சினின் பெயரில் Sachin Song எனும் இப் பாடலை கையில் எடுத்துள்ளார் தனுஷ்.
உலக சினிமாக்குள் தம்மை இணைத்துக்கொள்ளும் முயற்சிகளே இவை என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
விரையில் யூடியூப் மூலமாக வெளியிடவுள்ள சச்சின் அந்தெம் பாடலின் மேக்கிங் வீடியோ  (இவ்வீடியோவுக்கு வந்த ஒரு சுவாரஷ்யமாக பின்னூட்டம் ஒன்று : 'Good time for Dhanush, Bad time for Sachin!!')