நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Sunday, 19 February 2012

திரிகோனாசனா


 
செய்முறை......
 
சம தரையில் நேராக நின்று முடிந்தவரை கால்களை அகற்றி  வைத்துக் கொள்ளவும். பின்னர்  மூச்சை உள்ளே இழுத்து இரு கைகளையும் இருபுறமும் தோள்   அளவிற்கு உயர்த்தவும். மூச்சை வெளியே விட்டு இடது புற காலை இடப்புற கையால்  உடம்பை பக்கவாட்டில் வளைந்து தொடவும். மூச்சை உள்ளே இழுத்து நெஞ்சை பெரிதாக்கி மேலே ஒரு கையும் கீழே ஒரு கையும் ஒரே கோட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
 
மூச்சை வெளியே விட்டு முகத்தை மேலே திருப்பி மேலே  உயர்த்தியுள்ள கையின் உள்ளங்க்கையைப்  பார்க்கவும். பின் தளர்ந்து 2 ஆம் நிலைக்கு வந்து முதல் நிலையை அடையவும். பின் ஒரு சில விநாடிகள் விட்டு விட்டு மறுபுறம் இதே நிலைகளை   முயற்சிக்கவும். இவ்வாறு 3 முறை செய்யவும்.
 
பயன்கள்....
 
இந்த ஆசனமும் கால்களுக்கும், பின்புறத்திற்கும் வலுவூட்டக் கூடியவை இது உடலின் வளை திறனை அதிகப்படுத்தக் கூடியது. வயிற்று உபாதைகளை சீர்படுத்தக் கூடியது. வயிற்றின் செயல்பாட்டையும் ஜீரணசக்தியையும் உந்தக் கூடியது. இது மார்பகங்களை விரிவுபடுத்தக் கூடிய ஆசனமாகும்..