நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Monday, 20 February 2012

பென்சுக்கு போட்டியாக ஹேட்ச்பேக் காரை களமிறக்கும் வால்வோ

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் புத்தம் புது பிரிமியம் ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக வால்வோ தெரிவித்துள்ளது.

கார் மார்க்கெட்டில் அதிதீவிரமான திட்டங்களுடன் களமிறங்கியுள்ளது. குறைந்த திறன் கொண்ட டி3 எஞ்சின்களுடன் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள அந்த நிறுவனம் முந்தைய மாடல்களை விட ரூ.3.5 லட்சம் வரை விலையை குறைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இதன்மூலம், வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது வால்வோ. இந்த நிலையில், பிரிமியம் ஹேட்ச்பேக் காரை விரைவில் அறிமுகப்படுத்த பென்ஸ் திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு போட்டியாக சூப்பர் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை வால்வோவும் அறிமுகப்படுத்த உள்ளது.

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அந்த புதிய கார் வர இருக்கிறது. இதனிடையே, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ள வி40 என்ற புத்தம் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரைத்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வால்வோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகிய வடிவமைப்பில், அசத்தும் வசதிகளுடன் வரும் அந்த புதிய வால்வோ ஹேட்ச்பேக் கார் ரூ.20 முதல் ரூ.22 லட்சம் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.