நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 22 February 2012

திரிஷாவுக்கு வயதாகி விட்டதால் இளம் ஹீரோக்கள் ஜோடி சேர மறுப்பு

நடிகை திரிஷாவுக்கு வயதாகி விட்டதால் இளம் ஹீரோக்கள் ஜோடி சேர மறுப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன இதற்கு பதில் அளித்து ஐதராபாத்தில் திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

 நான் 50 வயதை தாண்டிய கமல், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றோருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதை வைத்து என்னை வயதான நடிகையாக பார்க்க கூடாது. அஜீத், பவன்கல்யாண், ரவிதேஜா போன்ற 40 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் விஜய், பிரபாஸ், மகேஷ்பாபு போன்ற 30 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் நடித்து உள்ளேன். 

அத்துடன் சிம்பு, ஜூனியர் என்.டி.ஆர். போன்ற 20 வயதுக்கு மேற்பட்ட இளம் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளேன். இளம் வயதினருடன் தான் நடிப்பேன். மூத்தவர்களுடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது இல்லை. அப்படி நிபந்தனை விதித்து இருந்தால் நல்ல படங்களை இழந்து இருப்பேன். சினிமாவிலும் நீடித்து இருக்க முடியாது.

 சீனியர்களுடன் நடித்த நடிகைகளை வயதான நடிகையாக பார்ப்பது பிரமைதான். சினிமாவில் திறமைதான் முக்கியம் இந்தியில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்க கரீனாகபூர் வரை எல்லா நடிகைகளும் விரும்புகின்றனர். அது போன்ற கலாசாரம் தமிழ் திரையுலகிலும் வர வேண்டும்.