நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Sunday, 19 February 2012

மூளை நரம்பு கோளாறால் உண்டாகும் ஆட்டிசம் நோயை குணமாக்க வழிகள்

ஆட்டிசம் ஒரு நோய் அல்ல, மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு என்று கூறலாம். மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறை பாடு. தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கி கொண்டு அதில் மூழ்கி கிடப்பார்கள்.
 
ஸ்பெக்ட்ரல் டிஸ்ஆர்டர் என்று ஆங்கிலத்தில் இந்த நோய் அழைக்கப்படுகிறது. இந்த நோய் பாதித்த குழந்தைகள் மற்றவர்களுடன் உறவைப் பேண முடியாது, மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுதல் போன்ற சாதாரண விஷயங்களில் கூட ஈடுபட முடியாது. பொதுவாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பேச்சு வருவதில் சிக்கல் ஏற்படும். சிலருக்கு நல்ல முறையில் பேச்சு வருவதும் உண்டு. ஆட்டிசம் பாதித்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று எந்த ஒரு வரையறையும் இருப்பதில்லை.
 
மூளை வளர்ச்சி குறைபாடு........
 
ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய். மற்ற குழந்தைகளைப் போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது.
 
இதனால் அவர்களால் மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும்.  இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறி விடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டு பிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்து விடலாம்.
 
எதனால், ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.  குறைந்த எடையுடன் அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 5 சதவீத குழந்தைகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
 
இயல்பான எடை யுடன் பிறக்கும் குழந்தைகளில் 1 சதவீத குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என, சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்த எடையுடனோ அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை பரிசோதிப்பது அவசியம் என்கிறார் பிரபல மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணர்  டாக்டர் சைமன் ஹெர்க்குலிஸ்.
 
அறிகுறிகள்......
 
1.  குழந்தை  யார் முகத்தையும் பார்க்காதிருத்தல்,
2. தனியாக இருப்பதை விரும்புதல்,
3. காது கோளாறு போல் இருத்தல்,
4. காரணமின்றி மற்றவர்களை தாக்குதல்,
5. அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்,
6. கை, கால்களை வேகமாக அசைத்து வித்தியாசமாக சத்தம் போடுதல்,
7. தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்,
8. பேச்சுத் திறன் குறைதல்,
9. விரல் சூப்புதல், நகம் கடித்தல்,
10. பதட்டநிலை,
11. அடம் பிடித்தல்.
 
மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல் இக்குழந்தைகளின் பார்வை, கூரையையே வெறித்து பார்ப்பது போல், ஒரே இடத்தில் நிலைத்திருக்கும். நாம் ஒருவரிடம் பேசும் போது கண்ணைப் பார்த்து பேசுவது போல், ஆட்டிசம் குழந்தைகள் கண்ணைப் பார்த்து பேசாது. கைகளை உதறிக் கொண்டே இருக்கும்.
 
மற்ற குழந்தைகளை நாம் கட்டி அணைப்பது போல், இக்குழந்தைகளை கட்டிப் பிடித்தால் கோபம் வரும். சில குழந்தைகள் மூர்க்கமாக நடந்து கொள்வர். தண்ணீர் வேண்டும் என்றால் வாய் திறந்து கேட்காமல், சைகை மூலம் கேட்பார்கள். சில குழந்தைகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
 
பாத்ரூம் போக வேண்டும் என்பார்கள். சில குழந்தைகள் தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பார்கள். வேறு சில குழந்தைகள்   திடீரென  சிரிக்கும், சில குழந்தை கள் திடீரென அழும். எதற்காக சிரிக்கிறார்கள். எதற்காக அழுகிறார்கள் என தெரியாது. வலி, சிறிய அளவில் இருந்தாலும் `ஓ' என அலறும். சில குழந்தைகள் கடும்  வலி இருந்தாலும் வலியை உணர்வதில்லை.
 
பெற்றோருக்கு விடா முயற்சி அவசியம்........
 
முயன்றால் முடியும் ஏன், எதற்கு, எப்படி என புரியாத நோய்களில் ஆட்டிசமும் ஒன்று. இதை நோய் என சொல்வது சரியாக இருக்காது. இது ஒரு குறைபாடு, மூளையில் ஏற்படும் குறைபாடு . குழந்தை   இப்படி பிறந்து    விட்டதே என   வேதனைப்பட்டு பல பெற்றோர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வதோடு, குழந்தையின் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகின்றனர். அதற்கு பதிலாக, விடா முயற்சியுடன் போராடினால் வெற்றி பெற முடியும்.
 
செய்ய வேண்டியது என்ன?
 
நம் வாழ்வின் அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான், ஆட்டிசம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் முதல் சிகிச்சை. ஆம் இவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி போன்ற பயிற்சி தான் சிகிச்சை.  ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பிரச்சினை இருக்காது.
 
எனவே நம் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு உள்ளது என முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எது வேண்டும், எது வேண்டாம் என சொல்ல தெரியாது. உதாரணமாக, சிறுநீர் கழிக்க வேண்டும் என, உணர்ந்து சொல்ல தெரியாது. ஒவ்வொரு குழந்தைகளுக்கும், ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும் என்பதால், எல்லா குழந்தைகளுக்கும் பொதுவான பயிற்சி முறைகளை வகுக்க முடியாது.
 
ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும். அவர்களது செயல்களால் கோபப்படா மல், அவர்களை புரிந்து கொண்டு, பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும். இக்குழந்தைகள் வேண்டுமென்றே இதை செய்வதாக கருதி, மிரட்டக் கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும், எக்காரணத்தை கொண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது.
 
இவர்களுக்கு முதலில் கல்வி என்பது, அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, அவர்கள் அதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பர். மற்ற குழந்தைகளை போல் இவர்களால் பாடங்களை படிக்க முடியாது. எனவே இவர்களை சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம்.
 
அதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொடுப்பது எளிதாக இருக்கும். இக் குழந்தைகள் சில அற்புதத் திறமைகளை கொண்டிருப்பர். அதைத் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். வண்ணம் தீட்டுவது, பேனா, பென்சில் கொடுத்து ஏதாவது கிறுக்க செய்வது என, பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களை அன்றாட வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும்.
 
ஆண் குழந்தைகள் அதிகம் பாதிப்பு.........
 
பெண்களை விட ஆண்களையே அதிகமாக ஆட்டிசம் நோய் தாக்குவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், ஆட்டிசம் பற்றிய எந்த விவரமும் பொதுமக்களை இன்றுவரை அதிகளவில் சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
 
நரம்பியல் சிகிச்சை பலன் தரும்..........
 
ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கு தாய், தந்தைய ரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துக்களின் குறைபாடு, `சென்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் `ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. 
 
ஆட்டிசம் இருப்பது தெரிய வந்தால், அதற்கு உரிய நரம்பியல் மற்றும் மனநல சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்து கொள்ள உதவலாம். 
 
இதன் மூலம் அவர்களையும் இயல்பான வாழ்க்கை வாழ வழி செய்யலாம் என்கிறார் சென்னை கீழ்ப்பாக்கம் நியூஹோப் மருத்துவமனையைச் சேர்ந்த மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்க்குலிஸ்.
 
மருந்து.... 
 
இந்த நோய்க்குநரம்பியல்  மருத்துவ சிகிச்சை அவசியம்.  மூர்க்கத்தனமாக செயல்படும் குழந்தைகளை அமைதிப்படுத்த மனநல மருத்துவர்களால் சில மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.